Published:Updated:

ஜெ. மர்மம் to தமிழக அரசு துரோகம்: 4 நிமிட வாசிப்பில் ஜூ.வி.யின் 8 துளிகள்!

ஜெ. மர்மம் to தமிழக அரசு துரோகம்: 4 நிமிட வாசிப்பில் ஜூ.வி.யின் 8 துளிகள்!
ஜெ. மர்மம் to தமிழக அரசு துரோகம்: 4 நிமிட வாசிப்பில் ஜூ.வி.யின் 8 துளிகள்!

இந்த இதழ் ஜூனியர் விகடன்:  https://bit.ly/2GP5TP7

ஜெ. மர்மம் to தமிழக அரசு துரோகம்: 4 நிமிட வாசிப்பில் ஜூ.வி.யின் 8 துளிகள்!

``ஆஞ்சியோகிராம் சிகிச்சை செய்திருந்தால் ஜெயலலிதா பிழைத்திருப்பார். அதைச் செய்யவிடாமல் ஆட்டிப்படைத்த சக்தி யார்?' என்கிற சி.வி.சண்முகத்தின் கேள்விக்குப் பதில் அளிக்கவேண்டிய நிர்பந்தம் அப்போலோவுக்கு ஏற்பட்டிருக்கிறது. இதுதவிர, அப்போலோவை நோக்கி ஆணையம் கடுமைகாட்டப் பல காரணங்கள் உள்ளன. ஜெயலலிதாவுக்கு இதய நோய் இருந்தது என்பது அவர் அனுமதிக்கப்பட்ட போதே மருத்துவர்கள் கண்டறிந்தனர். அவருக்கான சிகிச்சைகளை மேற்கொள்ளப் பல்வேறு சிறப்பு மருத்துவக்குழுக்களை நியமித்த அப்போலோ நிர்வாகம், இதய அறுவை சிகிச்சை நிபுணர் யாரையும் நியமிக்கவில்லை என்கிறார்கள்."

ஜெ. மர்மம் to தமிழக அரசு துரோகம்: 4 நிமிட வாசிப்பில் ஜூ.வி.யின் 8 துளிகள்!

- ஜெ. மரண மர்மம் பின்னணியில் ஏகப்பட்ட திருப்பங்களை 'ஆத்திரத்தில் அப்போலோ! - சிக்கலில் சசிகலா!' எனும் தலைப்பில் அலசி புதிய தகவல்களைத் தந்துள்ள மிஸ்டர் கழுகு, தினகரன் தரப்பை ஒதுக்கும் முடிவுக்கு சசிகலா தரப்பு வந்துவிட்டது என்று ஒருபேச்சு ஓடுவது பற்றியும் உள்ளரசியல் பகிர்ந்துள்ளார்.

``தி.மு.க-வை 'வாரிசுக் கட்சி' என்று விமர்சித்தவர் விஜயகாந்த். தே.மு.தி.க-வில் விஜயகாந்த் மனைவியும், மைத்துனரும் முக்கியப் பொறுப்புகளை வகிக்கிறார்கள். இப்போது நீங்களும் வருகிறீர்கள். அப்படி என்றால், தே.மு.தி.க-வும் வாரிசுக் கட்சிதானே?" 

``தி.மு.க., அண்ணா தொடங்கிய கட்சி. அண்ணாவுக்குப் பிறகுதான் கருணாநிதி வருகிறார். கருணாநிதி, தன் மூன்று பிள்ளைகளை தி.மு.க-வில் முன்னிலைப்படுத்தினார். தே.மு.தி.க அப்படியல்ல. இது, கேப்டன் ஆரம்பித்த கட்சி. இதில், எனக்கு எந்தப் பதவியும் இல்லை. கேப்டனுக்காகவே கட்சியில் இருக்கிறேன். எனக்கு அரசியலில் ஆர்வம் இருக்கிறது. அதற்காக நான் அ.தி.மு.க-விலோ, தி.மு.க-விலோ சேர முடியாது. இதுதான் என் கட்சி. எனக்குப் பதவிகள் முக்கியம் அல்ல. தவிர, ஒருபோதும் என்னை இங்கு முன்னிறுத்த மாட்டேன்."

