Published:Updated:

`வெற்றிபெறக்கூடிய அளவுக்கு வியூகம்' - திருவாரூர் இடைத்தேர்தல் குறித்து ஸ்டாலின்!

`வெற்றிபெறக்கூடிய அளவுக்கு வியூகம்' - திருவாரூர் இடைத்தேர்தல் குறித்து ஸ்டாலின்!
`வெற்றிபெறக்கூடிய அளவுக்கு வியூகம்' - திருவாரூர் இடைத்தேர்தல் குறித்து ஸ்டாலின்!

'திருவாரூர் இடைத்தேர்தலில், வெற்றிபெறக்கூடிய அளவுக்கு எங்கள் வியூகம் இருக்கும்' என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

திருவாரூர் இடைத்தேர்தல் குறித்த அறிவிப்பை இன்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, வரும் ஜனவரி 28-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனவும், அதற்கான அறிவிப்பானை வரும் 3-ம் தேதி வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, வேட்புமனுத் தாக்கல் ஜனவரி 3-ம் தேதி தொடங்க உள்ளது. தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து கட்சிகள், வேட்பாளர் தேர்வில் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளன. அந்த வகையில், திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதி என டி.டி.வி.தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் அறிவித்துள்ளது. மேலும், வரும் 3-ம் தேதி, வேட்பாளர் யார் என்பதை அறிவிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

அ.ம.மு.க-வை அடுத்து, தி.மு.க வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வரும் 2,ந்ம் தேதிகளில் தி.மு.க சார்பில் தேர்தலில் போட்டியிட விரும்புவர்கள் விண்ணப்பங்களைத் தாக்கல் செய்யலாம் எனவும், அதற்கடுத்த நாள் வேட்பாளர் நேர்காணல் நடைபெறும் எனவும் அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது. இதற்கிடையே, சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்தார் தி.மு.க தலைவர் ஸ்டாலின். 

அப்போது, ``போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்கள், மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வேட்பாளர் அறிவிக்கப்படும். திருவாரூர் இடைத்தேர்தலில் வெற்றிபெறக்கூடிய அளவுக்கு எங்கள் வியூகம் இருக்கும். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய மாற்றம் இருக்கும்" என்றார். முன்னதாக, ஜெயலலிதா மரணம்குறித்து அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்த கருத்துகுறித்து பேசிய ஸ்டாலின், ``ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பது என்பது உண்மை. சட்டத்துறை அமைச்சரே கூறியதால் சொல்கிறேன், சிபிஐ விசாரணை நடத்தினால் உண்மை வெளிவரும்" என்று தெரிவித்துள்ளார்.