Published:Updated:

`துருக்கியிடம் ஆதாரம் இருக்கு; 11 பேரை தூக்கில் போடுங்கள்!' - ஜமால் வழக்கில் சவுதி அரசு வக்கீல் வாதம்

பத்திரிகையாளர் ஜமால் கஷோகிஜி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தால், சவுதி அரசு கடுமையான விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது.

`துருக்கியிடம் ஆதாரம் இருக்கு; 11 பேரை தூக்கில் போடுங்கள்!' - ஜமால் வழக்கில் சவுதி அரசு வக்கீல் வாதம்

அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்த பத்திரிகையாளர் ஜமால், சவுதி அரசு பற்றி தொடர்ந்து விமர்சித்து எழுதி வந்ததால், துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். அவரது கொலையில் சவுதி இளவரசர் முகமது பின் சல்மானின் பாதுகாப்பு அதிகாரிகளுக்குத் தொடர்பு இருப்பதாக துருக்கி குற்றம் சாட்டியது.  சவுதி அமைச்சரவையில் உயர்மட்ட பதவியில் இருக்கும் 11 பேர் ஜமால் கொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களாக அறிவிக்கப்பட்டனர். 

`துருக்கியிடம் ஆதாரம் இருக்கு; 11 பேரை தூக்கில் போடுங்கள்!' - ஜமால் வழக்கில் சவுதி அரசு வக்கீல் வாதம்

கொலை நடந்து மூன்று மாதங்கள் கடந்துவிட்டன. சவுதி அரசு இந்த விவகாரத்தில் அமைதிகாத்து வருவதாவும், வழக்கு விசாரணையைத் தாமதப்படுத்திவருவதாகவும் உலக நாடுகள் குற்றம் சாட்டி வந்தன. ஒருவழியாக, ஜமால் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான விசாரணை, சவுதி நீதிமன்றத்தில் நேற்று (03/01/2019) தொடங்கியது. 

`துருக்கியிடம் ஆதாரம் இருக்கு; 11 பேரை தூக்கில் போடுங்கள்!' - ஜமால் வழக்கில் சவுதி அரசு வக்கீல் வாதம்

சவுதி அரசுதரப்பு வழக்கறிஞர், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 11 பேருக்கும் மரண தண்டனை வழங்க வேண்டும் என வாதிட்டார்.  `ஜமால் கஷோகிஜி துருக்கியின் சவுதி தூதரகத்தினுள் கட்டிவைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டுள்ளார். அவரின் உடலில் அளவுக்கதிகமான மயக்க மருந்து செலுத்தப்பட்டுள்ளது.  பின்னர் கொலை செய்யப்பட்டுள்ளார். 5 பேர் சேர்ந்து அவரின் உடலைத் துண்டு துண்டாக வெட்டி அப்புறப்படுத்தியுள்ளனர். இதற்கான ஆதாரங்கள் துருக்கியிடம் உள்ளது. ஆனால், பலமுறை கேட்டும் துருக்கி அரசு ஜமால் கொலை தொடர்பான ஆதாரங்களைத் தர மறுக்கிறது. கொலையாளிகள் தண்டிக்கப்பட வேண்டு என்று மட்டும் மீண்டும் மீண்டும் சொல்கிறது. எது எப்படியோ, இந்தக் கொலையில் தொடர்புடைய 11 பேருக்கு மரண தண்டனை வழங்க வேண்டும்’ என அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வாதாடினார்.  இந்த வழக்கு விசாரணையின்போது, சவுதியின் மனித உரிமைகள் ஆணைய அதிகாரிகளும் உடன் இருந்தனர். இதைத் தொடர்ந்து, இவ்வழக்கை ஒத்திவைத்து சவுதி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. முதற்கட்ட விசாரணையிலேயே நீதிமன்றம் எந்தக் கருத்தும் கூறாமல் ஒத்திவைத்திருப்பது சர்வதேச அரங்கில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.