Published:Updated:

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: மேலும் ஒருவர் கைது

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: மேலும் ஒருவர் கைது
பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: மேலும் ஒருவர் கைது

கோவை: கர்நாடக மாநிலம், பெங்களூருவில் பாரதிய ஜனதா கட்சி அலுவலகம் அருகே, கடந்த மாதம் 17ஆம் தேதி நடந்த வெடிகுண்டு தாக்குதல் வழக்கில், கோவையைச் சேர்ந்த மேலும் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதனால் கைது எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது.

பெங்களூருவில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்திற்கு அருகில் கடந்த மாதம் 17ஆம் தேதி சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்ததில் 16 பேர் காயமடைந்ததனர். இத்தாக்குதல் குறித்து தமிழக போலீசாரின் உதவியுடன் கர்நாடக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல் தமிழகத்தில் திட்டமிடப்பட்டது என போலீசார்

##~~##
மேற்கொண்ட முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பை நிகழ்த்துவதற்கான உபகரணங்கள் தமிழகத்திலிருந்து கொண்டுச் செல்லப்பட்டதும் விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் சென்னை பெருங்களத்தூரில் பதியப்பட்டதை கண்டுபிடித்திருக்கும் போலீசார், அந்த வாகனம் பெங்களூரு கொண்டுசெல்லப்பட்டது எப்படி என்பது குறித்து தற்போது விசாரித்து வருகிறார்கள்.

இந்நிலையில், பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக கோவையைச் சேர்ந்த சுலைமான் என்பவரை போலீசார் நேற்று இரவு கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் இதுவரை 9 பேர் தமிழகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக அம்மாநில போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த கைது கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ச.ஜெ.ரவி