சா.சொக்கலிங்கம் ஆதித்தன், ரோஸ்மியாபுரம்.
கழுகாருக்குப் பிடித்த டி.வி சேனல் எது?

டிஸ்கவரி!

@ஜி.மத்தியாஸ், ஒன்டாரியோ, கனடா.
தமிழகம், சினிமா மாயையிலிருந்து விடுபட வருங்காலத்தில் வாய்ப்பு உள்ளதா?

‘சோஷியல் மீடியா மாயை’ இன்னும் விஸ்வரூபம் எடுக்கும்போது விடுபடும்.

எம்.கார்த்திகா, அரியலூர்.
நடிகர்கள் பலரும் தமிழக அரசை நம்பாமல், புயல் நிவாரணப் பொருள்களை நேரடியாகவே அனுப்பிக் கொண்டுள்ளனரே?

அரசை நம்பாமல் என்று ஏன் சொல்லவேண்டும். உதவியைப் பெற்ற கண்களில் தெரியும் ஒளியை நேரடியாக உணர்வதற்காகக்கூட இருக்கலாம் அல்லவா?

இரா. வளையாபதி, தோட்டக்குறிச்சி, கரூர்.
“பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் போலி நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன” என்கிறாரே பிரதமர் நரேந்திர மோடி?

உண்மைதான். ஆனால், அவற்றின் மீது நடவடிக்கை எடுப்பதற்கு மீன, மேஷம் பார்த்துக்கொண்டிருப்பதுதான் நம்பிக்கையைக் குலைக்கிறது. அதிலும் மின்னல் வேகத்தைக் காட்டியிருந்தால், வரும் தேர்தலுக்குப் பயன்பட்டிருக்கும். இப்போதுகூட ஒன்றும்கெட்டு விடவில்லை.

கே.பாலு, வேர்க்கிளம்பி.
சமீபத்தில் பார்த்த பழைய திரைப்படம்?

சகுனி. ஆனால், எத்தனை முறை பார்த்தாலும் புதுப்படம் போலவே இருக்கிறது!

@க.துள்ளுக்குட்டி, நூர்சாகிபுரம்.
‘அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவோம்’ என்று இந்து அமைப்புகளும், ‘மசூதி கட்டுவோம்’ என்று இஸ்லாமிய அமைப்புகளும் பேசுவதால் கலவர பீதிதான் உருவாகிவருகிறது. சர்ச்சைக்குரிய அந்த இடத்தில் அனைத்து மக்களுக்கும் அமைதியும் பயனும் கிடைக்கும்விதமாக நூலகம் கட்டலாமே?

கட்டலாம்தான். ஆனால், உள்ளே பகவத் கீதைதான் வைக்கவேண்டும்... குர்-ஆன்தான் வைக்கவேண்டும் என்று அதிலும் சர்ச்சை கிளம்பினால்?

@யோகா வெங்கட், சத்துவாச்சாரி.
காவலர் தர்மனை சாலையில் கீழே தள்ளி, அவரது வாயில் மதுவை ஊற்றி குற்றவாளியாகக் காட்ட முயன்றிருக்கிறாரே மேலதிகாரி ரவிச்சந்திரன். கீழ்நிலை காவலர்களை இப்படியெல்லாம்தான் நடத்துவார்களா?

இதைவிட இன்னும் மோசமாகக்கூட நடத்துவார்கள். ஆனால், பிழைப்பு போய்விடும் என்று பயந்து பலரும் வெளியில் சொல்வதில்லை. சி.சி.டி.வி கேமரா அதைக் காட்டிக்கொடுத்து விட்டது. ரவிச்சந்திரன் போன்ற கொடூரமானவர்கள், பொதுமக்களிடம் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதையும் சேர்த்தே வெளிச்சம்போட்டிருக்கிறது இந்தக் கொடுமை. காக்கிச் சட்டையைக் கழற்றியதோடுவிடாமல், கடுமையான தண்டனையும் கொடுக்கப் படவேண்டும். அப்போதுதான், ரவிச்சந்திரன் போல காவல்துறையில் இருக்கும் ஆயிரக்கணக்கான அரக்கர்கள் திருந்துவார்கள்!

வண்ணை கணேசன், சென்னை- 110.
‘காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், விஜய் மல்லையா போன்ற தொழிலதிபர்கள் மோசடி செய்து சம்பாதித்த பணத்தை பறிமுதல் செய்யும்’ என்று ராகுல் காந்தி உறுதி கொடுத்துள்ளாரே?

இதுபோன்ற நபர்கள் மோசடி செய்வதற்கு உடந்தையாக இருந்த அரசியல்வாதிகளில் காங்கிரஸாருக்குத்தான் அதிக இடமுண்டு. அவர்களுடைய சொத்துக்களை என்ன செய்யலாம் என்பது பற்றியும் அப்படியே ராகுல் காந்தி ஏதாவது சொன்னால் நன்றாக இருக்கும்.

காஞ்சி எஸ்.ஃபைசுதீன், காஞ்சிபுரம்.
இனி, இந்த அரசியல்வாதிகளைப் பற்றி கேள்வி கேட்கப்போவதில்லை எனச் சபதம் எடுத்துவிட்டேன். இலக்கியத்தின் பக்கம் கவனத்தைத் திருப்புகிறேன். கம்ப ராமாயணத்தை சேக்கிழார் எழுதியிருந்தால் எப்படி இருந்திருக்கும் கழுகாரே?