ஜெ. மர்மம் to தமிழக அரசு துரோகம்: 4 நிமிட வாசிப்பில் ஜூ.வி.யின் 8 துளிகள்!

- திடீரென அரசியல் என்ட்ரி கொடுத்துள்ள விஜயகாந்த்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் பேட்டி இது. உங்கள் அரசியல் பிரவேசத்தை சுதீஷ் விரும்பவில்லை என்று சொல்லப்படுகிறதே? "அரசியலிலிருந்து விஜயகாந்த் ஒதுங்கியிருப்பதால், தொண்டர்கள் சோர்வாக இருக்கிறார்களா? ``மத்தியிலும் மாநிலத்திலும் நடந்துவரும் ஆட்சி குறித்து..?"என பல முக்கிய கேள்விகளுக்கும் பதிலளித்துள்ள `தமிழக முதல்வருக்கு நிர்வாகத்திறனே இல்லை! - விளாசும் விஜய பிரபாகரன்' எனும் பேட்டி இன்றைய அரசியலில் கவனிக்கத்தக்கது. 

சந்திரசேகர் ராவின் மூன்றாம் அணி முயற்சியின்மீது வைக்கப்படும் முக்கிய விமர்சனம், இது ஓட்டுகளைப் பிரிப்பதற்கான பி.ஜே.பி-யின் `பி டீம்' என்பதே. அமித் ஷாவின் அம்பு அவர்' என்றும் ராவ் மீது சந்தேகம் கிளப்புகிறார்கள். எனவேதான், ``தேசியக் கட்சிகளின் குடுமி மாநிலக் கட்சிகளின் கையில் இருக்கிறது" என்ற ராவின் வார்த்தைகளுக்கு, பிற மாநிலக் கட்சிகளின் தலைவர்களிடமே வரவேற்பு இல்லை. இதை, ``ராவ் மூலமாக ராகுலுக்கு பி.ஜே.பி செக் வைக்கிறது. எதிர்க்கட்சிகளின் வாக்குகளைப் பிரித்து, மோடியை மீண்டும் அரியணை அமர்த்தவே ராவ் முயற்சி செய்கிறார்" என்பது அரசியல் நோக்கர்களின் கருத்தாக இருக்கிறது.

ஜெ. மர்மம் to தமிழக அரசு துரோகம்: 4 நிமிட வாசிப்பில் ஜூ.வி.யின் 8 துளிகள்!

இந்த இதழ் ஜூனியர் விகடன்:  https://bit.ly/2GP5TP7

- விரிவான அலசல் பார்வையை முன்வைக்கிறது 'பி.ஜே.பி-யின் பி டீம் சந்திரசேகர ராவ்? - மூன்றாம் அணி முயற்சியின் பின்னணி...' எனும் சிறப்புக் கட்டுரை.

ஜெ. மர்மம் to தமிழக அரசு துரோகம்: 4 நிமிட வாசிப்பில் ஜூ.வி.யின் 8 துளிகள்!

``தடை என்பதில் எங்களுக்கு மாற்றுக்கருத்து இல்லை, ஆனால், 2017-ம் ஆண்டு வரைக்கும் பிளாஸ்டிக் பொருள்கள் உற்பத்தி நிறுவனங்கள் தொடங்க அனுமதி கொடுத்துவிட்டு, அவற்றை நிறுத்தச் சொல்வது நியாயமல்ல." 

பிளாஸ்டிக் தடை குறித்து அரசு வெளியிட்ட அரசாணையில் குழப்பங்கள் இருப்பதாக, சூழலியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருள்களை ஒழிப்பது, வெளிமாநிலங்களிலிருந்து கொண்டுவரப்படும் பிளாஸ்டிக் பொருள்களைக் கையாள்வது உள்ளிட்ட பல கேள்விகளுக்கு இதுவரை விடை இல்லை... 

- 'தமிழக அரசின் புத்தாண்டுப் பரிசு! - அமலுக்கு வந்தது பிளாஸ்டிக் தடை' எனும் செய்திக் கட்டுரை பல்வேறு கோணங்களில் இந்த விஷயத்தை அலசியிருக்கிறது.

ஜெ. மர்மம் to தமிழக அரசு துரோகம்: 4 நிமிட வாசிப்பில் ஜூ.வி.யின் 8 துளிகள்!

