எமர்ஜென்சிக்குப் பிறகு, இந்திரா காந்திக்கு எதிராக நடந்த தேர்தலை நாடே எதிர்பார்த்தது. அதேபோன்ற அலை இப்போது கிளம்பியிருக்கிறது. இந்த முறை மோடிக்கு எதிராக யுத்தம் தயாராகிவருகிறது. படைத் திரட்டல்கள் வேகமெடுக்கின்றன. மோடி எனும் பலசாலியை எதிர்க்கும் படையின் அதிகாரபூர்வமற்ற பெயர், ‘மகாகத்பந்தன்’ (மெகா கூட்டணி). இன்னும் சில மாதங்களில், ‘முன்னணி’ என்றோ, ‘கூட்டணி’ என்றோ பெயரை எதிர்பார்க்கலாம். இது முதல் அணியா, இரண்டாம் அணியா என்பது தெரியவில்லை. ஆனால், முக்கிய அணி. அந்த அணியின் முகங்களாக இருப்பவர்கள் இரண்டு பேர் ... சந்திரபாபு நாயுடு மற்றும் மம்தா பானர்ஜி.

ஆந்திர அரசியல் வட்டாரத்தில், சந்திரபாபு நாயுடுவை ‘யூ - டர்ன் அரசியல்வாதி’ என்பார்கள். எவரை ஆதரிக்கிறாரோ, அவரையே எதிர்ப்பார். எவரை எதிர்க்கிறாரோ, அவரையே ஆதரிப்பார். என்ன... அல்வா கொடுப்பதற்குப் பதிலாக லட்டு கொடுப்பார். அவரிடம், முதல் லட்டு வாங்கிய அதிர்ஷ்டசாலி, அவரின் மாமனார் என்.டி.ராமாராவ். ‘அல்ட்ரா மாடர்ன்’ அரசியல்வாதி சந்திரபாபு நாயுடு, பில்கேட்ஸை ஹைதராபாத் துக்கு அழைத்துவந்து அசத்தினார். கூகுள் கம்பெனி அலுவலகம் திறக்கும் அளவுக்கு ஹைதராபாத் வளர்ந்தது. அந்த நகரம், இப்போது தெலுங்கானாவிடம் இருக்கிறது. அதனாலென்ன? அமராவதியை ‘பாகுபலி’ மாதிரி பிரமாண்டமாக உருவாக்கிக்கொண்டிருக்கிறார் நாயுடு. ‘விட்டதைப் பிடிக்காமல் விடமாட்டார்’ என்கிறார்கள் ஆந்திரவாலாக்கள்.

அடுத்து, மம்தா பானர்ஜி. சுவாரஸ்யமான அரசியல்வாதி. பணமதிப்பிழப்பு விவகாரத்தை வைத்து, ‘அமளிதுமளி அறிக்கைகள், அதிரடிப் பேட்டிகள், அசத்தல் போராட்டங்கள்’ என்று கலக்கியெடுத்தார். ‘குஜராத்தின் சிங்கமா... வங்கத்தின் புலியா... பார்த்துவிடலாம்’ என்று பாய்ந்தார். இந்திராவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் அதிக உயரம் தொட்ட பெண் அரசியல்வாதி. எம்.எல்.ஏ., எம்.பி., ரயில்வே அமைச்சர், முதலமைச்சர் என்று மம்தாவின் அரசியல் அத்தியாயங்கள் அபாரமானவை. 33 ஆண்டுகால கம்யூனிஸ்ட் ஆட்சியைக் காலிசெய்த காளி!

