Published:Updated:

பிரதமர் - சோனியா இடையே கருத்து வேறுபாடு

 பிரதமர் - சோனியா இடையே கருத்து வேறுபாடு
பிரதமர் - சோனியா இடையே கருத்து வேறுபாடு
 பிரதமர் - சோனியா இடையே கருத்து வேறுபாடு

புதுடெல்லி: 2ஜி ஊழல், ரயில்வே வாரிய லஞ்சம் என மத்திய அரசை குற்றம் சாட்டும் அனைத்து ஊழல்கள் குறித்தும் ஊடகங்களிடம் பிரதமர் மன்மோகன் சிங் விளக்கமளித்து பேச வேண்டும் என சோனியா விரும்புவதாகவும், ஆனால் இவ்விஷயத்தில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

அதுமட்டுமல்லாது ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சால் மற்றும் சட்டத்துறை அமைச்சர் அஸ்வினி குமார் ஆகியோரை பதவி விலகச் செய்வது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கருத்துவேறுபாடு நிலவுவதாகவும் டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த இரு அமைச்சர்களையும் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன்தான் நாடாளுமன்றத்தை பா.ஜனதா உள்ளிட்ட எதிர்கட்சிகள் தொடர்ந்து முடக்கி வருகின்றன.
இந்நிலையில் நாடாளுமன்ற முடக்கத்திற்கு தீர்வு காண்பது தொடர்பாக காங்கிரஸ் உயர்மட்டக் குழு இன்று டெல்லியில் கூடி ஆலோசித்தது.

நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கமல்நாத், மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே அந்தோணி உட்பட பலர் கலந்து கொண்ட இக்கூட்டத்தில், உணவு பாதுகாப்பு மசோதாவை கட்டாயம் நிறைவேற்ற வேண்டியதன் அவசியம் குறித்தும், நாடாளுமன்ற முடக்கத்திற்கு தீர்வு காண்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

##~~##
அப்போது அமைச்சர்கள் இருவரையும் ராஜினாமா செய்யுமாறு கோரலாம் என காங்கிரஸ் தலைவர்கள் சிலர் கூறியதாக தெரிகிறது.ஆனால் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு ஆதரவாக உள்ளதாகவும், அவர்களை பதவி நீக்க பிரதமர் எதிர்ப்பதாகவும் காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.
ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சாலும், சட்டத்துறை அமைச்சர் அஸ்வினி குமாரும் பிரதமருக்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்றும், அதனால்தான் அவர்களை ராஜினாமா செய்ய வைப்பதை மன்மோகன் கடுமையாக எதிர்ப்பதாகவும் அவ்வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.