
புதுடெல்லி: பிரதமர் மன்மோகன் சிங் உடனடியாக பதவி விலக்க கோரி பா.ஜ.க. தீர்மானம் நிறைவேற்றியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங் தலைமையில் இன்று நடைபெற்ற பா.ஜ.க ஆட்சி மன்ற குழுக் கூட்டத்தி்ல் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும், அமைச்சர்கள் பவன்குமார் பன்சால், அஸ்வினி குமார் பதவி விலக வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அஸ்வனியை நீக்கும் வரை எந்த மசோதாவையும் நிறைவேற்ற விட மாட்டோம் என்றும் பா.ஜ.க. கூறியுள்ளது.