ஆர்.பழனிசாமி, இராவணாபுரம்.
‘மோடி ஆட்சிக்குப் பிறகு இந்தியாவின் பொருளாதாரம் தவறான பாதையில் செல்ல ஆரம்பித்துவிட்டது’ என்று நோபல் பரிசுபெற்ற பொருளாதார மேதை அமர்த்தியா சென் கூறியுள்ளாரே?

நரசிம்ம ராவ் அமைச்சரவையில் மன்மோகன் சிங் நிதி அமைச்சராக இருந்த காலத்திலிருந்தே இந்தியப் பொருளாதாரம் தவறான பாதையில் செல்வதாகக் குற்றச்சாட்டுகள் உண்டு. கம்யூனிஸ்ட்கள் மட்டும்தான் அப்போது எதிர்ப்புகளைக் கிளப்பினார்கள். ஆனால், வளர்ச்சி என்னும் கவர்ச்சிப் பெரும்பாலானவர்களின் கண்களைக் கொள்ளைக் கொண்டதால், இன்னொரு பக்கம் சமுதாயத்தில் தொடரும் ஏற்றத்தாழ்வுகளை யாரும் கண்டுகொள்ளவில்லை. ஒரு நாட்டின் உண்மையான பொருளாதார வளர்ச்சி என்பது, ஒட்டுமொத்த பிரஜைகளும் ஒரேமாதிரியான வளர்ச்சியை அடையும்போதுதான் உறுதியாகும்.

டி.பழனிசாமி, கடலூர்-1.
பத்திரிகை தர்மத்தை சூது கவ்வுகிறதா?

தர்மம் என்றாலே சூது கவ்வத்தான் செய்யும். ஆனால், மறுபடியும் தர்மமே வெல்லும் என்கிற நம்பிக்கையில்தான் வாழ்க்கை சுழல்கிறது. நம்புவோம்!

பி.மணி, வெள்ளக்கோவில், திருப்பூர்.
எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஆளும்கட்சி எதிர்க்கட்சி இரண்டும் அடித்துக்கொள்வதே வாடிக்கையாக இருக்கிறது. நாட்டை முன்னேற்றுவதற்காக இரண்டு தரப்பினரும் ஒன்றாகச் சேர்ந்து எப்போதுதான் செயல்படுவார்கள்?

வீட்டை முன்னேற்றிய பிறகு!

எச்.மோகன், மன்னார்குடி-2.
லெனின், ஹிட்லர், சே குவேரா போன்றவர்கள் இக்காலத்திலும் இருக்கிறார்களா?

உலகில் ஹிட்லர்களின் கையே பெரும்பாலும் ஓங்கியிருப்பதால், மற்றவர்கள் மறைந்தே கிடக்கிறார்கள்.

இரா. கணேசன், தீர்த்தகிரி நகர், பாலக்கோடு.
பழங்காலத் தமிழ்ப் புலவர்களை, ‘கூழுக்குக் கவி பாடியவர்கள்’ என்று கூறியுள்ளீர்களே நியாயமா? அவர்கள் பாடியது எல்லாமே அபத்தங்கள்தானா?

அச்சச்சோ... அப்படிச் சொல்லவே இல்லையே மிஸ்டர் கணேசன். ‘பொற்கால ஆட்சி’ என்பதைப் பற்றி மட்டும்தான் நம் பஞ்சாயத்தே. எதையும் அளவுக்கு மிஞ்சிப் பெருமையாகப் பேசிக் களிப்பதிலும், உவமைகளை அள்ளிவிடுவதிலும் நம்மை அடித்துக்கொள்ள ஆள் இல்லை. ஆனால், அன்றைய காலகட்டத்தில் வாழ்ந்த ஏழைகளைப் பற்றித்தான் பெரிதாக எந்தக் கவியும் பாடி வைத்ததாகத் தெரியவில்லை. அன்றைய ஆட்சியாளர்களால் அத்தகையோர் கொடுமைக்குள்ளாக்கப்பட்ட சங்கதிகளையும் இவர்களின் பாடல்களிலும் கல்வெட்டுகளிலும் பெரியதாகக் காணமுடியவில்லை.

