Published:Updated:

மெடிக்கல் முறைகேடுகள்: 4 நிமிட வாசிப்பில் ஜூனியர் விகடனின் 7 டீட்டெயில்ஸ்

மெடிக்கல் முறைகேடுகள்: 4 நிமிட வாசிப்பில் ஜூனியர் விகடனின் 7 டீட்டெயில்ஸ்
மெடிக்கல் முறைகேடுகள்: 4 நிமிட வாசிப்பில் ஜூனியர் விகடனின் 7 டீட்டெயில்ஸ்

மெடிக்கல் முறைகேடுகள்: 4 நிமிட வாசிப்பில் ஜூனியர் விகடனின் 7 டீட்டெயில்ஸ்

இந்த இதழ் ஜூனியர் விகடன்:  https://bit.ly/2SsmBoP

மெடிக்கல் முறைகேடுகள்: 4 நிமிட வாசிப்பில் ஜூனியர் விகடனின் 7 டீட்டெயில்ஸ்

சாத்தூர் மருத்துவமனையில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஏற்றப்பட்ட ரத்தம், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஓர் இளைஞருடையது. கமுதி அருகே உள்ள திருச்சிலுவையாபுரம் என்ற கிராமத்தைச் சேர்ந்த 20 வயதான அந்த இளைஞர், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சிவகாசியில் உள்ள ஒரு பட்டாசுக் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்துள்ளார். 2016-ல் அவர் சிவகாசி அரசு மருத்துவமனையில் ரத்த தானம் செய்துள்ளார். அப்போதே அவருக்கு ஹெச்.ஐ.வி தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வழக்கமாக இந்த விஷயத்தைச் சம்பந்தப்பட்டவரிடம் நேரடியாகச் சொல்லமாட்டார்கள். மருத்துவமனையிலிருந்து தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் கீழ் இயங்கும் 'நம்பிக்கை' மையத்தில் தகவல் அளித்து, கவுன்சிலர் மூலமாக அந்த நபருக்கு கவுன்சிலிங் அளித்து, சிகிச்சையைத் தொடங்குவார்கள். ஆனால், இந்த விஷயத்தில் அன்றைய நாளில் இப்படியான நடைமுறைகளை யாரும் மேற்கொள்ளவில்லை...

- மருத்துவ சேவைக்குப் பெயர் பெற்றிருந்த தமிழக சுகாதாரத் துறை வெட்கித் தலைகுனிய நேரிட்டிருக்கிறது. தமிழக அரசு மருத்துவமனையின் சேவையை நம்பி வந்த ஒரு சாமானியப் பெண்ணுக்கு மாபெரும் துரோகத்தை இழைத்திருக்கிறது இந்த அரசு நிர்வாகம். அந்த ஏழைக் கர்ப்பிணிப் பெண்ணுக்கு, தனது வாழ்நாளில் என்றைக்கும் குணப்படுத்த இயலாத ஹெச்.ஐ.வி பாதிப்பை உண்டாக்கி, துடைக்க முடியாத கறையை ஏற்படுத்தியிருக்கிறது கொலைகார சுகாதாரத்துறை. சாத்தூர் அரசு மருத்துவமனையில் நடந்துள்ள இந்தக் கொடுமை, அலட்சியத்தின் உச்சத்தில் இந்த அரசுத்துறை இருப்பதை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது குறித்து மட்டுமின்றி, தனியார் மருத்துவமனை தகிடுதத்தம், மருத்துவ உபகரணங்களில் ஊழல் உள்ளிட்ட விவகாரங்களையும் காட்டியிருக்கிறது 'ரத்தக் கறை! - கொலைகார அரசுத்துறை' எனும் கவர் ஸ்டோரி. 

மெடிக்கல் முறைகேடுகள்: 4 நிமிட வாசிப்பில் ஜூனியர் விகடனின் 7 டீட்டெயில்ஸ்

``புரோக்கர்கள் கையில் பல தனியார் மருத்துவமனைகள், மருத்துவர்கள் உள்ளனர். இவர்கள் வெளிநாட்டு நோயாளிகளை 'மருத்துவச் சுற்றுலா' என்கிற பெயரில் தமிழகத்துக்கு வரவழைத்து, தனியார் மருத்துவமனைகளில் தங்க வைப்பார்கள். எந்த மருத்துவமனையிலாவது ஒரு நோயாளிக்கு மூளைச்சாவு ஏற்பட்டால் அங்குள்ள நபர்கள் மூலம் புரோக்கர்களுக்கு தகவல் வந்துவிடும். அதன்பின்பு மூளைச்சாவு அடைந்தவரின் குடும்பத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவார்கள். `அதுவரை ஆன மருத்துவச்செலவு, உடலைக் கொண்டுபோவதற்கான ஆம்புலன்ஸ் கட்டணம் எல்லாவற்றையும் நாங்களே பார்த்துக்கொள்கிறோம்' என்று சொல்லி, உறவினர்களை வழிக்குக் கொண்டுவருவார்கள். வசதியில்லாத நோயாளிகள்தான், இந்த மாஃபியா கும்பலின் இலக்கு. இதற்கு, சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனைகளும் உடந்தை. இப்படித்தான் மணிகண்டனிடம் இருந்தும் புரோக்கர்கள் மூலம் உடல் உறுப்புகள் திருடப்பட்டுள்ளன..." 

