Published:Updated:

`பேரழிவை ஏற்படுத்திய `பிரதமர்' என்ற தலைப்பில் படம் எடுக்கலாம்!' - ஜிக்னேஷ் மேவானி

`பேரழிவை ஏற்படுத்திய `பிரதமர்' என்ற தலைப்பில் படம் எடுக்கலாம்!' - ஜிக்னேஷ் மேவானி
`பேரழிவை ஏற்படுத்திய `பிரதமர்' என்ற தலைப்பில் படம் எடுக்கலாம்!' - ஜிக்னேஷ் மேவானி

யக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் ஒருங்கிணைத்து நடத்திக் கொண்டிருக்கும் மூன்று நாள் சமூக நீதி கலைத் திருவிழாவில் கலந்து கொள்ள சென்னை வந்திருக்கிறார் ஜிக்னேஷ் மேவானி. குஜராத் வட்காம் தொகுதி எம்.எல்.ஏவும், உனா எழுச்சியைக்  கட்டமைத்தவருமான ஜிக்னேஷ், விகடனுக்கு பிரத்யேகமாக அளித்த நீண்ட நேர்காணலின் சிறு பகுதி இது.

மதவாத பா.ஜ.க அரசை எதிர்த்து அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைய வேண்டும் என்று அழைப்பு விடுத்திருக்கும் அவரிடம் பாலிவுட் இயக்குநர் அனுபம் கெரின் திரைப்படமான The accidental Prime minister பற்றிய கருத்து கேட்கப்பட்டது. ``காங்கிரஸின் மீது எல்லோருக்கும் விமர்சனம் இருக்கிறது. படம் வருவதற்கு முன்பாகவே படத்தை விமர்சிப்பதும் எதிர்ப்பதும் சங்கிகளின் வேலை. அதைச் செய்ய விருப்பமில்லை. ஆனால், ஒரு விஷயம் மட்டும் உண்மை. மதவாதத்தை வைத்து மட்டுமே பிழைத்துக்கொண்டிருக்கும் கட்சி ஒன்றுக்கு, பிரச்னைகளை திசை திருப்புவதற்கு ஏதோ ஒரு விஷயம் தேவைப்பட்டுக் கொண்டிருக்கும். இந்தப் படத்தினால் பா.ஜ.க-வினர் அடைந்திருக்கும் மகிழ்ச்சிக்கு அதுதான் காரணம்" என்றார்.

மேலும், `பாலிவுட் இயக்குநர்களை அணுகி, The Disastrous Prime minister என்று பிரதமர் மோடியை மையமாக வைத்து ஒரு படத்தை இயக்கினால், அந்தப் படம் ஷாரூக் கானின் படங்களைவிட பெரிய ப்ளாக் பஸ்டராக இருக்கும்' என்றார்.