Published:Updated:

அன்புமணி மீது மேலும் ஒரு வழக்கு பாய்ந்தது!

அன்புமணி மீது மேலும் ஒரு வழக்கு பாய்ந்தது!
அன்புமணி மீது மேலும் ஒரு வழக்கு பாய்ந்தது!
அன்புமணி மீது மேலும் ஒரு வழக்கு பாய்ந்தது!

சென்னை: இறையாண்மைக்கு எதிராக பேசியதாக கூறி முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ம.க. இளைஞர் அணித் தலைவருமான அன்புமணி ராமதாஸ் மீது பிரம்மதேசம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கடந்த 2012ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஜாதி கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக கூறி ஏற்கனவே வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் பா.ம.க. இளைஞர் அணித் தலைவர் அன்புமணி கடந்த 3ஆம் தேதி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

##~~##
இந்த நிலையில், இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாகவும், கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் கருத்துகளை தெரிவித்தாகவும் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள பிரம்மதேசம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
புழல் சிறையில் பா.ம.க.வினர் போராட்டம்
இதனிடையே, ராமதாஸ், அன்பமணியை விடுதலை செய்யக் கோரி பா.ம.க.வினர் 550 பேர் புழல் சிறையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை சிறை அதிகாரிகள் சமாதானப்படுத்தியும் அவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்துவிட்டனர். இதனால் புழல் சிறையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.