Published:Updated:

`படர்தாமரை என்பது சீமானுக்கு உள்ள பிரச்னை ' - தமிழிசை கிண்டல்!

`படர்தாமரை என்பது சீமானுக்கு உள்ள பிரச்னை ' - தமிழிசை கிண்டல்!
`படர்தாமரை என்பது சீமானுக்கு உள்ள பிரச்னை ' - தமிழிசை கிண்டல்!

தமிழகத்தில் எய்ம்ஸ் அமைய காரணமாக இருக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பி.ஜே.பி-யினர்  பாராட்டுப் பொதுக்கூட்டம் நடத்தினர். இதில் தமிழிசை செளந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன், பேராசிரியர் ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பொன்னார் பேசுகையில், ``பிரதமர் மோடியின் முயற்சியால் மதுரையில் எய்ம்ஸ் அமைய உள்ளது. நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு பிரதமர் கொண்டு செல்கிறார். கூட்டணி இல்லாமல் தமிழகத்தில் எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது என்ற அடிப்படையில் தமிழகத்தில் பா.ஜ.க.வும் கூட்டணி அரசியல் செய்ய நினைக்கிறது. ஆனால், கூட்டணியை அகில இந்தியத் தலைவர்கள்தான் முடிவு செய்வார்கள். கூட்டணி முடிவாகும் வரையில் யாரும் பா.ஜ.க. கூட்டணியைப் பற்றி பேசக் கூடாது. பா.ஜ.க.வைப் பற்றி பேச தமிழகத்தில் எந்த அரசியல் கட்சிக்கும் யோக்கியதை இல்லை. 2014-ல் பா.ஜ.க. எப்படி மிகப்பெரிய வெற்றியை பெற்றதோ அதேபோல வரும் பாராளுமன்றத் தேர்தலில் குறைந்தது 350 தொகுதியை பா.ஜ.க.கைப்பற்றும். வரும் பாராளுமன்றத் தேர்தலில் பலமான கூட்டணியை தமிழகத்தில் பா.ஜ.க. அமைக்கும். தமிழகம்-புதுச்சேரி உள்ளிட்ட 40 பாராளுமன்றத் தொகுதிகளிலும் பா.ஜ.க.வெற்றி உறுதி என்று தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து பேசிய தமிழிசை, ``தாமரை மலருமா மலராதா என பா.ஜ.க-வினர் ஆராய்ச்சி செய்வதைவிட எதிர்க்கட்சி, மாற்றுக்கட்சியினர்தான் அதிக ஆர்வமாக உள்ளனர். நிச்சயமாக தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும். நாம் தமிழர் கட்சியின் சீமான் படர் தாமரைதான் வரும் என கூறி உள்ளார். அவருக்கு உள்ள பிரச்னையைப் பற்றி தான் அவர் யோசிக்கிறார். தமிழகத்தில் வளர் தாமரைதான் உள்ளது, வைகோ. கூறுவது எப்போதும் எதிர்மறையாகதான் இருக்கும். அதன்படி மோடி பிரதமராக மாட்டார் என கூறியதன் அடிப்படையில் 2019-ல் மோடி பிரதமர் ஆவதை உறுதிப்படுத்தும் வைகோவுக்கு நன்றி. எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரைக்கு தந்த மோடிக்கு மதுரை பாராளுமன்றத் தொகுதியின் வெற்றியை பரிசாகத் தருவோம். தாமரை ரத்தம் தண்ணீரில் மலராவிட்டாலும் தொண்டர்களின் வியர்வை, ரத்திலாவது மலர்ந்தே தீரும்'' என்றார்.