Published:Updated:

குட்கா, பான் மசாலா தடை செயல்படுத்தப்படுமா...?

குட்கா, பான் மசாலா தடை செயல்படுத்தப்படுமா...?

குட்கா, பான் மசாலா தடை செயல்படுத்தப்படுமா...?

குட்கா, பான் மசாலா தடை செயல்படுத்தப்படுமா...?

குட்கா, பான் மசாலா தடை செயல்படுத்தப்படுமா...?

Published:Updated:
குட்கா, பான் மசாலா தடை செயல்படுத்தப்படுமா...?

- டி.எல்.சஞ்சீவிகுமார்

‘மத்திய அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம் & 2006 யைப் பின்பற்றி ‘தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகம்’ என்கிற தனித் துறையை அறிவித்து இருக்கிறது தமிழக அரசு. முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஒரு சல்யூட் வைப்போம். அந்தச் சட்டத்தின் படி எந்த ஓர் உணவுப் பொருளுடனும் புகையிலை சார்ந்த நிகோடின், பான் மாவுப் பொருட்கள் கலந்து விற்பனை செய்யக்கூடாது. அப்படி செய்தால்... சட்டம் தன் கடமையைச் செய்யும். நல்ல விஷயம்தான் - ஆனால் சட்டம், சட்டதிட்டமாக பின்பற்றப்படுமா என்று கூடவே எழும் சந்தேகத்தையும் தவிர்க்க முடியவில்லை!

குட்கா, பான் மசாலா தடை செயல்படுத்தப்படுமா...?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நல்ல விஷயம் ஆரம்பிக்கும்போதே ஏன் இப்படி ஒரு நம்பிக்கையின்மை என்றுகூட சிலர் நினைக்கலாம். ஆம், கடந்த ஒரு மாதத்துக்கு முன்புகூட சென்னை மாநகராட்சி பொது இடங்களில் புகை பிடிக்கத் தடை விதித்து மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியது. அந்தந்த மண்டல சுகாதாரத் துறை பணியாளர்கள் போலீஸாருடன் கை கோத்து செயல்படுவார்கள். பொது இடங்களில் புகை பிடிப்பவர்களுக்கு 200 ரூபாய் உடனடி அபராதம் விதிக்கப்படும் என்றெல்லாம் பூச்சிக்காட்டியது மாநகராட்சி. ஆனால், உண்மையில் நடந்தது என்ன? மறுநாளே பெட்டிக் கடைகளுக்கு வந்து பசைத்தடவிச் சென்றன அரசு இயந்திரத்தின் நச்சுப் பற்கள்! அதிகாரிகளின் ‘மாமூல்’ வாழ்க்கையிலும் பாதிப்பு இல்லை. வழக்கம்போல் புகையால் மூச்சுத்திணறிக்கொண்டுத்தான் இருக்கின்றோம்.

