மத்திய மோடி அரசு ஐந்தாவது ஆண்டின் இறுதிக் கட்டத்தில் இருக்கிறது. 2019, மே மாத வாக்கில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. எனவே, வரவிருக்கும் தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம் சட்டமன்ற தேர்தல்கள் மற்றும் கடந்த நவம்பர் 12-ம் தேதி தொடங்கியிருக்கும் சத்தீஸ்கர் சட்டமன்றத் தேர்தல் என ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்கள் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாகக் கருதப்படுகின்றன. இதை, ‘அரையிறுதி ஆட்டம்’ என வர்ணிக்கின்றனர் அரசியல் ஆய்வாளர்கள்.

ஐந்து மாநிலங்களில் மத்தியப் பிரதேசமும் (230) ராஜஸ்தானும் (200) பெரிய மாநிலங்கள். இவற்றுக்கு அடுத்ததாக தெலங்கானா (119), சத்தீஸ்கர் (90), மிசோரம் (40) மாநிலங்கள் உள்ளன. மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களிலும் பி.ஜே.பி ஆட்சி நடைபெறுகிறது. தெலங்கானாவில் தெலங்கானா ராஷ்டிரிய சமிதியும், மிசோரமில் காங்கிரஸ் கட்சியும் ஆட்சிசெய்கின்றன. ஐந்து மாநிலங்களிலும் வெல்லப்போவது யார்... வீழப்போவது யார் என்பது பற்றிய கள நிலவரம் இதோ...

மத்தியப் பிரதேசம்

காவிக்கொடி பறக்கும் மத்தியப் பிரதேசத்தில் 13 ஆண்டுகளாகத் தொடர்ந்து முதல்வராகக் கோலோச்சுகிறார், சிவராஜ்சிங் சவுகான். தேசிய அளவில் பேசப்பட்ட ‘வியாபம்’ ஊழல், சவுகானுக்கு தீராத தலைவலி. தேர்தல் களத்தில் ‘வியாபம்’ ஊழலைப் பிரதானப்படுத்தி காங்கிரஸ் பிரசாரம் செய்துவருகிறது. இந்துகளின் வாக்குகளைக் குறிவைத்து பி.ஜே.பி-க்கு டஃப் கொடுத்துவருகிறது காங்கிரஸ். பி.ஜே.பி ஆட்சியின் மீதான அதிருப்தி வாக்குகள்தான் காங்கிரஸின் இலக்கு. அதை நோக்கியே காய் நகர்த்தி வருகிறது காங்கிரஸ். பி.ஜே.பி கையாளும் இந்துத்துவ அரசியலையே காங்கிரஸும் கையிலெடுத்திருக்கிறது அந்தக் கட்சியின் வெற்றிக்கு உதவலாம். ஆனால், காங்கிரஸ் நாடு முழுவதும் முன்வைக்கும் மதச்சார்பின்மையை கேள்விக்குறியாக்குகிறது அந்த உத்தி. ‘ராமர் பெயரில் தேர்தல் யாத்திரை, கோசாலைகள் அமைக்க நடவடிக்கை’ என முயற்சிக்கிறது காங்கிரஸ். கருத்துக்கணிப்புகளும் காங்கிரஸுக்குச் சாதகமாகவே இருக்கின்றன.

ராஜஸ்தான்

ராஜஸ்தானில், முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா கடந்தமுறை இமாலய வெற்றி பெற்றார். ஆனால், இம்முறை அவர் கலக்கத்தில் இருக்கிறார். அவரது ஆட்சியின் மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம் உள்ளிட்ட பிரச்னைகள் தார் பாலைவன வெப்பத்துக்கு இணையாகத் தகிக்கின்றன. இது போதாதென்று, வசுந்தராவுக்கும் பி.ஜே.பி தலைவர் அமித் ஷாவுக்கும் இடையே வேட்பாளர் தேர்வில் முட்டல் மோதல்கள். இருவரும் சண்டைக்கோழி களாகத் திரிகிறார்கள். அமித் ஷாவுடன் மட்டுமல்ல, ஆர்.எஸ்.எஸ்-வுடனும் வசுந்தராவுக்குப் பிரச்னைகள். கட்சி நிர்வாகிகள் பலர் ‘வசுந்தராவுக்குப் பதிலாக வேறொருவரை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்துங்கள்’ என்று போர்க்கொடி தூக்கியுள்ளனர். ஆனால், பி.ஜே.பி-க்கு வசுந்தராவை விட்டால் ஆளில்லை. எதிர்ப்புகள் இருந்தாலும் வசுந்தரா ராஜேதான் பி.ஜே.பி-யின் ‘கரிஷ்மாடிக் லீடர்’. ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள், அமித் ஷா என எவரையும் கண்டுகொள்ளாமல் பயணிக்கிறார் வசுந்தரா. எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் பி.ஜே.பி-யின் முதல் வேட்பாளர் பட்டியலில் 25 புதுமுகங்களைக் களம் இறக்கி இருக்கிறார் வசுந்தரா.

