Published:Updated:

அமைச்சர்களை நீக்க பா.ஜ. பிடிவாதம்: நாடாளுமன்றம் மீண்டும் முடங்கியது!

புதுடெல்லி: ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சால் மற்றும் சட்டத் துறை அமைச்சர் அஸ்வினி குமார் ஆகியோர் ராஜினாமா செய்யும் வரை நாடாளுமன்றத்தை இயங்கவிடமாட்டோம் என்று பா.ஜனதா திட்டவட்டமாக அறிவித்துள்ள நிலையில், அமளி காரணமாக நாடாளுமன்றம் இன்றும் முடங்கியது.

மாநிலங்களவை இன்று காலை கூடியதும், பா.ஜனதா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், சட்டத் துறை அமைச்சர் அஸ்வினி குமார் மற்றும் ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சால் மற்றும் பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலகும் வரை, நாடாளுமன்றத்தை நடத்த அனுமதிக்க மாட்டோம் என்று கூறி கடும் கோஷம் எழுப்பினர். இதனால் அவை பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

##~~##
இதே நிலை மக்களவையிலும் நீடித்ததால் மக்களவையும் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

 இந்நிலையில் 12 மணிக்கு நாடாளுமன்றம் கூடியபோதும் அதே நிலை நீடித்ததால், இரு அவைகளுமே பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து 2 மணிக்கும் அதே நிலையே காணப்பட்டதால், நாள் முழுவதும் இரு அவைகளும் ஒத்திவைக்கபப்ட்டன.