@பாபு, திருவண்ணாமலை.

நாடு இன்று இருக்கும் நிலையில் படேலுக்கு மூவாயிரம் கோடி ரூபாயில் சிலை தேவையா?

முதலமைச்சர், பிரதமர் போன்ற பதவிக்கு வருபவர்கள் பலரும் தங்களை மன்னர்கள் என்று நினைத்துக் கொள்வதின் விளைவுதான் இதெல்லாம். ‘நாம், மக்களின் ஊழியர்தான்... மக்களுக்கு முக்கியமாக என்ன தேவையோ அதை மட்டும் செய்வதற்குத்தான் நமக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது’ என்பதை உணர மறுக்கிறார்கள். கோடிகளைக் கொட்டி இப்படியெல்லாம் சிலைகளை அமைப்பது, நாடு நல்ல நிலையில் இருந்தாலும்கூடத் தேவையற்ற செயலே!

@சி.இரத்தினசாமி, வி.புதுப்பாளையம், திருப்பூர்.

கருணாநிதி இப்போது இருந்தால், எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியை எப்படி விமர்சித்திருப்பார்?

ஐயகோ... இந்தப் பழனிசாமி ஆட்சியில், அந்தப் ‘பழநி’ சாமி தலைபோல தமிழகம் ஆகிக் கொண்டிருக்கிறதே!

@‘காட்டாவூர்’ இலக்கியன், செங்குன்றம், சென்னை 52.

ஒருவேளை அடுத்து மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால், 5,000 கோடி ரூபாய் செலவில் யாருடைய சிலையை வைப்பார்கள்?

அதற்காக எதில் ‘கை’ வைப்பார்கள் என்பதுதான் முக்கியம்.

@ர.பழனிசாமி, இராவணாபுரம்.

‘வரும் 2020-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் 21 நகரங்களில் நிலத்தடிநீர் முற்றிலும் வற்றிவிடும்’ என்று எச்சரித்துள்ளதே, நிதி ஆயோக் அமைப்பு?

அதற்குள்ளாகத்தான் சந்திர மண்டலத்துக்கோ... செவ்வாய்க்கிரகத்துக்கோ நாம் போய்விடுவோமே. இதைப் பற்றி எதற்காகக் கவலைப்பட வேண்டும்!

@எம்.வி.பொன்னுசாமி, விருதுநகர்.

‘சர்கார்’ படத்தின் கதை தன்னுடையது என்று போராடி வென்ற வருண் ராஜேந்திரனுக்கு, வெறும் நன்றி மட்டும்தானா?

அதெல்லாம் படாபடா ‘சர்கார் ரகசியம்’.

@எம்.வான்மதி, எடப்பாடி.

தீபாவளி சமயத்தில் பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் விதித்திருக்கும் நேரக் கட்டுப்பாடுகள்?

புஸ்வாணம்!

@எல்.ஆர்.சுந்தரராஜன், மடிப்பாக்கம்.

தமிழ்நாடு ‘டி-20’ மேட்ச்சில் யார் ரன்அவுட் ஆவார்கள்?

வழக்கம்போல மக்கள்தான்!

கே.விஜயராகவன், திருவாரூர்.

2014 தேர்தலின்போது, பி.ஜே.பி முன்வைத்த வளர்ச்சி முழக்கங்கள் பலித்தன. அந்த முழக்கங்கள் 2019 தேர்தலிலும் பலனளிக்குமா?

பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் தோல்வி; போர் விமானம் வாங்கியதில் ஊழல்; நீதி நிர்வாகத்தில் தலையீடு; சி.பி.ஐ அமைப்புக்குள் கோஷ்டி; நிதி (ரிசர்வ் வங்கி) நிர்வாகத்தை ஸ்தம்பிக்க வைக்கும் முயற்சி... இப்படி இன்னும் ஏகப்பட்ட புகார்கள் வரிசை கட்டி நிற்கின்றன. இதற்கெல்லாம் பதில் சொல்லவே நேரம் இருக்காதே!

ஸ்ரீராம், சேலையூர்.

காங்கிரஸ்மீது ஊழல் பட்டியல் வாசிக்கப்பட்டதால் பி.ஜே.பி-யைத் தேர்ந்தெடுத்தோம். இப்போது பி.ஜே.பி மீதும் ஊழல் கறைபடிய ஆரம்பித்துள்ளது. இனி என்னதான் செய்வது?

புதியமொந்தையில் பழைய கள்!

இராமச்சந்திரன், பீளமேடு, கோயம்புத்தூர்.

‘எல்லோரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும்’ என்று சட்டம் இயற்ற முடியுமா?

சட்டம்போட்டுக் கட்டாயப்படுத்துவதைவிட, எல்லோரும் தானாக முன்வந்து வாக்களிக்கும்போதுதான் உண்மையான ஜனநாயகம் உறுதிப்படும். அதற்கான சூழலை உருவாக்க யாரும் முயற்சி செய்யவே இல்லை என்பதுதான் சோகம்.

