Published:Updated:

ஒடிசா முதல்வரைச் சந்தித்த சந்திரசேகர ராவ்..! - உருவாகிறதா மூன்றாவது அணி..?

ஒடிசா முதல்வரைச் சந்தித்த சந்திரசேகர ராவ்..! - உருவாகிறதா மூன்றாவது அணி..?
ஒடிசா முதல்வரைச் சந்தித்த சந்திரசேகர ராவ்..! - உருவாகிறதா மூன்றாவது அணி..?

டந்து முடிந்த ஐந்து மாநிலத் தேர்தல்களின் முடிவுகள், தொடர் தோல்விகளைச் சந்தித்து வந்த காங்கிரஸ் கட்சிக்குக் கிடைத்துள்ள வெற்றிகள், 2019-ம் ஆண்டு வர உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன. மதச்சார்பின்மைக்கு எதிராகச் செயல்படுகின்ற மத்தியில் உள்ள ஆட்சியை நீக்க எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று திரள வேண்டும் என தி.மு.க உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகளும் சொல்லி வந்த நிலையில், கடந்த டிசம்பர் 10-ம் தேதி காங்கிரஸ் கட்சியின் தலைமையில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது.

ஒடிசா முதல்வரைச் சந்தித்த சந்திரசேகர ராவ்..! - உருவாகிறதா மூன்றாவது அணி..?

கடந்த டிசம்பர் 16-ம் தேதி சென்னை அறிவாலயத்தில் நடந்த கருணாநிதியின் சிலைத் திறப்பு நிகழ்வில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கருணாநிதியின் சிலையைத் திறந்து வைத்தார். அந்த நிகழ்வில் பேசிய ஸ்டாலின், ராகுல்காந்தியை அடுத்த பிரதமாக்க வேண்டும் என்றார். இந்தக் கருத்தை காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்ற மம்தா பானர்ஜி எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

ஒடிசா முதல்வரைச் சந்தித்த சந்திரசேகர ராவ்..! - உருவாகிறதா மூன்றாவது அணி..?

இந்த நிலையில், தெலங்கானாவின் முதல்வராக மீண்டும் பொறுப்பேற்றுள்ள சந்திரசேகர ராவ், இந்திய அளவில் காங்கிரஸ், பி.ஜே.பி இல்லாத மூன்றாம் அணியை அமைக்க ஏற்கெனவே ஸ்டாலினோடு பேச்சுவார்த்தைகள் நடத்தி வந்த நிலையில், சிலைத் திறப்பின்போது  ஸ்டாலினுடைய பேச்சு காங்கிரஸ் உடனான கூட்டணியை உறுதி செய்துள்ளது. இந்த நிலையில், மூன்றாம் அணியைக் கட்டமைக்க நான்கு நாள்கள் பயணம் மேற்கொண்டுள்ளார் சந்திரசேகர ராவ். இது தொடர்பாக ஒடிசாவின் முதல்வர் நவீன் பட்நாயக்கை சந்தித்து ஆதரவு கோரியுள்ளார். அதைத் தொடர்ந்து கோனார்க் ஜெகன்னாத் கோயிலில் தரிசனம் மேற்கொண்ட அவர், பின்  மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்து மூன்றாம் அணி அமைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளார்.

சமீபத்தில் சந்திரசேகர ராவின் மகன் கே.டி.ராமராவுக்கு தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி  கட்சியின் செயல் தலைவர் பதவி வழங்கப்பட்டது. சந்திரசேகர ராவ் தேசிய அரசியலில் முழு கவனம் செலுத்த உள்ளதால், மாநில அளவில் கட்சியின் செயல்பாடுகளை கவனித்துக்கொள்வதற்காக செயல் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்பட்டது.