Published:Updated:

``ஹோட்டலில் கூடப் பன்னீரை ஆர்டர் செய்வதில்லை" - அ.ம.மு.க புகழேந்தி நக்கல்!

``ஹோட்டலில் கூடப் பன்னீரை ஆர்டர் செய்வதில்லை" - அ.ம.மு.க புகழேந்தி நக்கல்!
``ஹோட்டலில் கூடப் பன்னீரை ஆர்டர் செய்வதில்லை" - அ.ம.மு.க புகழேந்தி நக்கல்!

ஹோட்டலில் கூட நான் பன்னீரை ஆர்டர் செய்வதில்லை என்று அ.ம.மு.க-வின் புகழேந்தி கூறியுள்ளார்.

கோவையில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் அ.ம.மு.க கர்நாடக மாநிலச் செயலாளர் புகழேந்தி கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த புகழேந்தி, ``முத்தலாக் விவகாரத்தில், பா.ஜ.க கேவலமான அரசியலைச் செய்கிறது. முத்தலாக்குக்கு ஒரு நீதி, சபரிமலைக்கு ஒரு நீதியா, நாஞ்சில் சம்பத் மீண்டும் அ.ம.மு.க-வில் இணைந்தால் மிகவும் மகிழ்ச்சியடைவோம். நாடாளுமன்றத் தேர்தலில் அ.ம.மு.க மாபெரும் கூட்டணி அமைக்கும்.

வலுவான கூட்டணி அமைத்துள்ள தி.மு.க தலைவர் ஸ்டாலின், கரூரில் Not reachable செந்தில்பாலாஜியை நம்பி கட்சி நடத்துவது கூட்டணிக்கு பங்கம். ஓரிருவர் வெளியேறுவதால் அ.ம.மு.க-வுக்கு பாதிப்பு இல்லை. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் செல்வதும், அல்கொய்தாவிடம் தலையைக் கொடுப்பதும் ஒன்று. ஹோட்டலில்கூட பன்னீரை நான் ஆர்டர் கொடுப்பதில்லை. துரோகிகளை ஒழிக்கும் வரை தூங்கமாட்டோம். ஒரு சில அமைச்சர்களைத் தவிர அ.தி.மு.க-வினரை அ.ம.மு.க-வில் சேர்க்கத் தயார்.

அடிமை வாழ்விலே உண்மையான இஸ்லாமியராகப் பா.ஜ.க-வை விமர்சனம் செய்துள்ளார் அன்வர்ராஜா. அவரை நான் மனதார பாராட்டுகிறேன். அன்வர்ராஜா இப்போதுதான் ஜெயலலிதா வழியில் வந்த எம்.பி. போலப் பேசியுள்ளார். அன்வர்ராஜா அ.தி.மு.க-வில் இருந்து வெளியே வர வேண்டும். ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் இருவரும் மோடி சொல்வதைத்தான் கேட்பார்கள்.தேர்தலைச் சந்திக்க அ.ம.மு.க தயாராக உள்ளது” என்றார்.