பிரீமியம் ஸ்டோரி
ஆஹான்

P Kathir Velu
எடப்பாடியாரிடமிருந்து பள்ளிக்கூடப் பிள்ளைகள் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான ராஜதந்திரம், ‘கற்பனையான கேள்விக்குப் பதில் சொல்லமுடியாது!’

எல்லாப் புள்ளைங்களும் பரீட்சையில எழுதிட்டு வரட்டும். அப்புறம் இருக்குது கூத்து!

Muthu Krishnan
வர்மாவுக்கு பதில் நாகேஸ்வர ராவ் பதவியேற்றுள்ளார்.
நாகேஸ்வர ராவைப் பற்றி விசாரிக்கச் சொல்லி லஞ்ச ஒழிப்புத் துறையை சி.பி.ஐ கேட்டது. ஆனால், லஞ்ச ஒழிப்புத் துறை அதை மறுத்துவிட்டது.
அஸ்தானா மீதான விசாரணையை அலோக் வர்மா நடத்தினார்.
அஸ்தானாவை நியமித்தது சரியில்லை என்றது சி.பி.ஐ. ஆனால், அதை லஞ்ச ஒழிப்புத் துறை அனுமதித்தது.
ரஃபேல் ஆவணங்களைச் சரிபார்க்கச் சொல்லி சி.பி.ஐ-க்கு உத்தரவிடுகிறது உச்ச நீதிமன்றம். வர்மா அந்தப் பணியில் ஈடுபடுகிறார்.
இப்போது வர்மா மீது விசாரணைக்கு உத்தரவிடுகிறது லஞ்ச ஒழிப்புத் துறை.
# உள்வட்டம், வெளிவட்டம் இப்ப புரியும் என்று நினைக்கிறேன்.

Abdul Hameed Sheik Mohamed
மிமிக்ரி ஆர்டிஸ்ட்ங்க தமிழ்நாட்டில் மொத்தம் எத்தனை பேர்யா இருக்கீங்க? ஒரே அராஜகமா இருக்கு. அத்தனை பேரையும் தேச விரோதச் சட்டத்தில் கைது பண்ணணும். என்னது, சின்னப்புள்ளத்தனமா இருக்கு!

Raajaa Chandrasekar
வசனங்களால் வாழ்கிறார்கள்.

ஆஹான்

பொம்மையா முருகன்

மீடியாஸ்: என்ன.., இவ்வளவு ரிஃப்ளக்டர் கண்ணாடிய வாங்கி வச்சிருக்கீங்க?
செல்லூரார்: சீனா வானத்துல ரூ.4,000 கோடி செலவுல செயற்கை நிலாக்களை உருவாக்குது.
‘‘சரி... அதனால?’’
‘‘அந்த நிலாக்கள் அவங்க ஊர்கள்ல இரவைப் பகலாக்குது. ரூ.4,000 கோடி செலவு பண்ணி இரவைப் பகலாக்க நாம ஒண்ணும் முட்டாள்கள் இல்ல. அதனால...’’
‘‘அதனால?’’
‘‘இந்த ரிஃப்ளக்டர் கண்ணாடியையெல்லாம் திருப்பரங்குன்றம், அழகர்மலை, பசுமலையில நிறுத்தி, சீனாவோட செயற்கை நிலாக்கள் மேல ஃபோகஸ் பண்ணி அந்த வெளிச்சத்தை அப்படியே மொத்த மதுரைக்கும் திருப்புறோம். உறங்கா நகரம் மதுரைல இனி இரவே இல்லைங்கிற நிலைய உருவாக்குறோம்!’’

@ dinesh_venu
30, 40 வருடங்களாக ரசிகர் மன்றத்தில் இருந்தது மட்டுமே அரசியலில் ஈடுபடுவதற்கு முழுத் தகுதி ஆகிவிட முடியாது - ரஜினி

# 30, 40 வருடங்கள் சினிமாவில் நடித்தது மட்டுமே அரசியல் தலைவனாகத் தகுதியாகி விடுமா என்ற ஓர் அப்பாவி ரசிகனின் கேள்விக்குத்தான் பதில் தேடிக்கொண்டிருக்கிறேன்!

@Thaadikkaran
படங்களின் ஆடியோ ரிலீஸைவிட, அரசியல்வாதிகளின் ஆடியோ ரிலீஸை அதிகம் எதிர்பார்க்க வைத்துவிட்டது இன்றைய அரசியல் களம்!

