Published:Updated:

நாடாளுமன்ற முட்டுக்கட்டையை நீக்க பா.ஜ.வுடன் அரசு மறைமுக பேச்சுவார்த்தை

நாடாளுமன்ற முட்டுக்கட்டையை நீக்க பா.ஜ.வுடன் அரசு மறைமுக பேச்சுவார்த்தை
நாடாளுமன்ற முட்டுக்கட்டையை நீக்க பா.ஜ.வுடன் அரசு மறைமுக பேச்சுவார்த்தை
நாடாளுமன்ற முட்டுக்கட்டையை நீக்க பா.ஜ.வுடன் அரசு மறைமுக பேச்சுவார்த்தை

புதுடெல்லி: நாடாளுமன்ற முட்டுக்கட்டையை நீக்க எதிர்கட்சிகளுடன் மத்திய அரசு மறைமுக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 நிலக்கரி ஊழல் வழக்கு தொடர்பான சிபிஐ விசாரணை அறிக்கையை திருத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள மத்திய சட்டத்துறை அமைச்சர் அஸ்வினி குமாரும், ரயில்வே வாரிய லஞ்ச வழக்கில் ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சாலின் சகோதரி மகன் சிக்கியதால் பன்சாலும் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் பா.ஜனதா உள்ளிட்ட எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.இதனால் நாடாளுமன்றம் இன்றும் முடங்கியது.

இதனிடையே காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் எதிர்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர் நாடாளுமன்றத்தில் இன்று சந்தித்துக் கொண்டதாகவும், அப்போது சுஷ்மாவை சோனியா காந்தி கட்டித் தழுவிக் கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனைத் தொடர்ந்தே இரு தரப்புக்குமிடையே மறைமுக பேச்சுவார்த்தை தொடங்கியதாக தெரிகிறது. இதில் தங்களது தரப்பில் தலைமையேற்று பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஆனந்த குமாரை பா.ஜனதா அனுப்பி வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

##~~##
மேலும் ஆனந்த குமார் ஏற்கனவே இது தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவாருடன் பேசியதாகவும், அதனைத் தொடர்ந்து பவார் பா.ஜனதாவின் கருத்தை பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தெரிவித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே இப்பேச்சுவார்த்தையின் பலனாக பா.ஜனதா பங்கேற்பதாக ஒப்புக்கொண்டால், அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட அரசு திட்டமிட்டுள்ளதாகவும், உணவு பாதுகாப்பு மசோதாவை எப்படியும் நிறைவேற்றியே தீருவது என்பதில் சோனியா உறுதியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.