Published:Updated:

அமளிக்கு இடையே உணவு பாதுகாப்பு மசோதா தாக்கல்!

அமளிக்கு இடையே உணவு பாதுகாப்பு மசோதா தாக்கல்!
அமளிக்கு இடையே உணவு பாதுகாப்பு மசோதா தாக்கல்!
அமளிக்கு இடையே உணவு பாதுகாப்பு மசோதா தாக்கல்!

புதுடெல்லி: எதிர்க்கட்சிகளின் கடும் முழக்கத்துக்கு இடையே மக்களவையில் தேசிய உணவு பாதுகாப்பு மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

மக்களவை இன்று காலை கூடியதும் நிலக்கரி சுரங்க ஊழல் குறித்து பா.ஜ.க உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கை பிற்பகல் 2 மணி ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் அவை மீண்டும் கூடியதும், பாஜக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இருந்தாலும், தேசிய உணவு பாதுகாப்பு மசோதாவை உணவுத்துறை இணையமைச்சர் கே.வி.தாமஸ் தாக்கல் செய்தார்.

##~~##
இதைத் தொடர்ந்து, மசோதாவின் நோக்கம் குறித்து பேசிய அமைச்சர் தாமஸ்,  மக்களுக்கு உணவுக்கு உத்தரவாதம் தரும் வரலாற்று சிறப்பு மிக்க மசோதா  என்றார்.
இந்த மசோதாவை  வரவேற்று காங்கிரஸ் உறுப்பினர் சஞ்சய் நிருபம், தேசியவாத காங்கிரஸ் கட்சி உறுப்பினர் சஞ்சீவ் கணேஷ் நாயக் ஆகியோர் பேசினர்.