Published:Updated:

திருச்சி சிறையில் ராமதாசுடன் மனைவி, மகள் சந்திப்பு

திருச்சி சிறையில் ராமதாசுடன் மனைவி, மகள் சந்திப்பு
திருச்சி சிறையில் ராமதாசுடன் மனைவி, மகள் சந்திப்பு
திருச்சி சிறையில் ராமதாசுடன் மனைவி, மகள் சந்திப்பு

திருச்சி: திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள பா.ம.க. நிறுவனர் ராமதாசை இன்று அவரது மனைவி, மகள் சந்தித்து பேசினார்.

மரக்காணம் வன்முறையை கண்டித்து விழுப்புரத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்த பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில், கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக போராட்டம் நடத்தியதாக ராமதாஸ் மேலும் ஒரு வழக்கில் நேற்றிரவு கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து ராமதாஸ் மொத்தம் 5 வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளார்.

##~~##
இதனிடையே, திருச்சி சிறையில் ராமதாசை அவரது மனைவி சரஸ்வதி, அவரது மகள் கவிதா, முன்னாள் எம்.பி. தன்ராஜ் ஆகியோர் இன்று காலை சந்தித்து பேசினர். இந்த சந்திப்பு சுமார் அரை மணி நேரம் நடந்தது.
சாதிக் பாட்சா