Published:Updated:

மினி மீல்ஸ்

மினி மீல்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
மினி மீல்ஸ்

மினி மீல்ஸ்

தி.மு.க-வில் மீண்டும் கல்யாணசுந்தரம்?

னிமொழி, ஆ.ராசா, தயாநிதி உள்ளிட்ட வர்களைக் கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்று கடந்த 2014-ல் கருணாநிதிக்குக் கடிதம் எழுதி அதிரடிகாட்டியவர் கல்யாணசுந்தரம். கூடவே, அப்போது தனது அமைப்புச் செயலாளர் பதவியையும் ராஜினாமா செய்தார். ஸ்டாலின் சொல்லிதான் இப்படி ஒரு கடிதத்தை அவர் எழுதினார் என்ற சர்ச்சையும் அப்போது எழுந்தது. கடந்த நான்கு ஆண்டுகளாகக் கட்சியிலிருந்து ஒதுங்கியிருந்தவர், முன்பு வகித்த அதே பதவிக்கு மீண்டும் வரப்போகிறாராம். அமைப்புச் செயலாளர் பதவியில் கல்யாணசுந்தரம் இருந்தபோது, அவரால் பாதிக்கப்பட்டவர்கள் எல்லோரும் இப்போதே பொங்கியெழ ஆரம்பித்து விட்டார்கள்.

மினி மீல்ஸ்

ஐ.ஏ.எஸ் அதிகாரியின் அலம்பல்

தெ
ன் மாவட்டத்தை அடைமொழியாகக் கொண்ட தமிழக கஜானா துறையின் ஐ.ஏ.எஸ் அதிகாரி அவர். இவர் சென்னையைவிட்டு கிளம்பினால், ஒவ்வொரு மாவட்டத்திலும் தன் துறையின் அதிகாரிகள் மாவட்ட ஆரம்ப எல்லையிலிருந்து முடிவுவரை கூடவே வரவேண்டும்; போலீஸ் பந்தோபஸ்தும் வேண்டும் என்று அதிகாரிகளை விரட்டுகிறாராம். சொந்த வேலையாகத் தங்கினால்கூட, அந்த  மாவட்டத்தின் ஆட்சியரும், எஸ்.பி-யும் தன்னை வந்துபார்க்க வேண்டும் என்று இவர் கொடுக்கும் அழுத்தம் தாங்க முடியவில்லையாம். ‘தன்னை வந்து சந்திக்காதவர்களின் துறைக்கு கஜானா கதவை மூடுங்கள்; தானாக வந்து பார்ப்பார்கள்’ என்ற இவரது ஃபார்மூலா காரணமாகச் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தவிக்கிறார்கள் அதிகாரிகள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
மினி மீல்ஸ்

துணை முதல்வரை ஏமாற்றும் ஐ.ஏ.எஸ்!

து
ணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியே சொல்லமுடியாத வேதனையில் இருக்கிறாராம். ஒருபக்கம் முதல்வரின் ஆட்கள் கட்டையைப் போடுகிறார்கள். அதேசமயம் தன் துறையின் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர்,  ஓ.பன்னீர்செல்வம் சொல்லும் எதையும் கேட்பதில்லை என்று சக அதிகாரிகளே புலம்புகிறார்கள். வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் பழுதடைந்த வீட்டில் இருப்போர், மாற்று வீடு கேட்டு அனுப்பிய விண்ணப்பங்கள் தூங்கிக் கொண்டிருக்கின்றனவாம். அரசியல் ரீதியாக முக்கியஸ்தர்கள் சிலருக்கு வீடு ஒதுக்க வேண்டும் என்று பன்னீர்செல்வம் நேரடியாக சொல்லி அனுப்பிய சில பைல்களையும் அந்த ஐ.ஏ.எஸ் கிடப்பில் வைத்துள்ளாராம். இதுமட்டுமல்லாமல், துறை சார்ந்த பல்வேறு விஷயங்களில் பன்னீர்செல்வத்தை அந்த ஐ.ஏ.எஸ் ஏமாற்றுகிறாராம்.

