Published:Updated:

ராமதாசுக்கு காவல் நீட்டிப்பு: கோ.க.மணிக்கு காவலை நீட்டிக்க மறுத்த நீதிபதி

ராமதாசுக்கு காவல் நீட்டிப்பு: கோ.க.மணிக்கு காவலை நீட்டிக்க மறுத்த நீதிபதி
ராமதாசுக்கு காவல் நீட்டிப்பு: கோ.க.மணிக்கு காவலை நீட்டிக்க மறுத்த நீதிபதி

திருச்சி: கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக போராட்டம் நடத்தியதாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மேலும் ஒரு வழக்கில் நேற்றிரவு கைது செய்யப்பட்டார்.  இந்த வழக்கில் ராமதாசுக்கு காவலை நீட்டித்த நீதிபதி, கோ.க.மணிக்கு காவலை நீட்டிக்க மறுத்துவிட்டது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமதாசுக்கு காவல் நீட்டிப்பு: கோ.க.மணிக்கு காவலை நீட்டிக்க மறுத்த நீதிபதி

மரக்காணம் கலவரத்தை கண்டித்து விழுப்புரத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த வந்த பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் ரஜினி ரசிகர்களை தாக்கியதாகவும், மாமல்லபுரத்தில் கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் நடைபெற்ற நிகழ்ச்சியில் சாதி வெறியை தூண்டும் வகையில் பேசியதாகவும் பதிவு செய்யப்பட்ட 2 வழக்குகளில் அவர் கைது செய்யப்பட்டார்.

இதற்கிடையே கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக தடையை மீறி போராட்டம் நடத்தியதாக ராமதாஸ் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் அவரை கைது செய்வதற்காக கூடங்குளம் போலீசார் நேற்றிரவு திருச்சி வந்தனர்.

சிறை அதிகாரிகளை சந்தித்து கைது செய்வது தொடர்பான ஆணைகளை வழங்கினர். பின்னர் ராமதாசை கைது செய்தனர். இதே வழக்கிலும் கோ.க.மணியும் கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து திருச்சி ஜுடிசியல் மாஜிஸ்திரேட் 2ஆம் எண் நீதிமன்ற நீதிபதி ராஜாராம் திருச்சி மத்திய சிறைக்கு சென்று ராமதாஸ் காவலை வரும் 13ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். ஆனால் கோ.க.மணி காவலை நீட்டிக்க நீதிபதி மறுத்துவிட்டார்.

ஓராண்டுக்கு பிறகு கோ.க.மணி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், காலதாமதமாக செய்யப்பட்ட வழக்கு வலுவிழந்துவிட்டதாகவும், இதனால் கோ.க.மணிக்கு காவலை நீட்டிக்க முடியாது என்றும் நீதிபதி கூறினார்.

மேலும், உச்ச நீதிமன்றம் அண்மையில் வழக்கிய தீர்ப்பில், கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்கை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதை நீதிபதி அப்போது சுட்டுக்காட்டினார்.

##~~##
இதே வழக்கில் ராமதாசுக்கு காவலை நீட்டித்த நீதிபதி, கோ.க.மணிக்கு காவலை நீட்டிக்காதது ஏன்? என்று பல கேள்விகள் எழுந்துள்ளது. நீதிபதியின் இந்த நடவடிக்கை காவல்துறையை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
நேற்றுடன் சேர்த்து மொத்தம் 5 வழக்குகளில் ராமதாஸ் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சாதிக் பாட்சா