நாயுடுவும் மம்தாவும் முன்னெடுக்கும் கூட்டணியைப் பார்க்கலாம். கொல்கத்தாவில் மம்தா பானர்ஜியைச் சந்தித்துவிட்டு வெளியே வருகிறார் சந்திரபாபு நாயுடு. செய்தியாளர்கள், ‘இந்தக் கூட்டணியின் முகம் யார்?’ என்று கேட்கிறார்கள். அதாவது, ‘உங்களில் பிரதமர் வேட்பாளர் யார்?’ என்பதே கேள்வி. சந்திரபாபு நாயுடு, ‘எல்லோருமே இந்தக் கூட்டணியின் முகம்தான்’ என்று சமாளிக்கிறார். இதுதான், இந்தக் கூட்டணியின் பிரதானப் பிரச்னை.

மம்தாவும் பிரதமராக ஆசைப்படுகிறார். சந்திரபாபு நாயுடுவுக்கும் அந்த ஆசை இருக்கிறது.

இவர்களுக்கு எதிர்புறம் இருக்கும் மோடியை எல்லா விதங்களிலும் இந்திராவுடன் ஒப்பிடுகிறார்கள். இந்திராவைப்போலவே, மோடியும் சர்வதேச அரசியல் முகமாக மாற முயற்சிப்பவராக இருக்கிறார். எப்படி ரஷ்யா என்றதும் புதின் நினைவுக்கு வருவாரோ, அதேபோல, இந்தியா என்றதும் மோடி நினைவுக்கு வர வேண்டும் என்று மோடி நினைக்கிறார். இது வெளிப்படை!

இந்திரா வங்கதேசத்தில் ஆர்வம் காட்டினார். மோடி, பலுசிஸ்தானில் ஆர்வம் காட்டுகிறார். மோடி, ‘என்னைக் கொல்ல சதி’ என்று எப்படிச் சொல்கிறாரோ, ‘என்னைக் கொல்ல சதி செய்கிறார்கள்’ என்று இந்திராவும் அந்தக் காலத்தில் அடிக்கடி சொன்னார். இந்திரா ‘எமர்ஜென்ஸி’ என்னும் மாபெரும் தவற்றைச் செய்தார். மோடி ‘பண மதிப்பிழப்பு’ நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட மக்களின் சோகம் இன்னும் தீரவில்லை.

எமர்ஜென்ஸியின்போது எழுந்துவந்த மகத்தான தலைவன் ஜெயப்பிரகாஷ் நாராயணனை நாயுடுவும், மம்தாவும் நினைவுகூர்வது நல்லது. ஆம், இருவரும் இப்போது மனதில் இருத்திக் கொள்ள வேண்டிய பெயர்... ஜெயப்பிரகாஷ் நாராயணன். 80-களில் சோசலிசம் என்ற வார்த்தை இந்தியா முழுக்க உச்சரிக்கப்படக் காரணமாக இருந்தவர் அவர். இந்திரா உச்சக்கட்ட அதிகாரத் தோரணையில் இருந்தபோது, வெகுண் டெழுந்த வேட்டைக்காரன் அவர். கூட்டணிக் கட்சிகளை வில்லென ஏந்தி, கூட்டணி தர்மத்தைக் கடைபிடித்து, ஜனநாயகத்தின் துணையுடன் இந்திராவை அசைத்த அந்த சாகசன், ஜனதா அமைத்த ஜனப்பிரியன்!

ஜெயப்பிரகாஷ் நாராயணனிடம் தெளிவு இருந்தது. தனிப்பட்ட பலன்களை அவர் கருத்தில் கொள்ளவில்லை. ‘இந்திராவை வீழ்த்துதல்’ என்பது மட்டுமே, அவரது இலக்காக இருந்தது. எமர்ஜென்ஸியின்போது அவரை நாசிக் சிறையில் அடைக்கிறார் இந்திரா. சிறையில் சிறுநீரகம் செயலிழக்கிறது. உடல்நிலை மோசமாகிறது. அங்கிருந்தபடியே ஜெயப் பிரகாஷ் நாராயணன், ‘இந்த அராஜகப் பெண்ணை வீழ்த்திக்காட்டுவேன்’ என்று சூளுரைத்தார்... வீழ்த்தியும் காட்டினார். இந்தியாவில் காங்கிரஸ் அல்லாத முதல் அரசு ஜனதா அரசு. காங்கிரஸ் அல்லாத முதல் பிரதமர் மொரார்ஜி தேசாய். இப்படி பல ‘முதல்’களுக்குக் காரணமாக இருந்த சூத்திரதாரி, ஜெயப்பிரகாஷ் நாராயணன். அவர் உருவாக்கியவர்கள்தான் இப்போது வட இந்தியாவின் மிக முக்கிய அரசியல்வாதிகள். லாலு, நிதிஷ் என்று பெரிய பட்டாளமே இருக்கிறது.

