Published:Updated:

சிதம்பரம் அண்ணாமலை பல்கலை.யில் பணியாற்றிய 4 பேர் இடமாற்றம்!

சிதம்பரம் அண்ணாமலை பல்கலை.யில் பணியாற்றிய 4 பேர் இடமாற்றம்!
சிதம்பரம் அண்ணாமலை பல்கலை.யில் பணியாற்றிய 4 பேர் இடமாற்றம்!

கடலூர்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து வந்த துணைவேந்தரின் உதவியாளர் உள்பட 4 பேர் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

''கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகமானது, கடுமையான நிதிநிலை நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதனை சமாளிக்க வேண்டுமானால் பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களிடையே ஆட்குறைப்பு செய்து, சம்பள குறைப்பும் செய்யப்படவேண்டும்’’ என சமீபத்தில் அதிரடியாக அறிவித்தது நிர்வாகம். இதனால் ஊழியர்கள் மத்தியில் பெரும் போராட்டம் வெடித்தது.

போராட்டம் வலுத்துக்கொண்டே போக, தமிழக அரசு இப்பிரச்னையில் தலையிட்டு

##~~##
அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகத்தில் ஆய்வு செய்ய தீர்மானித்தது. இதற்காக சிவ்தாஸ் மீனா என்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியை நிர்வாக அதிகாரியாக நியமனம் செய்தது. ஆய்வில் பல முறைகேடுகளை கண்டறியப்பட்டு, அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நிதிநிலை நெருக்கடி ஏற்பட நிர்வாகமே காரணம் என்று கூறி, துணைவேந்தர் ராமநாதன் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதுமட்டுமில்லாமல் ''இதற்கு உடந்தையாக இருந்த அலுவலர்களும் படிப்படியாக இடமாற்றம் செய்யப்படுவார்கள்'' என்றும் சிவ்தாஸ் மீனா அறிவித்திருந்தார்.

அதில் முதல் கட்டமாக துணைவேந்தரின் உதவியாளராக பணியாற்றிய ராஜசேகர் என்பவரை தேர்வுத்துறைக்கும், ரிஜிஸ்தரின் உதவியாளராக பணியாற்றிய நடராஜன் என்பவரை விடுதி துறைக்கும், ரவி என்பவரை தென்கோட்டை தொலைதூர கல்வி இயக்ககத்திற்கும் மற்றும் சரவணன் என்பவரை பரங்கிப்பேட்டை மெரின்பயாலஜி துறைக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதனால் இன்னும் யார், யார் தலை உருளப்போகிறதோ என்று பதட்டத்தில் உறைந்து போய் கிடக்கிறார்கள் அண்ணாமலை பல்கலைக்கழக பணியாளர்கள்.

-க.பூபாலன்