Published:Updated:

நீதிபதிக்கு மர்ம தந்தி எதிரொலி: சுதாகரன் வழக்கு வேறு நீதிமன்றத்துக்கு மாற்றம்

நீதிபதிக்கு மர்ம தந்தி எதிரொலி: சுதாகரன் வழக்கு வேறு நீதிமன்றத்துக்கு மாற்றம்
நீதிபதிக்கு மர்ம தந்தி எதிரொலி: சுதாகரன் வழக்கு வேறு நீதிமன்றத்துக்கு மாற்றம்
நீதிபதிக்கு மர்ம தந்தி எதிரொலி: சுதாகரன் வழக்கு வேறு நீதிமன்றத்துக்கு மாற்றம்

சென்னை: தீர்ப்பளிக்க இருந்த நீதிபதிக்கு மர்ம தந்தி வந்ததையடுத்து சுதாகரன் மீதான போதை பொருள் வழக்கு வேறு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

கடந்த 2001ஆம் ஆண்டு தியாகராய நகரில் உள்ள சசிகலாவின் அக்காள் மகன் சுதாகரன் வீட்டில் பாண்டிபஜார் சோதனை செய்தபோது, அவரது படுக்கையறையில் 16 கிராம் ஹெராயின் இருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து சுதாகரன் மீது ஹெராயின் போதை பொருள் வைத்திருந்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

பின்னர், தேனாம்பேட்டையில் உள்ள சுதாகரனின் நண்பர் தோட்டம் பாஸ்கரன் வீட்டில் போலீசார் சோதனை செய்தபோது, அங்கு 72 கிராம் ஹெராயின் இருந்தது. இதையடுத்து, அபிராமபுரம் போலீசார், சுதாகரன், தோட்டம் பாஸ்கரன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த 2 வழக்குகளிலும் சுதாகரன், அவரது நண்பர்கள் மொய்னுதீன், தோட்டம் பாஸ்கரன், சலாவூதீன் ஆகியோர் மீது குற்றம் சுமத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த 2 வழக்குகளும் சென்னையிலுள்ள போதை பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட சலாவூதீன் தலைமறைவாகிவிட்டதால் அவர் மீதான வழக்கு தனியாக பிரிக்கப்பட்டது.

சுதாகரன் உட்பட 3 பேர் மீதான 2 வழக்குகளையும் சேர்த்து ஒரே வழக்காக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் அரசு தரப்பில் 16 பேர் சாட்சியம் அளித்தனர். இந்த வழக்கு நீதிபதி வி.ராமமூர்த்தி முன்பு விசாரிக்கப்பட்டு வந்தது.

இந்த வழக்கு நீதிபதி ராமமூர்த்தி முன்பு கடந்த 15ஆம் தேதி இறுதிக்கட்ட விசாரணை நடந்து முடிந்தது. இதையடு்த்து வழக்கில் வரும் 19ஆம் தேதி தீர்ப்பு அளிக்கப்பட இருந்தது.

##~~##
இந்த நிலையில் நீதிபதி ராமமூர்த்திக்கு மர்ம தந்தி ஒன்று வந்தது. இதையடுத்து, வழக்கில் தீர்ப்பை கடந்த 29ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். அப்போது வழக்கின் தீர்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில் தீர்ப்பு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்க இருந்த நிலையில் 3 முறை ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே, சுதாகரன் மீதான போதை பொருள் வழக்கு முதலாவது கூடுதல் போதை பொருள் தடுப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் வரும் 13ஆம் தேதி சுதாகரன் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.