- ``சிறுநீரகம் ரூ.10 லட்சம்... இதயம் ரூ.40 லட்சம்... கல்லீரல் ரூ.60 லட்சம்!" என்ற தலைப்பில் 24.01.2018 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில் உடல் உறுப்பு தான மோசடி குறித்து எழுதியிருந்தோம். தமிழக அரசால் அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவும் இதையே இப்போது உறுதிசெய்துள்ளது. கோவை மற்றும் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் நடக்கும் முறைகேடுகள் 245 பக்கங்கள் கொண்ட அறிக்கையில் தெளிவாகச் சொல்லப்பட்டும், அரசுத் தரப்பில் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இது தொடர்பாக விரிவான கவர் ஸ்டோரியை 'உறுப்பு தான முறைகேடுகள் உண்மைதான்! - மோசடியை உறுதிப்படுத்திய அரசுக் குழு...' எனும் தலைப்பில் தந்திருக்கிறது ஜூனியர் விகடன் டீம்.

மெடிக்கல் முறைகேடுகள்: 4 நிமிட வாசிப்பில் ஜூனியர் விகடனின் 7 டீட்டெயில்ஸ்

ஏழைக் குழந்தைகளின் வயிற்றில் அடிக்கவும் துணிந்துவிட்டது தமிழக அரசு. எத்தனையோ சமூக நலத் திட்டங்களை திராவிடக் கட்சிகள் கொண்டுவந்திருந்தபோதிலும், பள்ளி மாணவர்களுக்காகக் கொண்டுவரப்பட்ட சத்துணவுத் திட்டம்தான் இன்றளவும் நாட்டுக்கே முன்னோடித் திட்டமாக இருக்கிறது. அதைச் சொல்லிதான் அ.தி.மு.க-வினரும் வாக்கு கேட்கிறார்கள். ஆனால், அந்தத் திட்டத்தை அவர்களே அழிக்கவும் துணிந்து விட்டார்கள் என்பதுதான் வயிற்றில் அடிக்கும் நிஜம்!

-  25 குழந்தைகளுக்கும் குறைவாக உள்ள சத்துணவு மையங்களை மூட தமிழக அரசு முடிவுசெய்துள்ளது குறித்தும், அதனால் 8,000 சத்துணவு மையங்கள் மூடப்படும் என்றும் அதிர்ச்சித் தகவல் பற்றியும் அலசுகிறது `சத்துணவு ஒரு தலைமுறையின் ஏக்கம்! - அதை அழிப்பதுதான் தமிழக அரசின் நோக்கமா?' எனும் முக்கிய செய்திக் கட்டுரை.

மெடிக்கல் முறைகேடுகள்: 4 நிமிட வாசிப்பில் ஜூனியர் விகடனின் 7 டீட்டெயில்ஸ்

* அ.தி.மு.க - அ.ம.மு.க இணைப்பு, கூட்டணித் தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட விஷயங்களில் எவ்வளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பது குறித்தே டெல்லியில் அதிகம் பேசப்பட்டதாம். வேலுமணியும் தங்கமணியும் திட்டவட்டமான பதிலைச்சொல்லாமல் மழுப்பிவிட்டுதான் வந்தார்களாம்... 

* கஜா புயல் நிவாரணம் தொடர்பாக, டெல்டா மக்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தும் அறிவிப்பைக்கூட தனது ஜனவரி விசிட்டின்போது பிரதமர் மோடி வெளியிடலாம்... 

இந்த இதழ் ஜூனியர் விகடன்:  https://bit.ly/2SsmBoP

* தமிழகத்தில் அரசுமீது பல்வேறு அதிருப்திகள் உள்ள நிலையில் நாடாளுமன்றத் தேர்தலுக்காக கவர்னர் உரையில் சிலபல கவர்ச்சித் திட்டங்கள் குறித்த அறிவிப்பு இருக்கும்... 

* அ.தி.மு.க-வில் கட்சிப் பதவிகளிலிருந்து ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள், குறிவைத்து நீக்கப்படுகிறார்கள்....