காங்கிரஸில் இளம் தலைவர் சச்சின் பைலட், மூத்த தலைவர் அசோக் கெய்லாட் ஆகியோருக்கு இடையே பஞ்சாயத்து ஓடுகிறது. பைலட்டுக்குத் தேர்தல் கமிட்டித் தலைவர் பொறுப்பையும், கெய்லாட்டுக்கு ஒருங்கிணைப்பாளர் பொறுப்பையும் கொடுத்திருக்கிறார் ராகுல். முதல்வர் வேட்பாளராக யாரை முன்னிறுத்துவது? என முடிவெடுக்க முடியாமல் திண்டாடுகிறார் ராகுல். ‘ஆட்சியின் மீதான அதிருப்தியும், பைலட் மற்றும் கெய்லாட்டின் செல்வாக்குமே வெற்றிக்குப் போதும்’ என்று நம்புவதால், கூட்டணியைப் பற்றி பெரிய அளவில் ராகுல் அலட்டிக்கொள்ளவில்லை.

தெலங்கானா

தெலங்கானாவில் ‘தெலங்கானா ராஷ்டிரிய சமிதி’ தான் பெரிய கட்சி. சந்திரசேகர் ராவ் தான் பெரிய தலைவர். கண்ணுக்கெட்டிய தூரம்வரை எதிரிகளே இல்லாமல் ஆட்சி செய்கிறார் ராவ். கடந்த தேர்தலில் ‘நீரு (நீர்)... நிதிலு (நிதி நிலை).. நியமிக்கலு (வேலைவாய்ப்பு) என்ற முழக்கத்தை வைத்து ஆட்சிக்கு வந்தார் ராவ். ஆனால், மூன்றிலும் ஃபெயில் ஆகியிருக்கிறார் ராவ். சிலபல மக்கள் நலத் திட்டங்களை மட்டும் அவர் செயல்படுத்தி யிருக்கிறார். இருப்பினும், கள நிலவரம் சந்திரசேகர் ராவுக்குச் சாதகமாகவே இருக்கிறது. அவரது ஆட்சியின்மீது பெரிய அளவில் அதிருப்தி இல்லை.

அதனால்தான், சட்டமன்றத்தை முன்கூட்டியே கலைத்துவிட்டுத் தேர்தலை எதிர்கொள்ளும் அளவுக்கு அவர் துணிந்திருக்கிறார். ‘பலகோடி ரூபாய் செலவில் செய்த யாகங்கள் காப்பாற்றும்’ என்பது, ராவின் இன்னொரு நம்பிக்கை.
ராவை வீட்டுக்கு அனுப்ப, காங்கிரஸும் தெலுங்குதேசமும் அமைத்திருக்கும் ‘மஹாகூட்டமி (மெகா கூட்டணி)’, சந்திரசேகர் ராவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்.

