Published:Updated:

மதுரை மண்டலத்தலைவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம்!

மதுரை மண்டலத்தலைவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம்!
மதுரை மண்டலத்தலைவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம்!

மதுரை: மதுரை மூன்றாம் மண்டலத்தின் தலைவர் ராஜபாண்டி தனது பதவியை ராஜினாமா செய்யாததால் அவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கொண்டு வந்துள்ளனர்.

புது வீடு கட்டியவரிடம் கமிஷன் கேட்டு அவர் கொடுக்காததால் அவர் மீது தாக்குதல் நடத்திய மதுரை மூன்றாம் மண்டலத்தின் தலைவர் ராஜபாண்டியை, அ.தி.மு.க.விலிருந்து நீக்கி சிறையில் அடைக்க உத்தரவிட்டார் தமிழக முதல்வர்.

இந்த நிலையில் அவர் வகித்து வந்த மண்டலத்தலைவர் பதவியை ராஜினாமா செய்வார் என்று அக்கட்சியினர் எதிர்பார்த்தார்கள். ஆனால், அவர் ராஜினாமா செய்யவில்லை. இந்த நிலையில் வேறொரு அ.தி.மு.க. கவுன்சிலரை மண்டலத்தலைவராக கொண்டு வருவதற்கான வேலைகளை மேயர் ராஜன் செல்லப்பா மேற்கொண்டுள்ளார்.

##~~##
முதல்வர் மன்னித்து ஏற்றுக்கொள்வார் என்ற நம்பிக்கையில் இருந்த ராஜபாண்டி ராஜினாமா செய்ய முன் வராததால், அவர் மீது, அந்த மண்டலத்திலுள்ள மற்ற கவுன்சிலர்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை இன்று காலை கொண்டு வந்தனர். இதில் தி.மு.க.வை சேர்ந்த நான்கு கவுன்சிலர்களும், மார்க்சிஸ்ட், பா.ம.க.வை சேர்ந்த தலா ஒரு கவுன்சிலர்களும் கலந்து கொள்லவில்லை. தற்போதைய மண்டலத்தலைவர் ராஜபாண்டியும் கலந்து கொள்லவில்லை.

அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 17 பேரும், கமிஷனர் நந்தகோபால் முன்னிலையில் வாக்கு சீட்டு மூலம் வாக்களித்தார்கள். மாமன்ற செயலாளர் ராஜகோபலும் இதை கண்காணித்தார். பத்திரிகையாளர்களுக்கு தெரியாமல், கருத்தரங்கு கூடத்தை பூட்டிக்கொண்டு ரகசியமாக இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தனர்.

இது சென்னையிலுள்ள உள்ளாட்சிகளின் இயக்குனர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். அவர்கள் ராஜபாண்டி நீக்கப்பட்டதை முறைப்படி அறிவிப்பார்கள். அதன்பின், கட்சித் தலைமை சுட்டிக்காட்டும் நபர் மூன்றாம் மண்டலத்தின் தலைவராக வருவார்.

செ.சல்மான்

படங்கள்:பா.காளிமுத்து.