Published:Updated:

‘தீர்வு தரமுடியவில்லையெனில் பிரச்னை செய்யாமல் இருங்கள்’ - யாரை சொல்கிறார் கட்கரி?

‘தீர்வு தரமுடியவில்லையெனில் பிரச்னை செய்யாமல் இருங்கள்’ - யாரை சொல்கிறார் கட்கரி?
‘தீர்வு தரமுடியவில்லையெனில் பிரச்னை செய்யாமல் இருங்கள்’ - யாரை சொல்கிறார் கட்கரி?

கிப்புத்தன்மைதான் இந்தியாவின் மிகப் பெரிய சொத்து என்றும், மறைந்த முன்னாள் பிரதமர் நேருவை தனக்குப் பிடிக்கும் என்றும் மத்திய அமைச்சரும்  பா.ஜனதா மூத்த தலைவருமான நிதின் கட்கரி கூறியுள்ளது, அக்கட்சி வட்டாரத்தில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

‘தீர்வு தரமுடியவில்லையெனில் பிரச்னை செய்யாமல் இருங்கள்’ - யாரை சொல்கிறார் கட்கரி?

 சமீபத்தில் நடந்துமுடிந்த ஐந்து மாநிலத் தேர்தலில் பா.ஜனதாவுக்கு ஏற்பட்ட தோல்விகுறித்து கருத்து தெரிவித்திருந்த நிதின் கட்கரி,           " வெற்றிக்கு உரிமை தேடி பலர் வருகின்றனர். ஆனால், தோல்விக்கு உரிமை தேட யாரும் வருவதில்லை" என்று பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவை மறைமுகமாக விமர்சித்திருந்தார். தோல்விகளுக்குப் பொறுப்பேற்கும் வரை தலைவர்கள் சார்ந்திருக்கும் அமைப்புகளுக்கு அவர்கள் உண்மையுடன் இருப்பதாக ஏற்கமுடியாது என்றும் அவர் காட்டமாகக் கூறியிருந்தார். 

இது, கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில்  மோடியைப் பிரதமர் வேட்பாளராக நிறுத்துவதுகுறித்து ஆர்.எஸ்.எஸ் பரிசீலித்துவருவதாகச் செய்தி வெளியானது. இந்த நிலையில், இதற்கு வலு சேர்க்கும் விதமாக, ''வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜனதா வெற்றிபெற வேண்டுமானால், தற்போதைய பிரதமர் நரேந்திர மோடிக்குப் பதிலாக கட்சியின் மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான நிதின் கட்கரியை முன்னிறுத்துங்கள்" என ஆர்.எஸ்.எஸ் தலைமைக்கு மகாராஷ்ட்ரா அரசின் வேளாண் அமைப்பு ஒன்றின் தலைவர் கிஷோர் திவாரி என்பவர் எழுதிய கடிதம், பா.ஜ.க-வினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில், டெல்லியில் நடைபெற்ற புலனாய்வுப் பிரிவு கருத்தரங்கில் பேசிய மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சரான நிதின் கட்கரி, " சகிப்புத்தன்மைதான் இந்தியாவின் மிகப் பெரிய சொத்து' என்ற முன்னாள் பிரதமர் நேருவின் பேச்சுகள் எனக்கு மிகவும் பிடிக்கும்.  எனக்கு யாரோ ஒருவர் தீங்கு செய்தால், பதிலுக்கு நான் அவருக்குத் தீங்கு செய்வது சரியாகாது. மன்னிக்க நான் தயாராக இருக்கிறேன்.  தீர்வு கொடுக்க முடியாத ஒருவர், குறைந்தபட்சம் பிரச்னைகளை உருவாக்காமலாவது இருக்க வேண்டும்" என்று கூறினார். 

எந்தப் பிரச்னை அல்லது யாரை மனதில்கொண்டு கட்கரி இவ்வாறு பேசினார் என்பது வெளிப்படையாகத் தெரியவில்லை என்றாலும்,  சமீபத்தில் பிரபல பாலிவுட் நடிகர் நஸ்ருதீன் ஷா, இந்தியாவில் வன்முறையின்போது கொலை செய்யப்படும் போலீஸ்காரரைவிட, பசுவதைக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாகக் கூறியிருந்தார். மேலும், இது போன்ற சமுதாயத்தில் தனது பிள்ளைகளுடன் வசிக்க தயக்கமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

‘தீர்வு தரமுடியவில்லையெனில் பிரச்னை செய்யாமல் இருங்கள்’ - யாரை சொல்கிறார் கட்கரி?

"  சகிப்புத்தன்மையில்லாத சமுதாயத்தில் குடும்பத்துடன் வசிக்க தயக்கமாக உள்ளது. கும்பல் கலாசாரத்திற்கு நடுவே நாளை என் குழந்தைகளின் எதிர்காலம் எப்படியிருக்குமோ என்ற கவலை இப்போதே என்னை வாட்டத் தொடங்கியுள்ளது. நாளை ஒரு கலவரக் கும்பல் எனது குழந்தைகளைச் சூழ்ந்துகொண்டு, 'நீ முஸ்லிமா அல்லது இந்துவா..?' என்று கேட்டால், அவர்களிடம் பதில் இல்லை. இந்தச் சூழ்நிலை மாறும் என்ற நம்பிக்கையும் எனக்கில்லை''  என்றும்  கூறியிருந்தார். எனவே, ஷாவின் இந்தப் பேச்சை மனதில்கொண்டே கட்கரி இவ்வாறு பேசியிருக்கலாம் எனத் தெரிகிறது. 

 ஷாவின் மேற்கூறிய கருத்துக்கு பா.ஜனதா உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், சகிப்புத்தன்மை வேண்டும் என கட்கரி பேசியிருப்பது பா.ஜனதாவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.