‘ஆந்திர காங்கிரஸ் சந்திரபாபு நாயுடு கட்டுப்பாட்டில் இருக்கிறது’ என்பதே டி.ஆர்.எஸ் கட்சியினர் வைத்துவரும் முக்கிய குற்றச்சாட்டு. இது மக்கள் மத்தியில் விவாதத்தைக் கிளப்ப ஆரம்பித்திருப்பதால், ‘காங்கிரஸ் - தெலுங்கு தேசம் கூட்டணி வென்றால், ஆட்சி ஹைதராபாத்தில் நடக்காது; அமராவதியில் நடக்கும்’ என்பதையே பிரதானமாக டி.ஆர்.எஸ் கட்சியினர் பேசிவருகிறார்கள். ஆந்திராவிலும் வலுவாக இல்லாத நிலையில், தெலங்கானாவிலும் தோற்றால், ‘அக்கட’ தேசத்தில் காங்கிரஸின் அரசியல் எதிர்காலமே கேள்விக்குறியாகும். இங்கே பி.ஜே.பி ஹீரோ அல்ல, ஜூனியர் ஆர்டிஸ்ட் மட்டுமே!

சத்தீஸ்கர்

சத்தீஸ்கரில் ராமன் சிங் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியில் இருக்கிறார். 15 ஆண்டுகால ஆட்சியின் மீதான அதிருப்தி, மக்களிடம் அதிகமாகவே இருக்கிறது. அதனால், ‘ஸ்கை ஸ்கீம்’ எனும் இலவச ஸ்மார்ட் போன் வழங்கும் திட்டத்தைப் பெரிய அளவில் முன்வைத்து வருகிறார், ராமன் சிங். இங்கே காங்கிரஸ் தனித்து விடப்பட்டிருந்தாலும், வலுவாகவே இருக்கிறது. கருத்துக்கணிப்புகளும் காங்கிரஸுக்கே ‘ஜே’ போடுகின்றன. இங்கே, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி காங்கிரஸுடன் கைகோப்பார் என்று பலரும் எதிர்பார்க்க, முன்னாள் முதல்வர் அஜித் ஜோகியின் ஜனதா காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளார். “இந்தக் கூட்டணி 10 சதவிகிதம் அளவுக்கு வாக்குகளைப் பிரிக்கும். இது பி.ஜே.பி-க்கு சாதகமாகவும் காங்கிரஸுக்குப் பாதகமாகவும் முடியும்” என்கிறார்கள் அரசியல் ஆர்வலர்கள்.

மிசோரம்

காங்கிரஸ் ‘கை’யில் மிச்சமிருக்கும் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்று மிசோரம். கிறிஸ்துவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட மாநிலம். குகி, பவி, லாகர் போன்ற பழங்குடி மக்கள் பெருவாரியாக வசிக்கிறார்கள். இவர்களின் வாக்குகளே வெற்றி தோல்விகளைத் தீர்மானிக்கும் சக்திகளாக உள்ளன. முதலமைச்சராக இருக்கும் லால் தனவாலா, ஐந்து முறை முதல்வராக இருந்த பழுத்த அரசியல்வாதி. இவரது அரசியல் அனுபவம் காங்கிரஸை இந்த முறையும் கரைசேர்த்துவிடும் என்பது, ராகுலின் நம்பிக்கை. தன்வாலாவுக்கு ஆட்சிரீதியாக இருக்கும் சிக்கல்களைவிட, கட்சிரீதியாக ஏகப்பட்ட சிக்கல்கள். தேர்தல் நெருங்கும் நேரத்தில், நான்கு எம்.எல்.ஏ-க்கள் எதிரணிக்குத் தாவிவிட்டனர். அதில் ஒருவர் உள்துறை அமைச்சராக இருந்த முக்கியத் தலைவர். இன்னும் சிலரும் கட்சி மாறலாம் என்ற தகவலால், தன்வாலாவுக்கு தலைவலி அதிகமாகி இருக்கிறது. முக்கிய எதிர்க்கட்சியான மிசோரம் தேசிய முன்னணி, பி.ஜே.பி 2016-ம் ஆண்டு அமைத்த வடகிழக்கு ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்தது. தேர்தலுக்குப் பின்பு ஒருவேளை மிசோரம் தேசிய முன்னணி அதிக இடங்களைப் பெற்றால், அந்தக் கட்சியை வளைத்துத் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கலாம் என்பது பி.ஜே.பி-யின் வியூகங்களில் ஒன்றாக இருக்கிறது.

டிசம்பர் 11-ம் தேதி, அரையிறுதி ஆட்டத்தின் முடிவு தெரிந்துவிடும்!

- சக்திவேல்