பெரியபுராணத்தைக் கம்பர் எழுதியிருந்தால் எப்படி இருந்திருக்குமோ... அப்படி இருந்திருக்கும்.

எஸ்.பழனிவேல், காரைக்குடி.
கஜா புயல் பாதிப்புகளில் உள்ளூரில் உள்ளவர் களாலேயே உடனடியாக ஏதும் செய்யமுடியாத சூழலில், அரசாங்கத்தால் மட்டும் எப்படி உடனடியாக உதவிட முடியும்? தொடர்ந்து எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும் அரசாங்கத்தை விமர்சிப்பது சரியாகத் தோன்றவில்லையே?

இதுபோன்ற சமயங்களில் உடனடி உதவி என்பது மக்களுக்கு ஆறுதலாகப் பேசுவதுதான். ஆனால், இந்த அரசு அதிலேயே கோட்டைவிட்டு விட்டது. கூடவே, பாதிப்பு ஏதும் இல்லை என்று காண்பிப்பதற்கான வேலைகளில் முதலில் இறங்கியதுதான் பிரச்னையே. உள்ளூரில் உள்ளவர்களுக்கே புயலின் வீரியம் தெரியாதபோது சேலத்திலும் சென்னையிலும் உட்கார்ந்துகொண்டு, பாதிப்பில்லை என்று ஏன் பேட்டி கொடுக்க வேண்டும். அதுதான் இப்போது பெரிய பாதிப்பாக மாறி நிற்கிறது. ஆட்சியாளர்களால் ஊருக்குள் நுழைய முடியாத நிலையையும் உருவாக்கி இருக்கிறது.

லட்சுமி செங்குட்டுவன், வேலூர் (நாமக்கல்).
கடற்கரை காமராஜர் சாலையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு வளைவைத் திறப்பதற்கு தடைவிதித்துவிட்டதே உயர் நீதிமன்றம்?

அவசரப்படாதீர்கள்... இதுபோன்றத் தீர்ப்புகள் எல்லாம் கடைசியில் ஒன்றுமில்லாமல் போயிருப்பதுதான் உண்மை. இதற்கு உதாரணமாக எத்தனையோ விஷயங்களைச் சொல்லலாம்.

மெரினாவில் சமாதி கட்டத் தடை... மெரினாவில் சமாதி கட்ட அனுமதி!

நெடுஞ்சாலைகளில் டாஸ்மாக் கடைகள் அமைக்கத் தடை... நெடுஞ்சாலைகளை, உள்ளாட்சி சாலைகளாக மாற்றி டாஸ்மாக் கடை அமைக்க அனுமதி!

நீர்நிலைகளில் கட்டடங்கள் கட்டத் தடை... நீர்நிலைகளில் அரசு அலுவலகங்கள், குடியிருப்புகளுக்கு அனுமதி!

@கருமாரி கணபதி, மடிப்பாக்கம்.
மழுப்பாமல் சொல்லுங்கள்... நான்கு விருதுகளை அள்ளியிருக்கிறது எடப்பாடி பழனிசாமியின் அரசு. உண்மையிலேயே சாதனைதானே?

வேதனை.

உமாபார்வதி, எம்.டி., சென்னை-69.
கேரள வெள்ள பாதிப்புகளின்போது ஓடோடிப்போய் பார்த்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தமிழக புயல் பாதிப்பைக் கண்டுகொள்ளவில்லையே?

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் என்று முழு மாநிலங்களே கிடைக்கக்கூடிய வாய்ப்பிருக்கும் போது, ஒரு சீட்... இரண்டு சீட் தமிழகத்தைக் கண்டுகொள்வதற்கு அவருக்கு என்ன கிறுக்கா பிடித்துள்ளது?

வி.திருப்பதி, வத்தலகுண்டு.
விளம்பரத்துக்கென்றே பல ஆயிரம் கோடி ரூபாய்களை அள்ளிவிட்டு, தொழில் நிறுவனங்களையெல்லாம் முந்தியிருக்கிறதே மோடி அரசு?

‘வருமான’த்துக்கு ஏற்ப விளம்பர செலவு அதிகரிக்கவே செய்யும்.

@இளங்கோ. ஆர்.
அன்புமணி, சிறந்த அறிவார்ந்த பல திட்டங்களை முன்வைக்கிறார். தினகரன், குறைகளை மட்டுமே சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனால், தினகரனுக்குத் தான் மவுசு அதிகமாக இருப்பது போலத் தெரிகிறதே?

தினகரனிடம் இருந்து அன்புமணி கற்றுக்கொள்ளவேண்டியது நிறைய இருக்கின்றன.

தர்ஷினி, பாபநாசம், தஞ்சாவூர்.
‘எந்தத் திட்டமாக இருந்தாலும் எதிர்க்க ஒரு கூட்டம் கிளம்பிவிடுகிறது. மாநில அரசு அதைக் கட்டுப்படுத்த வேண்டும்’ என்கிறாரே மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்?

‘எதுவாக இருந்தாலும் ஒரு திட்டத்தைத் தீட்டிக்கொண்டு சம்பாதிக்கப் புறப்பட்டு வந்து விடுகிறார்கள் இந்த அரசியல்வாதிகள். அதையெல்லாம் நாம்தான் கண்காணிக்கவேண்டும்’ என்கிறார்களே மக்கள்!

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:
கழுகார் பதில்கள்,
ஜூனியர் விகடன்,
757, அண்ணா சாலை,
சென்னை- 600 002
kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!