Published:Updated:

ராமதாஸ் மீது மேலும் ஒரு வழக்கு?

ராமதாஸ் மீது மேலும் ஒரு வழக்கு?
ராமதாஸ் மீது மேலும் ஒரு வழக்கு?
ராமதாஸ் மீது மேலும் ஒரு வழக்கு?

மதுரை: பா.ம.க. நிறுவனர் ராமதாசின் ஜாமீன் மனு, வருகின்ற 8ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், அவர் மீது அடுத்த வழக்கை போடுவதற்கு மதுரை போலீஸ் தயாராகி வருகிறது.

##~~##
ஒன்பது வருடங்களுக்கு முன்பு, மதுரையில் ரஜினி ரசிகர்களை தாக்கிய வழக்கில், சமீபத்தில் கைது செய்யப்பட்டார் ராமதாஸ். இதில் ஜாமீன் கோரி, மதுரை ஜெ.எம்.1வது கோர்ட்டில் நேற்று அவரது வக்கீல்கள் மனு செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி ரவி விசாரணையை 8ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
இந்த நிலையில், ஜாதி மோதலை தூண்டும் விதமாக கடந்தாண்டு மதுரையில் நடந்த கூட்டமொன்றில் ராமதாஸ் பேசியது சம்பந்தமாக மெய்யப்பன் என்பவர் கோர்ட்டில் மனு செய்திருந்தார். வழக்கு போடுவதற்கு முகாந்திரம் உள்ளதால், தல்லாகுளம் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கும்படி கோர்ட் உத்தரவிட்டிருந்தது.

இதன் அடிப்படையில், அந்த பழைய வழக்கை பதிவு செய்து ராமதாசை கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது மதுரை போலீஸ்.

-செ.சல்மான்