Published:Updated:

அம்பலமும் ஆழமும்: 4 நிமிட வாசிப்பில் ஜூ.வி-யின் 8 விஷயங்கள்! 

அம்பலமும் ஆழமும்: 4 நிமிட வாசிப்பில் ஜூ.வி-யின் 8 விஷயங்கள்! 
அம்பலமும் ஆழமும்: 4 நிமிட வாசிப்பில் ஜூ.வி-யின் 8 விஷயங்கள்! 

இந்த இதழ் ஜூனியர் விகடன்:  https://bit.ly/2EO43M3

அம்பலமும் ஆழமும்: 4 நிமிட வாசிப்பில் ஜூ.வி-யின் 8 விஷயங்கள்! 

"ஏற்கெனவே அ.தி.மு.க-வில் கொங்கு மண்டலத்தின் ஆதிக்கம் அதிகரித்துவிட்டது என்று பிற சமூக அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினார்கள் அல்லவா... அதன்பிறகும் எந்த மாற்றமும் இல்லையாம். குறிப்பாக, கட்சிக்குள் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு முக்கியத்துவம் அதிகரிக்கப்பட்டுவருகிறது. அ.தி.மு.க-வில் வன்னியர் சமூகத்தின் ஒட்டுமொத்தப் பிரதிநிதியாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியின் முனுசாமி இருந்தார். இப்போது நிலைமை தலைகீழ். அவரை டம்மி ஆக்கும் வகையில் எடப்பாடி ஆதரவு தரப்பினர் அதே சமூகத்தைச் சேர்ந்த அமைச்சர் சி.வி.சண்முகத்தைக் கொம்புசீவி விடுகிறார்களாம். கடலூரைச் சேர்ந்த அமைச்சர் சம்பத்திடம் இருந்த சுரங்கத் துறையைப் பறித்து, சி.வி.சண்முகத்துக்குக் கொடுக்கப்பட்டதும் இதே பின்னணியில் தானாம். ஆளுங்கட்சி ஆதரவு மீடியா புதிதாக ஆரம்பிக்கப்பட்டபோது சி.வி.சண்முகத்தின் உள்வட்டத்துக்கு ரத்தினக்கம்பள மரியாதை தரப்பட்டதும்கூட இதன் தொடர்ச்சி தானாம்."

அம்பலமும் ஆழமும்: 4 நிமிட வாசிப்பில் ஜூ.வி-யின் 8 விஷயங்கள்! 

தினகரன் தரப்பிலிருந்து பத்து பேர்வரை வரத் தயாராக இருந்தும், அவர்களை 'டேக் டைவர்ஷன்' என்று சொல்லி, தி.மு.க முகாமுக்கு அனுப்பும் வேலையைச் செய்துவரும் அளவுக்கு கட்சிக்குள் சாதி அரசியல் கொளுந்துவிட்டு எரிவதை 'எரியும் சாதி அரசியல்! - ஆட்டம் காணும் அ.தி.மு.க' என விரிவாகச் சொல்கிறார் மிஸ்டர் கழுகு.

அம்பலமும் ஆழமும்: 4 நிமிட வாசிப்பில் ஜூ.வி-யின் 8 விஷயங்கள்! 

"தந்தை பெரியாரின் வழியில் தேர்தலில் பங்கெடுக்காத இயக்கங்கள் திரண்டுள்ளோம். இனி, தமிழகத்தில் மதவெறி, சாதிவெறி அரசியல் தலைதூக்கினால் பெரியார் படை அதைத் தடுத்து நிறுத்தும். எட்டுவழிச் சாலை, மீத்தேன் உள்ளிட்ட திட்டங்கள் மூலம் நமது சொத்துகளைப் பறித்து கார்ப்பரேட் கும்பலுக்குத் தாரைவார்ப்பதற்கு ஆட்சியாளர்கள் துடிக்கிறார்கள். இதற்கு எதிராக ஒன்றிணைவோம். இந்தக் கருஞ்சட்டைப் பேரணியின் தொடர்ச்சியாக நீலச்சட்டை, சிவப்புச் சட்டை பேரணிகளையும் நடத்த வேண்டும்..."

-  பி.ஜே.பி-க்கு எதிராக பெரியார் இயக்கங்கள் அனைத்தும் இணைந்து ஒற்றுமையை வலியுறுத்தியதன் பின்னணியுடன் களத்தில் நடந்ததைச் சொல்கிறது 'பி.ஜே.பி-யுடன் சேருவோர் இனத்துரோகிகள்! - திருச்சியில் கருஞ்சட்டை கர்ஜனை' எனும் செய்திக் கட்டுரை.