தலை சாய்ந்த ‘தல விருட்சம்’

வை
த்திஸ்வரன் கோவிலில் தருமபுரம் ஆதீன மடத்தின் கட்டுப்பாட்டில்  உள்ள வைத்தியநாத சுவாமி ஆலயத்தின் தலவிருட்சமான வேப்பமரம் விழுந்துவிட்டது.  இந்த ஆலயம் செவ்வாய்க்கு அதிபதியான அங்காரகனின் தலமாகும். பஞ்ச பூதங்களால் ஏற்படும் விபத்துக்கான கிரகம் செவ்வாய் என்பதால், தல விருட்சம் விழுந்ததை, அபசகுனமாகக் கருதுகிறார்கள். இது ஆதீனத்துக்கும் ஆட்சியாளர்களுக்கும் நல்லதல்ல என்று கருத்து நிலவுவதால், மரத்தை மீண்டும் துளிர்விட வைக்கும் பணி நடந்து வருகிறது. மரத்தைப் பார்வையிட்ட தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழகத் தாவரவியல் துறையினர், விருக்ட்ஷா ஆயுர்வேதா முறையில் மரத்தைத் துளிர்விட வைக்க முடியும் என்று கூறினர். இதனால் மகிழ்ச்சியடைந்த தருமபுரம் இளைய ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்மந்த சுவாமிகள், வேப்பமரத்தின் வேர் பகுதியில் பசும்பால் ஊற்றி தீபாராதனை செய்துள்ளார்.

மினி மீல்ஸ்

கரன்ஸி மழை... அமைச்சர் தடபுடல்!

ட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம், தீபாவளியை முன்னிட்டு விழுப்புரம் வடக்கு மாவட்ட அ.தி.மு.க நிர்வாகிகளை ‘வெயிட்’டாக கவனித்திருக்கிறார். ஏழு சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட நூற்றுக் கணக்கான நிர்வாகிகளை கரன்ஸியிலேயே குளிப்பாட்டி னாராம். குறிப்பாக, விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க தொகுதி நிர்வாகிகளுக்குக் கவனிப்பு அதிகமாம். ‘எங்க அண்ணன் அமைச்சராக இருந்தாலும் மாவட்டச் செயலாளர் பொறுப்பு கிடைக்கலை என்கிற ஏக்கம் பல வருஷமா இருக்கு. அதைப் பெறதான் இந்தத் திடீர் கவனிப்பு’ என்கிறார்கள் அமைச்சரின் ஆதரவாளர்கள்.

திருச்சி டாக்டரின் கரன்ஸி ஆபரேஷன்!

ண மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட நேரத்தில் திருச்சியில் அ.தி.மு.க முக்கியப் பிரமுகரின் உறவினரான மருத்துவர் ஒருவர், திருச்சியின் முக்கிய மருத்துவமனைகள் சிலவற்றிடம் இருந்து கமிஷனுக்கு பணத்தை மாற்றித்தருவதாக பல கோடிகளை வாங்கினாராம். இப்போதுவரை பணத்தைத் திருப்பித்தரவில்லை. கேட்டாலும் மிரட்டல் தோரணையில் பதில் வருகிறதாம். சமீபகாலமாக அந்த டாக்டரின் குடும்பத்துக்கும் அ.தி.மு.க வி.ஐ.பி குடும்பத்துக்கும் பிரச்னை என்று தெரிந்துகொண்ட பாதிக்கப்பட்ட மருத்துவர்கள், அவர் அனுமதி இல்லாமல் மருத்துவமனை நடத்திவருவதாக ஆதாரங்களுடன் புகார் அளிக்கத் தயாராகிவருகிறார்கள்.

- எஸ்.முத்துகிருஷ்ணன், அ.சையது அபுதாஹிர், சி.ய.ஆனந்தகுமார், மு.இராகவன்