தமிழகத்தில் தி.மு.க-வுடன் கூட்டணி, தேசிய அளவில் பி.ஜே.பி-க்கு எதிராக மெகா கூட்டணி என்று பிஸியாக இருக்கிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. 20 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், குறைந்தது இரண்டு தொகுதிகளையாவது தி.மு.க கூட்டணியில் பெற்றுவிட வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. கூட்டணிப் பேச்சுவார்த்தைகள், புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல், களப்பணிகள் என்று பரபரப்பாக இருக்கும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நமக்கு அளித்த பேட்டியிலிருந்து...

‘‘பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பி.ஜே.பி-யை வரும் நாடாளுமன்றத் தேர்தலில், கம்யூனிஸ்ட் கட்சிகள் எப்படி எதிர்கொள்ளப் போகின்றன?’’

‘‘பி.ஜே.பி அரசு இந்த நான்கரை ஆண்டுகளில் ஜி.எஸ்.டி., பண மதிப்பிழப்பு நடவடிக்கை, பெட்ரோல் விலை உயர்வு என்று பொருளாதாரக் கொள்கைகளில் தவறான முடிவுகளை எடுத்து நாட்டையே நிர்மூலமாக்கிவிட்டது. ‘நாங்கள் ஊழலுக்கு எதிரானவர்கள்’ என்று சொல்லிக்கொள்ளும் பி.ஜே.பி ஆட்சியாளர்கள், ரஃபேல் விமான ஊழலில் வசமாகச் சிக்கியிருக்கிறார்கள். இந்த ஊழல் தொடர்பாக எழுப்பப்படும் கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல் அமைதி காக்கிறார்கள்.

ரிசர்வ் வங்கி, மத்தியத் தணிக்கைத் துறை, தேர்தல் ஆணையம், உச்ச நீதி மன்றம் என எல்லா சுயேச்சை அமைப்புகளிலும் மத்திய பி.ஜே.பி அரசு தலையிடுவதுடன், அவற்றைத் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரத் துடிக்கிறது. ஆர்.எஸ்.எஸ் தலையீடு, ஒட்டுமொத்த அரசு அமைப்பையும் குறிப்பிட்ட மத நிறுவனமாக மாற்றுகிற முயற்சியாக உள்ளது. நாட்டில் உள்ள முக்கியமான ஊர்களின் பெயர்களைக் கூட ‘இந்துத்வா’ அடிப்படையில் மாற்றிவருகிறார்கள். மதச்சார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைத்து பி.ஜே.பி-யை வீழ்த்துவது தேசத்துக்கும் மக்கள் நலனுக்கும் அவசியம். அதை நிச்சயம் செய்வோம்.”

‘‘தமிழகத்தில், பி.ஜே.பி-க்கு எதிரான கூட்டணியில் அ.தி.மு.க உள்ளதா? வேறு எந்தெந்தக் கட்சிகள் உள்ளன?’’

‘‘அ.தி.மு.க மற்றும் அ.ம.மு.க-வினருடன் கூட்டுச் சேர்ந்து பி.ஜே.பி-யை வீழ்த்துவது என்ற பேச்சுக்கே இடமில்லை. அ.தி.மு.க அரசுமீது ஊழல், முறைகேடு புகார்கள் அதிகரித்துக் கொண்டேவருகின்றன. எனவே, மத்திய பி.ஜே.பி அரசுடன், அ.தி.மு.க அரசையும் சேர்த்தே வீழ்த்தவேண்டியுள்ளது. கூட்டணியில் எந்தெந்தக் கட்சிகள் சேருகின்றன என்பதெல்லாம், தேர்தல் நெருக்கத்தில்தான் தெரியவரும்.’’

‘‘தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டிருப்பதாகப் பேசப்படுகிறதே?’’

‘‘ ‘தங்களுக்கு எதிரான வாக்குகள் ஒன்றுசேர்ந்துவிடக் கூடாது’ என்பதில் பி.ஜே.பி-யினர் தெளிவாக உள்ளனர். 2014 நாடாளுமன்றத் தேர்தலில், அந்தக் கட்சி வெறும் 31 சதவிகிதம் வாக்குகள் மட்டுமே பெற்றது. ஆனாலும், அதிக எண்ணிக்கையிலான தொகுதிகளை வென்று ஆட்சிக்கு வந்தது. காரணம், எதிர்ப்பு வாக்குகள் சிதறிப்போனதுதான். அப்படி ஒரு நிலையை இந்தத் தேர்தலிலும் உருவாக்கவேண்டும் என்று இப்படியெல்லாம் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள்.’’

‘‘காங்கிரஸுடன் நேரடியாகக் கைகோக்க கம்யூனிஸ்ட்டுகள் தயங்குவது ஏன்?’’

‘‘காங்கிரஸுடன் நாங்கள் அரசியல் கூட்டணி அமைக்க முடியாது. தமிழ்நாட்டில், பி.ஜே.பி-க்கு எதிரான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இருந்தாலும்கூட, வலுவான கட்சியாக இருக்கும் தி.மு.க-தான் கூட்டணிக்குத் தலைமை வகிக்கும். எனவே, அந்தக் கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து செயல்படுமே தவிர, நேரடியாகக் காங்கிரஸ் கட்சியுடன் நாங்கள் கூட்டணி சேரமாட்டோம். ஒருசில மாநிலங்களில், பிரதானக் கட்சியாக காங்கிரஸ் இருக்கும் சூழலில், ‘பி.ஜே.பி-க்கு எதிராக நிற்பவர்களுக்கு வாக்களியுங்கள்’ என்றுதான் மக்களிடையே வாக்குச் சேகரிப்போம்.’’

‘‘அது மறைமுகமாகக் காங்கிரஸுக்கு வாக்குச் சேகரிப்பதாகத்தானே முடியும்?’’

‘‘ஆமாம்.... அது அப்படித்தான் வரும். ஆனால், காங்கிரஸுடன் ஒரே மேடையில் ஏறி நின்று நாங்கள் வாக்கு கேட்க முடியாது!’’

‘‘காங்கிரஸ் மீதான இந்த வெறுப்புக்கு என்ன காரணம்?’’

‘‘இன்றைக்கு பி.ஜே.பி கடைப்பிடிக்கும் பெரும்பாலான கொள்கைகளை உருவாக்கியவர்கள் காங்கிரஸ் கட்சியினர்தான். ஜி.எஸ்.டி-யை அறிமுகப்படுத்தியதே காங்கிரஸ்தானே... ஆனாலும், இந்திய அளவில் பி.ஜே.பி-யை எதிர்கொள்ளவும், தமிழக அளவில் அ.தி.மு.க-வை எதிர்கொள்ளவும் காங்கிரஸுக்குப் பெரும் பங்கு இருக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை.”

‘‘தமிழகத்தில் 20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறுமா?’’

‘‘அது ஒருவகையில் மினி பொதுத்தேர்தல்தான். இன்றைய சூழலில், இடைத்தேர்தல் வந்தால், ‘தாங்கள் தோற்றுவிடுவோம்’ என்று அ.தி.மு.க-வும் பி.ஜே.பி-யும் உறுதியாக நம்புகின்றன. அதனால்தான் வெறும் இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலையே தள்ளிவைத்துவிட்டனர். அ.தி.மு.க., பி.ஜே.பி என இரு கட்சிகளுமே இடைத்தேர்தலை நடத்த விரும்பாது. எனவே, இடைத்தேர்தல் நடப்பதற்கு 99 சதவிகிதம் வாய்ப்பில்லை. அப்படியே நடத்தப்பட்டாலும், நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து நடத்தப்படலாம்.’’

- த.கதிரவன்