Published:Updated:

5 மாநிலத் தேர்தல் முடிவுகள் எதிரொலி? - நோட்டாவுக்கு எதிராகக் களம் இறங்கும் ஏ.பி.வி.பி!

5 மாநிலத் தேர்தல் முடிவுகள் எதிரொலி? - நோட்டாவுக்கு எதிராகக் களம் இறங்கும் ஏ.பி.வி.பி!
5 மாநிலத் தேர்தல் முடிவுகள் எதிரொலி? - நோட்டாவுக்கு எதிராகக் களம் இறங்கும் ஏ.பி.வி.பி!

நோட்டா ஓட்டுகளால் மத்தியப் பிரதேசத்திலும், ராஜஸ்தானிலும் ஆட்சியைப் பறிகொடுத்திருப்பதாக நினைக்கிறது பி.ஜே.பி. இதனால், நோட்டாவுக்கு எதிராகத் தேசிய அளவில் பிரசாரம் செய்யக் களம் இறங்கி உள்ளது ஆர்.எஸ்.எஸ் ஆதரவு மாணவர் படையான ஏ.பி.வி.பி (Akhil Bharatiya Vidyarthi Parishad).

இந்த ஆண்டு மே மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள அனைத்துக்கட்சிகளும் மும்முரம் காட்டி வருகின்றன.  பி.ஜே.பி. நடந்துமுடிந்த மூன்று மாநில சட்டமன்றத் தேர்தலில், பின்னடைவுக்கான காரணத்தை அலசி ஆராய்ந்து வருகிறது. இதில்,  ராஜஸ்தானிலும், மத்தியப்பிரதேசத்திலும் ஜெயிக்க வேண்டிய சில தொகுதிகளில் நோட்டாவின் ஓட்டுகளால் வெற்றி பறிபோனதோடு, ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள முடியாமல் போய் இருப்பதாக நினைக்கிறது பி.ஜே.பி.

குறிப்பாக, ராஜஸ்தான் மாநிலத்தில் 15 தொகுதிகளில் பி.ஜே.பி-யின் வெற்றியை தட்டிப்பறித்துள்ளது நோட்டா. இங்கு காங்கிரஸ் 99-ம் தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க, பி.ஜே.பி 73 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று ஆட்சியை இழந்துள்ளது. இதைப்போலவே, மத்தியப் பிரதேசத்தில் நோட்டாவினால் 22  தொகுதிகளில் பி.ஜே.பி-யின் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறது. இங்கு காங்கிரஸ் கட்சி 114 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க, பி.ஜே.பி கட்சி 109 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க முடியாமல் தோல்வியைத் தழுவியிருக்கிறது.

இதுபோன்ற நிலை நாடாளுமன்றத் தேர்தலில் வரக்கூடாது என்பதற்காக, நோட்டாவுக்கு எதிராக தேசிய அளவில் விழிப்பு உணர்வு நிகழ்ச்சியைத் நடத்தக் களம் இறக்கியுள்ளது ஆர்.எஸ்.எஸ் ஆதரவு மாணவர் படையான ஏ.பி.வி.பி.

இதுகுறித்து பேசிய ஏ.பி.வி.பி-யின் தேசியச் செயலாளர் ஹேமா தாக்கூர், ``நோட்டாவால் ஜனநாயகத்துக்கு எந்த வகையிலும் பயனில்லை. வாக்காளர்கள் நோட்டாவை தேர்ந்தெடுப்பதற்குப் பதிலாக அவர்களுக்குப் பிடித்த வேட்பாளரைத் தேர்வு செய்ய வேண்டும். இனி வரும் தேர்தலில் நோட்டா ஆப்ஷனே இருக்கக்கூடாது என்பதுதான் எங்களுடைய நோக்கம். இதைத் தேசிய அளவில் கொண்டுசெல்ல இருக்கிறோம் ``தேசியம் காக்க, ஓட்டுப்போடு" என்ற விழிப்பு உணர்வு பிரசாரத்துடன் நோட்டாவை எதிர்த்தும் தேசிய அளவில் பிரசாரம் செய்ய உள்ளோம்” என்கிறார்.  

இன்னும் 144 நாள்களில் ஜெயிக்கப் போவது யாரு? என்பது தெரிந்துவிடும்.