@ paviraksha
சி.பி.ஐ Vs சி.பி.ஐ என்பதை இரண்டு ஆபீஸர்களுக்குள் நடக்கும் சண்டை என்று சில்லறைத்தனமாக எழுதிக்கொண்டிருக்கிறார்கள். இது, ஜனநாயகத்தில் பொறுப்புக்கூறலுக்கு நமக்கிருக்கும் முக்கியமான நிறுவனம் ஒன்றின்மீது பா.ஜ.க அரசு தொடுத்திருக்கும் கொடுமையான போர்.

ஆஹான்

@Ramke_twits
ராட்சசன் படம் பார்த்து படக்குழுவைப் பாராட்டிய ஸ்டாலின்!

# நல்லவேளை, படம் நல்லா இருந்துச்சு. இல்லேன்னா, ‘இதற்கு எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்று பதவி விலகணும்’னு சொன்னாலும் சொல்லியிருப்பார்.

@Thaadikkaran

சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜரான ஹெச்.ராஜா நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.

# அப்போ ஃபாரின்ல டப்பிங் பண்ணுனதுன்னு சொன்னது பொய்யா சேகரண்ணே?

@drramadoss
18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கில் தீர்ப்பு வந்தாலும் தமிழக அரசு கவிழாது: ஓ.பன்னீர்செல்வம்
# தஞ்சாவூர் தலையாட்டிப் பொம்மைகள் எந்தக் காலத்தில் கவிழ்ந்திருக்கின்றன?

@Suyanalavaathi

கழுவுற மீனில் நழுவுற மீன் ரஜினி - அமைச்சர் ஜெயக்குமார் தாக்கு
# மீன்வளத் துறை அமைச்சராம். ஐ மீன் வாட் யூ மீன்!

@mufthimohamed1
இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி - உச்ச நீதிமன்றம்

# மீதி இருக்குற நேரத்த சரக்கடிச்சு அரசாங்கத்தைக் காப்பாத்துங்க - தமிழக அரசு

@sric_twitz
நவம்பர் 15-க்குள் திரையரங்குகளுக்கு சி.சி.டி.வி பொருத்தப்படும் - செய்தி

# அப்படியே ஒவ்வோர் அமைச்சர் ஆபீஸ்லயும் சி.சி.டி.வி பொருத்துனா நல்லா இருக்கும்!

@kt_pugaz
நாடு முழுவதும் சாலைகளை அமைத்துவிட்டு, உணவுக்கு என்ன செய்யப்போகிறீர்கள்? - நீதிமன்றம் கேள்வி

# புதுசு புதுசா சாலைகளை அமைத்தால்தான் அங்க எல்லாம் டாஸ்மாக் கடைகளைத் திறக்கலாம்... இதுகூட தெரியாதுங்களா?

@HAJAMYDEENNKS
ஓர் அமைச்சர்மீது குட்கா ஊழல் குற்றச்சாட்டு, இன்னோர் அமைச்சர்‌மீது பாலியல் குற்றச்சாட்டு, துணை முதலமைச்சர்மீது சொத்துக்குவிப்பு வழக்கு, முதலமைச்சர்மீது டெண்டர் முறைகேடு ஊழல் குற்றச்சாட்டு.

# யார் சொன்னது தமிழ்நாட்டில் அரசாங்கம் இயங்கவில்லை என்று? 

@HAJAMYDEENNKS 

20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்கத் தயார் - எடப்பாடி

# வரும், ஆனா வராது. அப்படித்தானே? 

@kumarfaculty
பதவி சுகத்துக்கும், பணம் சம்பாதிக்கும் எண்ணத்துடனும் வருபவர்களைப் பக்கத்தில் சேர்க்கமாட்டேன் - ரஜினி பரபரப்பு அறிக்கை

# ரெடி, இன்னொரு டேக் போகலாம். 

@ajay_aswa
அ.தி.மு.க அரசை எந்தச் சக்தியாலும் எதுவும் செய்ய முடியாது - ஆர்.பி.உதயகுமார்

# இன்கம்டேக்ஸ் ரெய்டாலயுமா தலைவரே? 

@gips_twitz

முதன்முறையாக பெட்ரோல் விலையைத் தாண்டியது டீசல் விலை - செய்தி

அது அப்படி இல்லைங்க, டீசல் விலையைவிட குறைந்தது பெட்ரோல் விலை - தமிழிசை 

@ajmalnks 
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பா.ஜ.க-வுக்கு பிரதமர் நரேந்திர மோடி 1,000 ரூபாய் நன்கொடை வழங்கினார் - செய்தி

# ஏழைத்தாயின் மகனிடமே வசூல் செய்த மனசாட்சியற்ற பா.ஜ.க. 

@Kozhiyaar
தமிழக அரசியல் பயணம்... கூவத்தூரிலிருந்து குற்றாலம்வரை! 
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு