Published:Updated:

அரியலூர் மாவட்டத்திலிருந்து தனித்தீவாக பிரிக்கப்பட்ட செந்துறை ஒன்றியம்!

அரியலூர் மாவட்டத்திலிருந்து தனித்தீவாக பிரிக்கப்பட்ட செந்துறை ஒன்றியம்!
அரியலூர் மாவட்டத்திலிருந்து தனித்தீவாக பிரிக்கப்பட்ட செந்துறை ஒன்றியம்!

அரியலூர்: பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து செந்துறையில் மக்கள் கடும் அவதியில் இருப்பது மட்டுமின்றி இப்பகுதியே தனித்தீவாக காட்சியளிக்கிறது.

அரியலூர் மாவட்டத்திலிருந்து தனித்தீவாக பிரிக்கப்பட்ட செந்துறை ஒன்றியம்!

ராமதாஸ் கடந்த 30ஆம் தேதி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அரியலூர் மாவட்டத்தில் செந்துறை, ஆண்டிமடம், ஜெயங்கொண்டம் ஆகிய இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றனர்.

அரியலூர் மாவட்டத்திலிருந்து தனித்தீவாக பிரிக்கப்பட்ட செந்துறை ஒன்றியம்!

இந்நிலையில், செந்துறை ஒன்றியத்தை தலைமையிடமாகக் கொண்டு 80க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருக்கின்றன. இதில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்தப் பகுதியில் இதுவரைக்கும் 7 பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளது. 95க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

##~~##
செந்துறையிலிருந்து அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய பகுதிகளுக்கு ராமதாஸ் கைது செய்யப்பட்ட நாள் முதல் இதுவரை பேருந்துகள் ஓடவில்லை. செந்துறை பகுதி மக்கள் மருத்துவமனை போன்ற அவசர தேவைகளுக்கு அரியலூர்தான் செல்ல வேண்டும். பேருந்துகள் ஓடாத காரணத்தினால், மக்கள் கடும் அவதியில் இருக்கின்றனர். இதனால், நோயாளிகளும், தினக்கூலி வேலை செய்பவர்களும், மாணவ-மாணவிகளும் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். இதனால் அரியலூர் மாவட்டத்தில் செந்துறை ஒன்றியம் மட்டும் தனித்தீவு போன்று காட்சியளிக்கிறது.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ரவிக்குமாரிடம் பேசினோம். ''இப்பகுதி சிறு சலசலப்போடுதான் இருக்கிறது. போக்குவரத்துத்துறை ஜெனரல் மேலாளரிடம் பேசி உடனடியாக பேருந்தை இயக்க நடவடிக்கை எடுக்கிறேன்'' என்றார்.
-எம்.ராமசாமி