Published:Updated:

`நிவாரணப் பொருள்கள் பேக் செய்வதிலும் ஊழல்!’ - அ.தி.மு.க அரசை விளாசும் வாசுகி

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு புயலால் பாதிக்கபட்ட மக்களுக்குக் கொடுக்கும் 27 நிவாரணப் பொருள்கள் பேக் செய்வதில்கூட ஊழல் செய்கிறது. நிவாரணப் பொருள்களை ஐந்து ரூபாய்க்கு பேக் செய்துவிட்டு 15 ரூபாய் என பில் வாங்கிக்கொண்டு ஊழல் செய்கின்றனர். இந்த நேரத்திலாவது தமிழக அமைச்சர்கள் ஊழல் செய்வதை நிறுத்தி வைத்து கொள்ளலாம் எனத் தஞ்சாவூரில் அனைத்துக் கடன்களையும் ரத்து செய்ய வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் அனைந்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் வாசுகி தெரிவித்தார்.

`நிவாரணப் பொருள்கள் பேக் செய்வதிலும் ஊழல்!’ - அ.தி.மு.க அரசை விளாசும் வாசுகி
`நிவாரணப் பொருள்கள் பேக் செய்வதிலும் ஊழல்!’ - அ.தி.மு.க அரசை விளாசும் வாசுகி

`எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கொடுக்கும் 27 நிவாரணப் பொருள்கள் பேக் செய்வதில்கூட ஊழல் செய்கிறது. நிவாரணப் பொருள்களை  ஐந்து ரூபாய்க்கு பேக் செய்துவிட்டு 15 ரூபாய் என பில் வாங்கிக்கொண்டு ஊழல் செய்கின்றனர். இந்த நேரத்திலாவது தமிழக அமைச்சர்கள் ஊழல் செய்வதை நிறுத்தி வைத்துக்கொள்ளலாம்’ எனத் தஞ்சாவூரில் அனைத்துக் கடன்களையும் ரத்து செய்ய வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் அனைந்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணை த்தலைவர் வாசுகி தெரிவித்தார்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அனைத்துக் கடன்களையும் ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம், அனைந்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகம் எதிரே தொடர் காத்திருப்புப் போராட்டத்தைத் தொடங்கி நடத்தி வருகின்றனர். இதற்கான உத்தரவு வரும் வரை இந்தப் போராட்டம் நடைபெறும் என்றும் தெரிவித்தனர். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள், ஏராளமான விவசாயிகள் எனப் பலர் கலந்துகொண்டனர். இதற்காக, பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது.

இதில் கலந்துகொண்ட அனைந்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் வாசுகி பேசியதாவது, ``புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கு கையில் என்ன ஜீபூம்பா வா இருக்கிறது உடனே வழங்குவதற்கு எனத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். கேராளாவில் இதைவிட கடுமையான பாதிப்பு ஏற்பட்டபோது அந்த மாநிலத்தின் முதல்வர் பினராயி விஜயன் அனைத்து மக்களுக்கும் எந்த வேறுபாடுமின்றி நிவாரணங்களை வழங்கினார். அவர் என்ன கையில் ஜீபூம்பா வைத்திருந்தாரா.

அதோடு தனியார் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் என அனைவரும் கொடுத்த நிவாரணத் தொகையை சரியான முறையில் பயன்படுத்தி அதற்கான வரவு செலவு கணக்குகளைத் தெளிவாக வைத்திருக்கிறார். ஆனால், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு 27 நிவாரணப் பொருள்கள் பேக் செய்வதில்கூட ஊழல் செய்கிறது. நிவாரணப் பொருள்களை  ரூ. 5-க்கு பேக் செய்துவிட்டு 15 ரூபாய் என பில் வாங்குகின்றனர். இந்த நேரத்திலாவது தமிழக அமைச்சர்கள் ஊழல் செய்வதைக் கொஞ்ச நாளைக்கு நிறுத்திவைத்துக் கொள்ளலாம். நெட்டையாக இருந்த தென்னை மரங்கள் எல்லாம் விழுந்து கிடக்கு, ஒரு மரத்துக்கு 1,100 ரூபாய் நிவாரணம் தொகை என அறிவித்து இருப்பது எள்ளவுக்குக்கூட அரசுக்கு மனிதாபிமானம் இல்லை என்பதைக் காட்டுகிறது.

ஊரே இருளில் மூழ்கிக் கிடக்கும்போது அமைச்சர் வீட்டுக்கு இரண்டு ஜெனரேட்டர் வைத்து மின்சாரம் கொடுத்தால் மக்கள் கோபப்படத்தான் செய்வார்கள். மேலும், இது போன்று நடந்துகொள்வததால்தான் அமைச்சர்களை விரட்டி அடித்தனர். திருவாரூர் இடைத்தேர்தலைக் காரணம் காட்டி அங்கு நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கிறது, அதனால் நிவாரணங்கள் கொடுக்கவில்லை. நாங்கள் கொடுக்க நினைத்தாலும் செய்ய முடியாது என அரசு கூறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. கலெக்டர் நினைத்தால் திருவாரூரில் உடனடியாக நிவாரணத்தை வழங்கலாம். மக்கள் பல்வேறு துயரங்களுக்கு ஆளாகி இருக்கின்ற இந்தச் சூழ்நிலையில் விவசாயக்கடன், கல்விக் கடன், பெண்கள் வாங்கியுள்ள சுய உதவிக் குழுக் கடன் என அனைத்து கடன்களையும் ரத்து செய்ய வேண்டும் அதற்கான உத்தரவை பெறும் வரை இந்தக் காத்திருப்புப் போராட்டம் தொடரும்’’ என்றார்.