சந்திரபாபு மற்றும் மம்தாவின் வழியும், ஜெயப்பிரகாஷின் வழியாக இருக்குமா? அந்தப் பக்கம் அமித் ஷா அமைதியாகக் காத்திருக்கிறார். அவர், ‘ஓர் உறைக்குள் ஒரு கத்திதான் இருக்க முடியும்’ என்று சந்திரபாபுவும் மம்தாவும் முட்டிக்கொள்ளக் காத்திருக்கிறார். அப்போது இடையில் புகுந்து ஆட்டையைக் கலைக்கப் பெரும் திட்டங்கள் அவர்களிடம் உண்டு. அதைக் கடப்பதில்தான் இருக்கிறது இவர்களின் நேர்மையும் நம்பகத்தன்மையும், கூடவே வெற்றியும்.

மாநிலக் கட்சிகள் மத்திய அரசியலைத் தீர்மானிக்கும் இடத்துக்கு வருவது, எல்லா விதங்களிலும் மக்களுக்கு நல்லது; ஜனநாயகத்துக்கும் நல்லது. கீழிலிருந்து மேல் நோக்கிச்செல்லும் ஆரோக்கியமான அதிகாரப் பரவல் அது. கடந்த நான்கு ஆண்டுகள் பி.ஜே.பி ஆட்சியில் நடந்த பல்வேறு முக்கியச் சம்பவங்களைத் தொகுத்தால் அப்படியான ஆரோக்கியமான அதிகாரப் பரவல் நம் நாட்டுக்கு ஏன் தேவை என்பது எளிதாகப் புரியும். ஒற்றை ஆட்சி, ஒற்றை மொழி, ஒற்றை மதம் என்கிற தத்துவத்தை முன்னெடுப்பது எந்தக் கட்சிக்குமே நல்லது அல்ல. இன்னும் சொல்லப்போனால் சந்திரபாபு நாயுடு உருவாக்கும் கூட்டணி யால், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அடிக்கடி வலியுறுத்திய, ‘மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி’ தத்துவத்தையும் நிறைவேற்ற முடியும். நீட் தேர்வு, மத்திய அரசிடமிருந்து குறைந்து வரும் நிதி ஆதாரங்கள், நிதி ஒதுக்கீட்டுக்கான சிறப்பு அங்கீகார மாநிலங்களை அங்கீகரிப் பதில் பாகுபாடு, ஜி.எஸ்.டி வரி வருவாயில் மாநிலங்களுக்குப் பங்கு தருவதில் சுணக்கம், கவர்னர்களின் தலையீடு எனப் பல்வேறு விஷயங்களில் மாநிலங்களின் அதிகாரங்கள் கேள்விக்குறி ஆக்கப்பட்டிருக்கின்றன.

தேச நலன் என்கிற ஒற்றை நோக்கத்துக்காக மட்டுமே ஒருங்கிணையும் கூட்டணி வேண்டும். இதனால், சில இழப்புகள் இருக்கும். பலன்களும் கூடக் குறைவாகவே கிடைக்கும்.

‘மகாகத்பந்தன்’ - பறவையாக உயருமா, அல்லது காற்றுப்போன பலூனாக வீழுமா என்பதைக் காலம்தான் பதில் சொல்ல வேண்டும்!