- இதுபோன்ற உள்ளரசியல் தகவல்கள் பலவற்றையும் 'குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச செல்போன்? - அரசின் அடேங்கப்பா யோசனை!' எனும் தலைப்பில் தந்திருக்கிறார் மிஸ்டர் கழுகு.

மெடிக்கல் முறைகேடுகள்: 4 நிமிட வாசிப்பில் ஜூனியர் விகடனின் 7 டீட்டெயில்ஸ்

``கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தோற்ற இடங்களில், அ.தி.மு.க-வுக்கும் நமக்கும் வாக்கு வித்தியாசம் பெரிய அளவில் இல்லை.  இதையெல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்தால், அ.தி.மு.க அணியே நமக்குச் சாதகமாக இருக்கும். தி.மு.க கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இடம்பெற வாய்ப்புள்ளது. எனவே, அ.தி.மு.க-வுடன் இணைவதே நல்லது" என்றும் பா.ம.க நிர்வாகிகள் சிலர் ராமதாஸிடம் சொல்லியுள்ளார்கள்.

- சூடு பிடிக்கத் தொடங்கும் நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் `இரட்டை இலக்கத் தொகுதிகள்... இலையுடன் கூட்டணி! - பா.ம.க பலே பார்முலா'வை விசாரித்திருக்கிறது ஜூ.வி.

மெடிக்கல் முறைகேடுகள்: 4 நிமிட வாசிப்பில் ஜூனியர் விகடனின் 7 டீட்டெயில்ஸ்

``பொன்.மாணிக்கவேல், 1,125 சிலைகளை மீட்டு, 47 குற்றவாளிகளைக் கைது செய்துள்ளதாகக் குறிப்பிடுகிறார். நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த 333 வழக்குகளில் எத்தனை வழக்குகள் விசாரிக்கப்பட்டன என்பதை அவர் விளக்க வேண்டும். தமிழக சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவின் சாதனையாகக் கருதப்படுவது இன்டர்நேஷனல் சிலைக்கடத்தல் மன்னன் சுபாஷ் கபூரைக் கைது செய்ததுதான். ஆனால், பழவூர் வழக்கில் அவருக்குப் பொது மன்னிப்பு வழங்கப்பட்டது அதிர்ச்சியாக உள்ளது. தீனதயாளன் மற்றும் அப்ரூவர்களை விசாரித்தாலே பல உண்மைகள் வெளிவரும். தீனதயாளனின் வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் ரன்வீர்ஷா, கிரண் ஆகியோரிடமிருந்து சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆனால், அவர்கள் கைதுசெய்யப்படவில்லை. அதேநேரம், இந்து சமய அறநிலையத்துறையினர் மட்டும் குறிவைத்துக் கைது செய்யப்படுகிறார்கள்..." 

- சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவில் ஐ.ஜி-யாக இருந்த, இப்போது சிறப்பு அதிகாரியாக இருக்கும் பொன்.மாணிக்கவேலை அந்தப் பொறுப்பிலிருந்து எப்படியாவது நீக்கிவிட வேண்டும் என்கிற முனைப்பில் உள்ளது தமிழகக் காவல்துறை. என்னதான் நடக்கிறது என்பதை விசாரித்துச் சொல்கிறது 'பொன்.மாணிக்கவேலை நெருக்கும் அதிகாரிகள்...' எனும் செய்திக் கட்டுரை. 

மெடிக்கல் முறைகேடுகள்: 4 நிமிட வாசிப்பில் ஜூனியர் விகடனின் 7 டீட்டெயில்ஸ்

பாலியல் கொடுமைகளுக்கு எதிராக போக்ஸோ சட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகும்கூட இளம்பெண்கள், சிறுமிகள் பாலியல்ரீதியாகத் துன்புறுத்தப்படுவது தொடர்கதையாக இருக்கிறது. இந்தக் கொடுமைகளின் தொடர்ச்சியாக ஈரோடு மாவட்டத்தில் 13 வயது சிறுமியை, பள்ளி வேன் டிரைவர் உட்பட மூன்று பேர் பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார்கள். அந்தச் சம்பவத்தின் பின்னணியையும், சிறுமி மீட்கப்பட்டதையும் 'விவரிக்கும் சிறுமிகள் ஜாக்கிரதை! - தொடர்கதையாகும் பாலியல் கொடுமை' எனும் செய்திக் கட்டுரை நமக்கு விழிப்பு உணர்வும் ஊட்டுகிறது. 

இந்த வார ஜூனியர்  விகடன் இதழை வாங்க... இந்த லிங்கைக் க்ளிக் பண்ணுங்க:  https://bit.ly/2CG6gHX

அடுத்த கட்டுரைக்கு