Published:Updated:

ஜி.எஸ்.டி.. ராமர் கோயில்.. தேர்தல் தோல்வி; பாய்ந்த கேள்விக் கணைகள்! - பிரதமர் மோடியின் மெகா இன்டர்வியூ

ஜி.எஸ்.டி.. ராமர் கோயில்.. தேர்தல் தோல்வி; பாய்ந்த கேள்விக் கணைகள்! - பிரதமர் மோடியின் மெகா இன்டர்வியூ
ஜி.எஸ்.டி.. ராமர் கோயில்.. தேர்தல் தோல்வி; பாய்ந்த கேள்விக் கணைகள்! - பிரதமர் மோடியின் மெகா இன்டர்வியூ

அடிக்கடி அரசு முறை பயணங்களாக வெளிநாடுகளுக்குப் பறக்கும்  பிரதமர் நரேந்திர மோடி, அவரின் ஆட்சிக் காலத்தில் ஒருமுறை கூட ஊடகங்கள்முன் தோன்றி செய்தியாளர்களை எதிர் கொள்ளாதது ஏன் என்னும் கேள்வியை பலர் எழுப்பி வருகின்றனர். விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் விதமாக முதல்முறையாக ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்துள்ளார் மோடி. 

ஜி.எஸ்.டி.. ராமர் கோயில்.. தேர்தல் தோல்வி; பாய்ந்த கேள்விக் கணைகள்! - பிரதமர் மோடியின் மெகா இன்டர்வியூ


 

2018-ம் ஆண்டு, மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்த ஆண்டு என்றே சொல்ல வேண்டும்.  குறிப்பாக, நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் பா.ஜ.க-வுக்கு பின்னடைவைக் கொடுத்தது. இதனால், வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல், மோடி அரசுக்கு பெரும் சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பா.ஜ.க-வுக்கு உறுதுணையாக இருந்துவரும் இந்துத்துவ அமைப்புகள், ராமர் கோயில் விவகாரத்தில் மோடிமீது அதிருப்தியில் உள்ளன. அயோத்தியில் மிகப்பெரிய  ராமர் கோயில் எழுப்பப்படும் என்று மோடி அரசு முந்தைய தேர்தலில் வாக்குறுதி கொடுத்திருந்தது. ஆனால், தற்போதுவரை பல சிக்கல்களுடன் ராமர் கோயில் விவகாரம் நிலுவையில் உள்ளது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது பா.ஜ.க-வுக்கு, நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும் என்ற கருத்து எழுந்துள்ளது. இந்நிலையில், வருடத்தின் முதல் நாளான இன்று,   ANI ஊடகத்துக்கு மோடி பேட்டியளித்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்தப் பேட்டியில், ராமர் கோயில் , சர்ஜிக்கல் ஸ்டரைக், முத்தலாக் போன்ற முக்கிய விவகாரங்கள் குறித்து மோடி பேசியுள்ளார். 

ஜி.எஸ்.டி.. ராமர் கோயில்.. தேர்தல் தோல்வி; பாய்ந்த கேள்விக் கணைகள்! - பிரதமர் மோடியின் மெகா இன்டர்வியூ


 

ராமர் கோயில் விவகாரத்தில் அவசரச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை எழுவது குறித்த கேள்விக்கு, மோடி கொடுத்த பதில் வருமாறு.   `ராமர் கோயில் விவகாரத்தில், நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. சட்டபூர்வமான  நடவடிக்கைகளை  காங்கிரஸ் தாமதப்படுத்தியது. மேலும், இந்த விஷயத்தில்  சட்ட நடைமுறைகள் முடிந்த பிறகுதான் அவசரச் சட்டம் கொண்டுவருவது பற்றி பரிசீலனை செய்யப்படும்’ என்றார். 

ஜி.எஸ்.டி.. ராமர் கோயில்.. தேர்தல் தோல்வி; பாய்ந்த கேள்விக் கணைகள்! - பிரதமர் மோடியின் மெகா இன்டர்வியூ


 

சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் ..