ஹெச்.ஐ.வி தொற்று உள்ள ரத்தத்தைக் கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஏற்றியதால் தமிழக அரசு மீது கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இலவச வீடு, அவரின் கணவருக்கு அரசு வேலை என்று பல அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், அந்தப் பெண்ணுக்குச் செலுத்தப்பட்ட ரத்தத்தை வழங்கிய இளைஞர் மரணமடைந்திருப்பது சர்ச்சையை மேலும் அதிகரித்துள்ளது.  

சாத்தூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிப் பெண்ணைச் சேர்த்த பிறகுதான் அவரின் ரத்தத்தில் ஹெச்.ஐ.வி தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக சாத்தூர் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் அதற்கு முன்பே, ரத்தம் வழங்கிய இளைஞர் தன் ரத்தத்தில் ஹெச்.ஐ.வி இருப்பதால் 'யாருக்கும் அதைக் கொடுக்காதீர்கள்' என சிவகாசி ரத்த வங்கியில் கூறிவிட்டு வந்ததாகச் சொல்லப்படுகிறது.

ரத்தம் கொடுத்து மரணமடைந்துள்ள வாலிபர் தனக்கு ஹெச்.ஐ.வி பாசிட்டிவ் இருக்கும் தகவலை வெளிப்படையாகச் சொன்னதால்தான், அந்த விவகாரம் வெளியே தெரிந்தது. அதன் பிறகு, அந்த வாலிபரைப் பற்றி முழுமையாக விசாரித்தது, காவல்துறை.

- பல சந்தேகங்களையும், அதிர்ச்சியூட்டும் தகவல்களையும் சொல்கிறது 'கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி ரத்தம்... இளைஞரின் மரணத்தில் சந்தேகம்!' எனும் செய்திக் கட்டுரை.

ஜெ. மர்மம் to தமிழக அரசு துரோகம்: 4 நிமிட வாசிப்பில் ஜூ.வி.யின் 8 துளிகள்!

தவித்த வாய்க்குத் தண்ணீர் கொடுப்பதுதான் தமிழர் பண்பாடு. அந்தத் தண்ணீர் விநியோகத்தைத் தனியாரிடம் கொடுத்து, வணிகப் பண்டமாக்கி மக்களைத் தவிக்கவிடும் நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கியுள்ளது தமிழக அரசு. ஏற்கெனவே, கோவையில் இதற்கான பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், தற்போது மதுரை மற்றும் திருச்சி நகரங்களிலும் இதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்கு மக்களிடம் கடும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. பொதுமக்களிடமிருந்து கடும் எதிர்ப்பு வரும் என்பதால், இதற்கான வேலைகளை மாநகராட்சி நிர்வாகம் மிகவும் ரகசியமாகச் செய்துவருகிறது என்று சொல்லப்படுகிறது...

``குடிநீர் இணைப்புகளில் மீட்டர் பொருத்தும் பணி நடக்கிறது. மக்களிடம் 24 மணி நேரமும் தண்ணீர் வரும் என்று கூறுகிறார்கள். அதனால், மீட்டர் பொருத்த மக்கள் அனுமதிக்கிறார்கள். இந்தப் பணியை எந்த நிறுவனம் எடுத்துள்ளது, யார் செய்கிறார்கள் என்பதையெல்லாம் மக்களிடம் இருந்து மறைத்துள்ளனர்..."

- கோவை, திருச்சியைத் தொடர்ந்து மதுரையிலும் போராட்டத்துக்கு வித்திட்டுள்ள மிக முக்கிய பிரச்னை குறித்த 'குடிநீர் தனியார்மயம் - மக்களுக்குத் துரோகம் இழைக்கிறதா அரசு?' எனும் ஜூனியர் விகடன் ஸ்பெஷல் ஸ்டோரி கவனத்துக்குரியது.

ஜெ. மர்மம் to தமிழக அரசு துரோகம்: 4 நிமிட வாசிப்பில் ஜூ.வி.யின் 8 துளிகள்!