அம்பலமும் ஆழமும்: 4 நிமிட வாசிப்பில் ஜூ.வி-யின் 8 விஷயங்கள்! 

"கடந்த 11-ம் தேதி சட்டமன்ற மதிப்பீட்டுக் குழு மதுரைக்கு வந்தது. அந்தக் குழுவின் உறுப்பினர் என்ற முறையில் குழு நடவடிக்கைகளில் கலந்துகொள்ள பன்னீர்செல்வம் கிளம்பினார். ஆனால், அவரைச் செல்லவிடாமல் தடுத்து, சென்னை திருவல்லிக்கேணியில் பி.ஜே.பி ஆதரவு அமைப்பான வானவில் பண்பாட்டு மையம் நடத்திய 'ஜதி பல்லாக்கு' நிகழ்ச்சியில் இல.கணேசன், ஹெச்.ராஜா ஆகியோருடன் பன்னீரைக் கலந்துகொள்ள வைத்தார் மாஃபா..." 

பி.ஜே.பி-க்கு ஆதரவாக அமைச்சர் மாஃபா பேசிவருவதற்குப் பதிலடி தரும் வகையில் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவு அமைச்சர்களும் அவ்வப்போது மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்துவருகிறார்கள்... - இது குறித்த முழு பின்புலம் தருகிறது 'பி.ஜே.பி-க்கு ஆதரவாக செயல்படுகிறாரா அமைச்சர் மாஃபா? - அ.தி.மு.க-வில் கிளம்பும் புது புகைச்சல்..' எனும் அரசியல் செய்திக் கட்டுரை.

அம்பலமும் ஆழமும்: 4 நிமிட வாசிப்பில் ஜூ.வி-யின் 8 விஷயங்கள்! 

அப்போலோவில் அறைகளுக்குச் செலவிடப்பட்ட தொகை குறித்தும் சர்ச்சை எழுந்துள்ளது. இது குறித்துச் சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் அளித்த சாட்சியத்தில், 'பத்து அறைகள் அதிகாரிகளுக்கு ஒதுக்கப்பட்டன. வி.ஐ.பி-க்கள் சந்திக்க ஓர் அறை, சுகாதாரத் துறை அமைச்சருக்கு ஓர் அறை ஒதுக்கப்பட்டன' என்று குறிப்பிட்டிருந்தார். அதேபோல் சசிகலாவுக்கு ஓர் அறை, இளவரசிக்கு ஓர் அறை, ராஜம்மாள் உள்ளிட்டோர் தங்குவதற்கு ஓர் அறை...

- ஆறுமுகசாமி ஆணைய விசாரணையில் தெரியவந்துள்ள மேலும் பல பகீர் விவரங்களை அடுக்கிறது 'சொகுசு அறைகள் முதல்... அசைவ உணவு வரை! - மினி நட்சத்திர விடுதியான அப்போலோ' எனும் செய்திக் கட்டுரை. 

அம்பலமும் ஆழமும்: 4 நிமிட வாசிப்பில் ஜூ.வி-யின் 8 விஷயங்கள்! 

"தருண் அகர்வால் கமிட்டி நடத்திய மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் 15,000 பேர் ஆலைக்கு எதிராகக் கருத்துகளைப் பதிவு செய்துள்ளனர். ஆனால், ஆலை தரப்புக்கு மக்கள் ஆதரவு இருப்பதாகச் சொல்கிறீர்களே?

வெறும் இரண்டாயிரம் மக்களே கருத்துக் கேட்புக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். எங்கள் தரப்பின் கருத்தை அவர்கள் கேட்கவே இல்லை.

இந்த இதழ் ஜூனியர் விகடன்:  https://bit.ly/2EO43M3

மூவர் குழு அறிக்கை தொடர்பாகவும், தேசிய பசுமைத் தீர்ப்பாயத் தீர்ப்பு தொடர்பாகவும் எழும் சந்தேகங்கள் குறித்து ஸ்டெர்லைட் தலைமை செயல் அதிகாரியான ராம்நாத்திடம் ஜூ.வி. முன்வைத்த சில கேள்விகளும், அவற்றுக்கு அவர் அளித்த பதில்களும் இப்போதைக்கு மிகவும் கவனிக்கத்தக்கது. 'ஸ்டெர்லைட் அடுத்து என்ன? - சில சந்தேகங்கள்... சில பதில்கள்...' எனும் பகுதியைத் தவறவிடாதீர்கள்.