இந்திய ராணுவத்தின் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் பற்றிப் பேசிய மோடி,   `உரி ராணுவ முகாம்மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானேன்.   `சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்’  நம் ராணுவத்தின் துணிச்சலான நடவடிக்கை. வெற்றியோ தோல்வியோ.. பொழுது விடிவதற்குள் வந்துவிடுங்கள் என்று நம் ராணுவ வீரர்களுக்குச் சொல்லிஅனுப்பினேன்.  பயங்கரவாதிகள்மீது சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்  நடத்திய நம் ராணுவ வீரர்கள்குறித்து முதலில் கவலையடைந்தேன். காரணம், எந்த ஒரு ராணுவ வீரரும் உயிரிழக்கக் கூடாது என்பதில் நான் உறுதியாக இருந்தேன்’ என்று தெரிவித்துள்ளார்.

உர்ஜித் படேல் பதவி விலகல்..

உர்ஜித் படேல் பதவி விலகல் பற்றி பேசிய மோடி,  `ரிசரவ் வங்கி ஆளுநர்  உர்ஜித் படேல் தனிப்பட்ட காரணங்களுக்காகப் பதவியை ராஜினாமா  செய்யப்போவதாகக் கேட்டுக்கொண்டார். அவரின் ராஜிநாமா முடிவை சில மாதங்களுக்கு முன்னதாக என்னிடம் சொன்னார். அவர் சிறப்பாகப் பணியாற்றிவர். எனவே, அவர் பதவி விலகியதில் எந்த அரசியல் நிர்பந்தமும் இல்லை’ என்றார். 

பணமதிப்பிழப்பு.. 

பணமதிப்பிழப்பு நடவடிக்கை பற்றிய கேள்விக்குப் பதிலளித்த மோடி, ‘பணமதிப்பிழப்பு நடவடிக்கை திடீரென செயல்படுத்தியது அல்ல. அது அவசர அவசரமாக எடுக்கப்பட்ட நடவடிக்கைக் கிடையாது. தெளிவாகத் திட்டமிட்டு செயல்படுத்தினோம். அதனைச் செயல்படுத்துவதற்கு ஒராண்டு முன்னரே, கறுப்பு பணம் வைத்திருப்பவர்கள் வங்கிகளில் அபராதத் தொகையுடன் டெபாசிட் செய்துவிடுங்கள் என்று எச்சரித்தோம். சிலர் மட்டுமே அந்த எச்சரிக்கையைக் காதில் வாங்கிக் கொண்டனர்’ என்று தெரிவித்தார்.

ஜி.எஸ்.டி.. ராமர் கோயில்.. தேர்தல் தோல்வி; பாய்ந்த கேள்விக் கணைகள்! - பிரதமர் மோடியின் மெகா இன்டர்வியூ


 

5 மாநில தேர்தல்..

5 மாநில தேர்தல் பற்றிப் பேசிய மோடி, `ஆமாம், நாங்கள் சத்தீஸ்கரில் தோற்றுப்போனது உண்மைதான், தோல்விக்கான காரணத்தை ஆராய்ந்துவருகிறோம். மத்தியப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் எந்தக் கட்சியும் பெரும்பான்மை வெற்றிபெறவில்லை. அதனால், கவலையில்லை. மேலும் மோடி அலைமீது எனக்கு நம்பிக்கை இல்லை. இந்த ஆண்டு பா.ஜ.க-வுக்கு ஒரு வெற்றிகரமான ஆண்டு. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் வாயிலாகப் பல லட்சம் வீடுகளுக்கு மின்சாரம் வழங்கியிருக்கிறோம். இன்னும் நிறையத் திட்டங்களை செயல்படுத்தினோம். இந்தியாவுக்கே 2018 சிறந்த ஆண்டாக அமைந்திருக்கிறது. 

ஜி.எஸ்.டி ..

ஜி.எஸ்.டி குறித்த கேள்விக்கு பதிலளித்த மோடி,  `ஜி.எஸ்.டி வரிவிதிப்பால் சிறு குறு தொழில் முனைவோர் பாதிக்கப்பட்டது உண்மைதான். அவர்களின் நிலையை மேம்படுத்த நாங்கள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். மேலும் ஜி.எஸ்.டி வரிவிதிப்பு எதிர்க்கட்சிகள் முன்னெடுத்த திட்டம்தான். பிரனாப் முகர்ஜி நிதியமைச்சராக இருந்த காலகட்டத்தில் இருந்தே ஜி.எஸ்.டி வரிவிதிப்பைச் செயல்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன’ என்றார்.
 

இறுதியாக, `2019 நாடாளுமன்றத் தேர்தல், மக்களுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையிலான மோதலாக இருக்கும்’  என்று மோடி உறுதியாக குறிப்பிட்டுள்ளார். 

அடுத்த கட்டுரைக்கு