Published:Updated:

``பா.ஜ.க உடன் கூட்டணியா?” - டெல்லியில் பதிலளித்த தமிழக அமைச்சர்கள்

``பா.ஜ.க உடன் கூட்டணியா?” - டெல்லியில் பதிலளித்த தமிழக அமைச்சர்கள்
``பா.ஜ.க உடன் கூட்டணியா?” - டெல்லியில் பதிலளித்த தமிழக அமைச்சர்கள்

மிழக அரசின் உள்ளாட்சித் துறைக்கு மத்திய அரசால் வழங்கப்படும் நிதி 3,216 கோடி ரூபாய் இன்னும் வழங்கப்படாத நிலையில், தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் தமிழ்நாடு மின்துறை அமைச்சர் பி.தங்கமணி ஆகியோர் இணைந்து, இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை சந்தித்து, மாநில அரசுக்கு ஒதுக்கவேண்டிய நிதியை உடனடியாக கொடுக்கச் சொல்லி மனு அளித்தனர்.

அதன் பிறகு, தமிழ்நாடு விருந்தினர் மாளிகையில்  அமைச்சர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, உள்ளாட்சிக்குத் தொடர்பு இல்லாத பாதுகாப்புத் துறை அமைச்சரை சந்திப்பதற்கான காரணம் என்ன, இது அ.தி.மு.க - பா.ஜ.க இடையேயான  கூட்டணி நிமித்தமான சந்திப்பா என நிருபர்கள்  கேள்வி எழுப்பினர். அதற்கு, “எங்கள் கட்சியில் கூட்டணி பற்றிய முடிவுகள் எடுக்க இரண்டு தலைவர்கள் ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் இருக்கிறார்கள்.  பாதுகாப்புத் துறை அமைச்சர் தமிழ்நாட்டைச் சார்ந்தவர். அவருக்கு தமிழ்நாட்டின் தேவைகள் புரியும்  என்பதால் அவரை சந்தித்தோம். மத்திய அரசு, கஜா புயல் பாதிப்புக்கு நிதி வழங்க வேண்டும் என்பதற்கான கோரிக்கையையும் மனுவாக அளித்துள்ளோம்” என்றனர்.