ரா.அழகிரிராஜ், நாமக்கல்.

ராஜபக்ஷே அதிரடியாக இலங்கை பிரதமர் பதவியைக் கைப்பற்றியிருக்கிறார். இது, தமிழக அரசியலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்?

முள்ளிவாய்க்காலில் கொத்துக்கொத்தாகத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட சூட்டோடுதான், இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் நடந்தது. இலங்கைக்கு ஆதரவாக இருந்ததாக விமர்சிக்கப்பட்ட காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணிதான் அப்போது தமிழகத்தில் அதிக இடங்களைப் பிடித்தது. எந்தத் தாக்கமும் ஏற்படவில்லை. உரிமை, உடைமை எல்லாம் இழந்தாலும் உணர்வை இழக்கக்கூடாது என்பார்கள். அதையும்கூட இழந்துவிட்ட மனிதர்கள் வாழும்பூமியாக மாறிக்கொண்டிருக்கிறது தமிழகம். தெருவுக்குத் தெரு தலைவர்கள் தோன்றி, தங்களை முன்னிறுத்துவதில் மட்டுமே கவனம் செலுத்தும்போது... தமிழகத்தில் எந்தப் பிரச்னையிலும் எந்தத் தாக்கமும் ஏற்படாது, ஏற்படுத்தவும் முடியாது. ஊர்கூடித் தேர் இழுத்தால் மட்டுமே எதுவும் சாத்தியம்.

அ.ஜெயப்பிரகாஷ், கழுகுமலை.

சாதாரண வீட்டிலிருக்கும் ஒருசில அறைகளையே முழுமையாகப் பயன்படுத்த முடிவதில்லை. அப்படியிருக்க, அரசியல்வாதிகள், அதிகாரிகள், தொழிலதிபர்கள், சினிமாக்காரர்கள் எல்லாம் பங்களாக்கள், தீவுகள் என்று வாங்கிப் போடுகிறார்களே... ஐந்நூறு, ஆயிரம் ஆண்டுகள் வாழப்போகிறார்களோ?

விஜய் மல்லையா, ஜெயலலிதா, சசிகலா, லாலுபிரசாத் யாதவ், நீரவ் மோடி... இவர்கள் நிலை எல்லாம் தெரியும்தானே!

@கார்த்திகேயன்கவிதா.

என்னவோ, மற்ற 214 தொகுதிகளும் செழிப்பாக இருப்பதுபோல் பேசி வருகிறார்களே?

உண்மைதான். 214 தொகுதி எம்.எல்.ஏ-க்களும் செழிப்பாகத்தான் இருக்கிறார்கள். அவர்கள் காட்டில் அடைமழை பெய்கிறது. அதனால் தான் இந்த ஆட்சியே தொடர்கிறது. எம்.எல்.ஏ-க்கள் செழிப்பாக இருப்பதால் தொகுதிகளும் செழிப்பாக இருப்பதாகத்தான் என்று எடுத்துக் கொண்டு விட்டார்களே என்னவோ?!

க.சு.ஸ.மழாஹரி, காயல்பட்டினம், தூத்துக்குடி.

உ.பி-யை ஆளும் பி.ஜே.பி அரசு, அலகாபாத் நகரின் பெயரை மாற்றியுள்ளதே... அந்தப் பெயர் அழகாக இல்லையா?

எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது மாயவரம் என்கிற பெயரை மயிலாடுதுறை என்று தூயதமிழ்ப் பெயராக மாற்றினார். அவரை மலையாளி என்று தி.மு.க விமர்சித்து வந்ததால், நானும் தமிழ் உணர்வாளன் என்பதைக் காட்டிக் கொள்வதற்காக இப்படிச் சில வேலைகளைச் செய்தார். உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், ஏதாவது நெருக்கடியில் சிக்கியிருப்பார்போல... விட்டுத்தள்ளுங்கள்.

தாமஸ் மனோகரன், புதுச்சேரி-10.

காமராஜர் ஆட்சி அமைப்போம், அண்ணா ஆட்சி அமைப்போம், எம்.ஜி.ஆர் ஆட்சி அமைப்போம், அம்மாவின் ஆட்சி நடக்கிறது என்றே பேசுகிறார்கள். மக்களாட்சி எப்போது அமையும்?

எல்லோரும் மக்களாக மாறும்போதுதான். விரைவில் தேர்தல் வரப்போகிறது. நாம் எல்லோரும் மக்களாகத் தயாராவோம்.

லட்சுமி செங்குட்டுவன், வேலூர் (நாமக்கல்):

எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியைக் கவிழ்க்க மு.க.ஸ்டாலின் முயற்சி செய்வதாகக்கூடத் தெரியவில்லையே!

முயற்சிகள் கைகூடுவதாகத் தெரிய வில்லை என்றுதான் தோன்றுகிறது.

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:
கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை- 600 002
kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!