Published:Updated:

ஜாமீனை ரத்து செய்யக் கோரி தமிழக அரசு வழக்கு: ராமதாசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

ஜாமீனை ரத்து செய்யக் கோரி தமிழக அரசு வழக்கு: ராமதாசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
ஜாமீனை ரத்து செய்யக் கோரி தமிழக அரசு வழக்கு: ராமதாசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
ஜாமீனை ரத்து செய்யக் கோரி தமிழக அரசு வழக்கு: ராமதாசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

சென்னை: விழுப்புரம் நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய கோரும் தமிழக அரசின் மனுவிற்கு பதில் அளிக்கும் படி பா.ம.க. நிறுவனர் ராமதாசுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விழுப்புரத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், தலைவர் ஜி.கே. மணி உள்ளிட்ட பலரை போலீசார் கைது செய்து, திருச்சி சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் ராமதாஸ் உள்ளிட்டோர் சார்பில் ஜாமீன் கேட்டு விழுப்புரம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி சிவகுமார், ராமதாஸ் உட்பட அனைவருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தி்ல் தமிழக அரசு உடனடியாக மேல்முறையீடு செய்தது. அப்போது, நீதிபதி எம்.சத்தியநாராயணன் முன்பு ஆஜரான அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் ஏ.எல்.சோமயாஜி, "பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, அரசு பேருந்துகள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. பொது அமைதிக்கு மிகப்பெரிய குந்தகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இவற்றை எல்லாம் கருத்தில் கொள்ளாமல், விழுப்புரம் நீதிபதி ஜாமீன் வழங்கியுள்ளார். இந்த உத்தரவை ரத்து செய்யவேண்டும் என்று வாதிட்டார்.

##~~##
இதையடுத்து, ஒத்திவைக்கப்பட்ட வழக்கு நீதிபதி  சத்தியநாராயணன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பா.ம.க. நிறுவனர் ராமதாசுக்கு விழுப்புரம் நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்றும் இது தொடர்பாக மனுத்தாக்கல் செய்ததும் அவசர வழக்காக எடுக்க விசாரிக்க வேண்டும் என்று நீதிபதியிடம் அரசு வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார்.
இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்டு விசாரித்த நீதிபதி, தமிழக அரசின் மனுவுக்கு பதில் அளிக்கும்படி ராமதாசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.