Published:Updated:

அப்துல் கலாம் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடாதது இதற்குத்தான் - காந்தியின் பேரன் சொல்லும் காரணம்

அப்துல் கலாம் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடாதது இதற்குத்தான் - காந்தியின் பேரன் சொல்லும் காரணம்
அப்துல் கலாம் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடாதது இதற்குத்தான் - காந்தியின் பேரன் சொல்லும் காரணம்

முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம், இரண்டாவது முறையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடாததற்கு என்ன காரணம் என்பதுகுறித்து, காந்தியின் பேரன் எழுதியுள்ள புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். 


'இந்தியாவின் ஏவுகணை நாயகன்' என்று அழைக்கப்படும் அப்துல் கலாம், நாட்டின் 11-வது குடியரசுத்தலைவராக (2002-2007) பதவி வகித்தார். அவரைத் தொடர்ந்து,  நாட்டின் 12-வது குடியரசுத்தலைவராக 2007-ம் ஆண்டு ஜூலை மாதம் 25-ம் தேதியிலிருந்து 2012 ஜூலை வரை பிரதீபா பாட்டீல் இருந்தார். அவரைத் தொடர்ந்து, நாட்டின் 13-வது குடியரசுத்தலைவராக மீண்டும் அப்துல் கலாம் போட்டியிடுவார் என கூறப்பட்டுவந்தது. 2012-ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் இதுகுறித்து பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால், அந்தத் தேர்தலில் அப்துல் கலாம் போட்டியிடவில்லை.  14-வது குடியரசுத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர், பிரனாப் முகர்ஜி. இந்நிலையில், அப்துல் கலாம் மீண்டும் ஏன் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவில்லை என்பதுகுறித்து மகாத்மா காந்தியின் பேரனான ராஜ்மோகன் காந்தி, தனது புத்தக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் எழுதியுள்ள, `நவீன தென் இந்தியா, 17-ம் நூற்றாண்டு முதல் நமது காலகட்டம் வரை' என்ற புத்தக்கத்தில், ``2007-ம் ஆண்டு அப்துல் கலாமின் பதவிக்காலம் நிறைவடைந்தது. இதையடுத்து அவர், இந்திய கலாசாரத்தின்மீது அதிக ஆர்வம் கொண்டிருந்தார்.  அதுமட்டுமல்லாது, இந்து அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்களுடனான அவரது நட்பு, நாட்டின் பாதுகாப்புக்கு அவர் ஆற்றிய சேவைகள் உள்ளிட்டவை இந்தியாவில் உள்ள அனைவருக்குமான தலைவராக அவரை மாற்றியது. பிரதீபா பாட்டீலுக்குப் பிறகு, கலாம் 2-வது முறையாக 2012-ம் ஆண்டு குடியரசுத்தலைவராவதற்கு, பா.ஜ.க, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் முன்மொழிந்தன. ஆனால்,  அதை காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால்தான், வெற்றிபெறுவதற்குத் தேவையான ஓட்டுகள் கிடைக்காது என்று எண்ணி, அப்துல் கலாம் போட்டியிடாமல் ஒதுக்கிக்கொண்டார்'' என்று அதில் ராஜ்மோகன் குறிப்பிட்டுள்ளார்.