திருமணம் முடிந்த சில மணி நேரத்தில், 'இவர் ஏற்கெனவே பல பெண்களை ஏமாற்றியிருக்கிறார்' என்று சக்தி மீதும், 'அந்த உண்மைகள் தெரிந்தும் பாதிக்கப்பட்ட பெண்களின் பக்கம் நிற்காமல் சக்தியைத் திருமணம் செய்துகொள்கிறார்' என்று கவுசல்யா மீதும் சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் கவுசல்யா-சக்தி ஆகியோரிடமும் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் தலைமைக்குழு உறுப்பினர் தியாகு, திராவிடர்-விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகிய இருவரும் விசாரணை நடத்தி, அதன் முடிவாகக் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளார்கள். அந்த அறிக்கைதான் இப்போது அதிர வைத்திருக்கிறது...

இந்த விஷயத்தில் கொளத்தூர் மணி மற்றும் அவர் சார்ந்தோர் மேற்கொண்ட இந்த முயற்சிகளை ஒரு சாரார் வரவேற்றாலும், சிவில் சட்டம் நடைமுறையில் உள்ள ஒரு நாட்டில், இதுபோன்று ஒரு தனிப்பட்ட அமைப்பு இந்த விஷயத்தை அணுக முடியுமா என்றும் வேறொரு சாரார் கேள்வி எழுப்புகின்றனர். 

- தியாகு - கொளத்தூர் மணி கூட்டறிக்கையின் முக்கிய அம்சங்களையும், அவர்களது கருத்தையும் கேட்டுப் பதிவு செய்துள்ளது 'மன்னிப்புக் கேட்டார் சக்தி... வருத்தம் தெரிவித்தார் கவுசல்யா! - பைசல் செய்யப்பட்டதா கல்யாண சர்ச்சை?' எனும் செய்திக் கட்டுரை. 

ஜெ. மர்மம் to தமிழக அரசு துரோகம்: 4 நிமிட வாசிப்பில் ஜூ.வி.யின் 8 துளிகள்!

திருவண்ணாமலை மாவட்டம் நீப்பத்துறையைச் சேர்ந்தவர் சண்முகம். தி.மு.க அனுதாபியாக இருந்தவர், அ.தி.மு.க-வை எம்.ஜி.ஆர் தொடங்கியபோது, அதில் இணைந்து, செங்கம் ஒன்றியச் செயலாளராகவும் பதவி வகித்தார். அ.தி.மு.க-வில் தனக்குள்ள உள்ளூர் செல்வாக்கை வைத்துத் தன் மனைவி வனரோஜாவுக்கு சத்துணவு அமைப்பாளர் வேலை வாங்கிக்கொடுத்தார். பின்னர் சந்தனமரக் கடத்தல் வழக்கில் சிக்கியதால், அ.தி.மு.க-விலிருந்து அவரை ஜெயலலிதா நீக்கினார். இதனால், தன் மனைவியை அ.தி.மு.க-வில் சேர்த்தவர், பின்னணியில் இருந்து அவரை இயக்கினார். அவர்தான் இன்றைய திருவண்ணாமலை எம்.பி வனரோஜா. 

2014 நாடாளுமன்றத் தேர்தல் நேரம் அது. திருவண்ணாமலை தொகுதிக்கு முன்னாள் பால்வளத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் சீட் கேட்டிருந்தார். அந்த நேரத்தில் அவருக்கு எதிராக அரசியல் செய்த அப்போதைய அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியைச் சந்தித்தார் சண்முகம். அக்ரியின் அரசியல் சதுரங்க ஆட்டத்தில், ராமசந்திரனுக்கு சீட் கிடைக்கவில்லை. பதிலாக, வனரோஜாவுக்கு அவர் சிபாரிசு செய்தார். அ.தி.மு.க வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்ற வனரோஜா, எம்.பி-யாகவும் வெற்றி பெற்றுவிட்டார். கணவரின் வழிகாட்டலில் எம்.பி பதவி வரை உயர்ந்த வனரோஜா, திருவண்ணாமலை தொகுதி மக்களுக்காக என்ன செய்தார் என்பதை ஆராய்ந்து அலசியிருக்கிறது 'என்ன செய்தார் எம்.பி?' தொடர் பகுதி.

இந்த வார ஜூனியர் விகடன் இதழை வாங்க... இந்த லிங்கைக் க்ளிக் பண்ணுங்க:  https://bit.ly/2QgrJdL