அம்பலமும் ஆழமும்: 4 நிமிட வாசிப்பில் ஜூ.வி-யின் 8 விஷயங்கள்! 

2002-ம் ஆண்டு தர்மபுரி அருகே ஊத்தங்கரையில் ஆயுதப் பயிற்சி மேற்கொண்டது தொடர்பான வழக்கில், க்யூ பிராஞ்ச் போலீஸாரால் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர் பத்மா. இவரின் கணவரான விவேக்கும் மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்தவர். 

''சிறைக்குள் வைத்து மாவோயிஸ்ட் பத்மாவைக் கொல்லப் பார்க்கிறார்கள்... காப்பாற்றுங்கள்!'' என்று ஜூ.வி அலுவலகத்துக்குத் தொலைபேசி அழைப்பு வர... பத்மாவின் கணவர் விவேக்கைச் சந்தித்துப் பேசினோம். அவர் கூறிய தகவல்கள் நம்மைக் கலங்கச் செய்வதாக இருந்தன. - முழு விவரம் தருகிறது 'நான் சாகவேண்டும் என நினைக்கிறார்கள்! - மரணத்தின் விளிம்பில் மாவோயிஸ்ட் பத்மா' எனும் சிறப்புச் செய்திக் கட்டுரை. 

அம்பலமும் ஆழமும்: 4 நிமிட வாசிப்பில் ஜூ.வி-யின் 8 விஷயங்கள்! 

சர்வாதிகாரிகளால் ஆளப்படும் தேசங்களில்தான், மக்கள் எந்த நேரமும் அரசின் கண்காணிப்பில் இருப்பார்கள். டிசம்பர் 20-ம் தேதி மத்திய அரசு பிறப்பித்த ஓர் உத்தரவு, அப்படி ஓர் அச்சத்தையே மக்கள் மனதில் விதைத்திருக்கிறது. சந்தேகத்துக்குரிய கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் போன் மூலம் உருவாக்கும், பரிமாறிக்கொள்ளும் எந்தத் தகவலையும் கண்காணிக்கும் அதிகாரத்தை நாட்டின் பத்து விசாரணை அமைப்புகளுக்கு வழங்கியதன் மூலம் தனிநபர் சுதந்திரம் மற்றும் உரிமைகளையே கேள்விக்குறியாக்கியுள்ளது மத்திய அரசு. 

சி.பி.ஐ., அமலாக்கப் பிரிவு, வருவாய் புலனாய்வுத் துறை, ஐ.பி உள்ளிட்ட 10 அமைப்புகள் இந்த அதிகாரத்தைப் பெற்றுள்ளன. இதன் மூலம் சந்தேகத்துக்குரிய நபர்களின் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் தகவல் பரிமாற்றங்கள், இ-மெயில் பரிமாற்றங்கள் என எதையும் அவை படிக்க முடியும்... - இந்த விவகாரத்தின் தன்மையை இன்னும் விரிவாகவும் ஆழமாகவும் நோக்குகிறது 'கணினி... உளவு... களவு!' எனும் பார்வை. 

அம்பலமும் ஆழமும்: 4 நிமிட வாசிப்பில் ஜூ.வி-யின் 8 விஷயங்கள்! 

எழுத்தைத் தாண்டி அவர் பேசுவதைக் கேட்பதும் அவருடன் பேசுவதும் பேரானந்தம் தரும் அனுபவங்களாகும். இளம் படைப்பாளிகளின் எழுத்துகளை அக்கறையுடன் வாசித்துத் தன் பேச்சிலும் எழுத்திலும் கொண்டாடும் மகத்தான குணம் அவரது அடையாளம். தன்னை அழகாக வைத்துக்கொள்வதிலும் தேர்ந்தெடுத்து உடுத்திக்கொள்வதிலும் அக்கறையுடன் இருப்பார். எழுத்தாளன் என்கிற கம்பீரம் அவரது முகத்திலும் உடல்மொழியிலும் எப்போதும் ததும்பி நிற்கும்...

-  தனித்துவம் மிக்க ஆளுமை பிரபஞ்சனின் மேன்மைகளைச் சொல்கிறது 'மறைந்தது மகாநதி!' எனும் அஞ்சலிக் கட்டுரை.
 
இந்த வார ஜூனியர்  விகடன் இதழை வாங்க... இந்த லிங்கைக் க்ளிக் பண்ணுங்க:  https://bit.ly/2AfIIru