Published:Updated:

``கர்ப்பப்பை எடுத்த தமிழ்ப் பெண் பதினெட்டாம் படி ஏறி வழிபாடு!’’ - கேரள முதல்வர் அலுவலகம் தகவல்

``கர்ப்பப்பை எடுத்த தமிழ்ப் பெண் பதினெட்டாம் படி ஏறி வழிபாடு!’’ - கேரள முதல்வர் அலுவலகம் தகவல்
``கர்ப்பப்பை எடுத்த தமிழ்ப் பெண் பதினெட்டாம் படி ஏறி வழிபாடு!’’ - கேரள முதல்வர் அலுவலகம் தகவல்

லங்கையைச் சேர்ந்த தமிழ்ப் பெண் சசிகலா சபரிமலைக்கு நேற்று இரவு வழிபட வந்துள்ளார். போலீஸ் பாதுகாப்புடன் சந்நிதானத்தை நோக்கிச் சென்றவரை பக்தர்கள் தடுத்ததால் அவர் திருப்பி அனுப்பப்பட்டதாகச் சொல்லப்பட்டது. ஆனால், தற்போது கேரள முதல்வர் அலுவலகம் இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப் பெண் சபரிமலையில் வழிபட்டதாகத் தெரிவித்துள்ளது. 

இது குறித்து கேரள முதல்வரின் அலுவலக வட்டாரம், ``இந்த முறை சபரிமலையில் பெண் ஒருவர் பதினெட்டாம் படி ஏறி வழிபட்டுள்ளார். கனகதுர்கா, பிந்து ஆகியோர் வழிபட்டதை அதிகாரபூர்வமாக முதல்வர் அலுவலகம் அறிவித்ததால் கேரளாவில் வன்முறை வெடித்தது. இதன் காரணமாகப் பெண் ஒருவர் பதினெட்டாம்படி ஏறி சபரிமலையில் வழிபட்டது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்று தெரிவிக்கின்றன. 

மாரகூட்டம் வரை பக்தர்களுடன் வந்த சசிகலா பின்னர், தன் கணவர் மகனுடன் பிரிந்து சென்றுள்ளார். அவருக்கு இரு மப்டி போலீஸார் பாதுகாப்பு அளித்து சந்நிதானம் வரை அழைத்துச் சென்றனர். சசிகலா கோயிலில் வழிபட்டதை அங்கு பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளும் உறுதி செய்துள்ளதாக மலையாள மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

சாமி தரிசனம் முடிந்து செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, `கோயிலுக்குள் நுழைவதைப் பக்தர்கள் தடுக்கவில்லை. போலீஸார்தான் தடுத்தனர். நான் 41 நாள் விரதம் இருந்து வந்துள்ளேன். நான் ஐயப்ப பக்தை. அவரைக் காண நான் வந்துள்ளேன். என்னை ஏன் தடுக்க வேண்டும். இதற்கெல்லாம் ஐயப்பனிடத்தில் இவர்கள் பதில் சொல்ல வேண்டிய நாள் வரும்'' என்று ஆவேசத்துடன் கூறினார். 

முன்னதாக நேற்று சபரிமலை பாதுகாப்பு அதிகாரிகளிடத்தில் சசிகலா சபரிமலை கோயில் செல்ல அனுமதி கேட்டுள்ளார். பாஸ்போர்ட் உள்ளிட்டவற்றைப் பரிசோதித்தபோது அவருக்கு வயது 47 ஆகியிருந்தது தெரியவந்தது. ஆனால், சசிகலாவுக்கு கர்ப்பப்பை அகற்றப்பட்டுள்ளது. இதற்கான மருத்துவச் சான்றிதழ்களை அளித்து மலை ஏற சசிகலா அனுமதி பெற்றார். 

சசிகலா இலங்கையைச் சேர்ந்தவர் என்பதால் கேரள அரசு அவரைப் பலத்த பாதுகாப்புடன் ரகசிய இடத்தில் தங்க வைத்துள்ளது. 

source : on manorma