ஆறுதலாக, ‘நாராய் நாராய் செங்கால் நாராய்’ என்பது போன்ற சில பாடல்களைக் காணமுடிகிறது. சத்திமுத்தப் புலவர் என்பவர் எழுதியதாகச் சொல்லப்படும் இந்தப் பாட்டு, மாறன்வழுதி ஆண்ட மதுரையில் ஓர் ஏழை படும் பாட்டைக் கண்ணீருடன் விவரிக்கிறது. அதேசமயம் எண்ணற்ற அறிவியல் பூர்வமான, அனுபவப்பூர்வமான சங்கதிகளையும் பாடித்தான் வைத்துள்ளனர் பழங்காலத் தமிழ்ப் புலவர்கள். ஆனால், பெருமையான சங்கதிகளுக்கு மட்டுமே நாம் முக்கியத்துவம் கொடுக்கிறோம் - அது கற்பனையாக இருந்தாலும்!

சி.ஹெச்.சோமு, சென்னை.
‘பெருந்தலைவர்’ என்றாலே காமராஜர்தான். ராமசாமி படையாட்சியையும் ‘பெருந்தலைவர்’ என்று தற்போது சொல்ல ஆரம்பித்துள்ளனர். இது சரியா... யார் இவர்?

ராமசாமி... வன்னியர்களுக்காகத் தனிக் கட்சி கண்டவர்களில் முக்கியமானவர். சென்னை மாகாணமாக இருந்தபோது அமைச்சராகவும், பின்னர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் திண்டிவனம் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தவர். பெருந்தலைவர், பேரறிஞர் போன்ற பட்டங்களுக்கெல்லாம் அவர்கள் ஆசைப்பட்டார்களா என்று தெரியவில்லை. ஆனால், இவர்களுக்குத்தான் முக்கியமாகத் தேவைப்படுகிறது. சம்பந்தப்பட்ட சாதிக்காரர்களைக் குஷிப்படுத்தி ஓட்டுவாங்கும் நோக்கத்தில்தான் பெரும்பாலும் இப்படி பட்டங்களைச் சூட்டுவது, மணிமண்டபம் கட்டுவது, அரசு விழா நடத்துவது எல்லாம் நடக்கின்றன.

@பா ஆமோகா, திருவண்ணாமலை.
ரஃபேல் போர் விமானம் தொடர்பான வழக்கின்போது, 1985-ம் ஆண்டுக்குப் பிறகு, நவீன ரக போர் விமானங்கள் இந்திய விமானப் படையில் சேர்க்கப்படவில்லை என்று பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறியுள்ளனரே... தொழில்நுட்பத்தில் இவ்வளவு பின்தங்கியிருக்கும் நிலையில், திடீரென்று போர் வந்தால் நம் கதி?

வந்தால் இல்லை... ஏற்கெனவே வந்திருந்தால். ‘எல்லாம் நம் தலையெழுத்து’ என்று சொல்வதற்குக்கூட நேரமில்லாமல் போயிருந்திருக்கும்.

@கார்த்திமொழி, தஞ்சாவூர்.
தமிழ்நாட்டை மையமாகக்கொண்டு ஆங்கிலத் தொலைக்காட்சி தொடங்கினால்தான், நம் பிரச்னைகள் தேசிய அளவில் கவனம் பெறுமோ?

ம்... இதிலும் வடக்கு வாழ்கிறது... தெற்கு தேய்கிறதுபோல!

ஆர்.மாசிலாமணி, வந்தவாசி.
மூன்று கல்லூரி மாணவிகள் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில், தொடர்புடைய மூன்று குற்றவாளிகள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்களே?

கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் ஜெயலலிதாவுக்கு எதிராக நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்தபோது, அ.தி.மு.க-வைச் சேர்ந்த இந்த மூவரும், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேருந்துக்குத் தீ வைக்க, ஒன்றுமறியாத அந்த அப்பாவி மாணவிகள் மூவரும் கொல்லப்பட்டனர். அன்று தொடங்கி இந்தக் குற்றவாளிகளைக் காப்பாற்றுவதற்காகப் பல்வேறு வகைகளிலும் சட்ட யுத்தத்தை நடத்திப் பார்த்துத் தோற்றுப்போனார் ஜெயலலிதா. ஆனால், அவரின் அடிப்பொடிகள், தற்போது கவர்னர் மூலமாக அதைச் சாதித்தே விட்டனர். சட்டம் ஒரு விளையாட்டு என்பதைத் தவிரச் சொல்வதற்கு வேறேதும் இல்லை.

@ மனோகரன், சென்னை.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிடச் சென்ற அமைச்சர்கள் மீது தாக்குதல் நடத்துவது வெளிநாட்டுத் தீவிரவாதிகளின் வேலையாக இருக்குமோ?

ஓ... நன்றாகத்தான் எடுத்துக்கொடுக்கிறீர்கள்!

முத்து விளக்கம்

21.11.18 தேதியிட்ட ஜூ.வி இதழில், ‘அ.தி.மு.க-வுடன் மோதிக் கொண்டிருக்கும் நடிகர் விஜய்யின் எதிர்காலம்?’ என்ற கேள்விக்கு, கழுகார் தந்திருக்கும் பதிலுக்குச் சிறுவிளக்கம்.

‘உலகம் சுற்றும் வாலிபன் படம் ஓடினால், சேலை கட்டிக்கொள்கிறேன்’ என்று மதுரை முத்து பேசவில்லை. ‘படம் வெளிவராதுய்யா... படத்தை வாங்கியவர்கள் எல்லோரும் காவி வேட்டிக் கட்டி சந்நியாசியா போக வேண்டியதுதான். உங்க பணம் திரும்பி வராது. அப்படி படம் வந்தால் நான் சேலைகூடக் கட்டிக்கொள்கிறேன்’ என்றுதான் பேசினார். இதன் பின்னணியில் ஓர் அரசியல் உண்டு.

அரசியலில் எம்.ஜி.ஆர் ஈடுபட ஆரம்பித்துவிட்டதால், ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தயாரிப்பு வேலைகள் வழக்கத்தைவிட மேலும் தாமதமாகின. சில விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள், இதனால் தங்களுக்கு ஏற்பட்டுக்கொண்டிருக்கும் பொருளாதாரப் பாதிப்பு குறித்து அப்போது தி.மு.க-வில் இருந்த முத்துவிடம் கவலையுடன் பகிர்ந்தனர். இதையடுத்துதான், ‘படம் வெளி வராது’ என்று கட்சி மேடையில் பேசினார். இது எம்.ஜி.ஆரை உசுப்பேற்ற... அசுர வேகமெடுத்த படப்பிடிப்பு சீக்கிரமே முடிவடைந்து படம் திரைக்கு வந்தது. விநியோகஸ்தர்களும் திரையரங்கு உரிமையாளர்களும் முத்துவுக்கு மனதார நன்றி சொன்னார்கள்.

மேலும், முதல் ஆளாக ஓடிப்போய் அ.தி.மு.க-வில் முத்து சேரவில்லை. மறைந்த பத்திரிகையாளர் சோலை மூலமாக எம்.ஜி.ஆர் விடுத்த அழைப்பை ஏற்றே சேர்ந்தார்.

- பா.முத்துராஜன், அறங்காவலர்,
மேயர் முத்து அறக்கட்டளை, மதுரை.

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:
கழுகார் பதில்கள்,
ஜூனியர் விகடன்,
757, அண்ணா சாலை,
சென்னை- 600 002
kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!