##~~##
இதே கதைதான், 40 மைக்ரான் அளவுக்கு குறைவான பாலிதின் பைகளுக்கு தடை உத்தரவுக்கும். நியாயமான வியாபாரிகள் 40.05 மைக்ரான் அளவில் தொடங்கும் பைகளை விற்கிறார்கள். சுற்றுச்சூழல் கேடு இல்லையாம்! அநியாயவான் வியாபாரிகள் தடை செய்யப்பட்ட மைக்ரான் அளவுள்ள பாலிதின் பைகளையே பகிரங்கமாக விற்கிறார்கள். அவர்களை ஒன்றும் செய்ய முடியாதாம்! நம் நாட்டில் சட்டங்களுக்கு பஞ்சமே இல்லை... ஹெல்மெட் அணிவதில் தொடங்கி லாட்டரிக்கு தடை வரைக்கும் ஏராளமான சட்டங்கள் உண்டு. ஆனால், செயல்படுத்தத்தான் ஆள் இல்லை.
இங்கு ஒவ்வொரு முறையும் புதிய சட்டம்... புதிய விதிமுறை இயற்றப்படும்போதே அதை சார்ந்த லாபம் எவ்வளவு என்கிற லாபியும் உருவாக்கப்பட்டுவிடுகிறது. வருவாய் துறைக்கு இவ்வளவு... காவல் துறைக்கு இவ்வளவு... உள்ளாட்சி அமைப்புகளுக்கு இவ்வளவு என்று தத்தம் துறையாளர்கள் மனக்கணக்குப் போட்டுக்கொள்கிறார்கள். சத்தமின்றி மீறப்படுகிறது சட்டம்!
குட்கா, பான் மசாலா தடை செயல்படுத்தப்படுமா...?
நமது முதல்வர் ஒரு நல்ல விஷயத்தை அறிவித்த சில மணி நேரங்களிலேயே இவ்வளவு நொட்டைகளை சொல்லலாமா? சரி, எதிர்மறை எண்ணம் வேண்டாம். நேர்மறைக்கே வருவோம். உண்மையான தடை என்பது என்ன? நுகர்வோரை தண்டிப்பதா? புகையிலை பொருட்களில் இருக்கும் சுமார் 3000 வகை நச்சுக்களுள் ஒன்று ஈத்தைல். அப்படி எனில் அரசு விற்கும் மதுபானங்களில்கூடத்தான் ஈத்தைல் இருக்கிறது. டாய்லெட் கழுவவும், வார்னிஷ் அடிக்கவும் பயன்படுத்தும் ஈத்தைலைக்கூடத்தான் அரசே குடிக்கச் சொல்கிறது. குடிப்பவர்களை எல்லாம் கைது செய்து சிறையில் அடைத்துவிடலாமா?
உண்மையான தடை என்பது? உற்பத்திக்கு தடை விதியுங்கள். விற்பனை, விநியோகம், இருப்பு வைத்தல் என எல்லாவற்றும் தடை விதியுங்கள். மறைமுக விளம்பரங்களுக்கும்கூட தடை விதியுங்கள். இந்தியாவில் ஆண்டுதோறும் புகையிலை நோயாளிகள் ஒன்பது லட்சம் பேர் இறக்கிறார்கள். அதாவது, நாள் ஒன்றுக்கு 2,500 பேர். அப்படி இறந்தால் என்ன... அதான் ஆண்டு தோறும் இந்திய அரசுக்கு புகையிலை வர்த்தகம் மூலம் 32 ஆயிரத்து 500 கோடி வருவாய் வருகிறதே என்கிறது மத்திய அரசு. ஆனால், புகையிலை நோயால் ஆண்டு தோறும் நோயாளிகள் செலவிடும் மருத்துவ தொகை 37 ஆயிரத்து 500 கோடி ரூபாய்!
மெல்லும் வகை புகையிலை வகையறாக்களில் மட்டும் அசெட்டோன், எத்தனால், மீத்தேன், ஹெக்சாமின், நெட்ரோ பென்சீன், அம்மோனியா, கார்பன் மோனாக்ஸைடு, நாப்தலின் என அதிநச்சுப் பொருட்கள் உட்பட 3000 வகை நச்சுப் பொருட்கள் இருக்கின்றன. ஒரே நேரத்தில் 60 மில்லி கிராம் நிகோடினை ஆரோக்கியமான மனிதர் ஒருவர் உட்கொண்டால் மரணம் சம்பவிக்கலாம் என்கிறது மருத்துவம். வாய், தொண்டை, குரல்வளை, நுரையிரல், இதயம், உணவுக் குழாய், சிறுநீரகம், சிறுநீர்ப்பை, கணையம், கர்ப்பப் பை என்று நம் உடலின் மொத்த ஸ்பேர் பார்ட்ஸையும் குத்தகைக்கு எடுத்து கொல்கின்றன புகையிலைப் பொருட்கள்!
குட்கா, பான் மசாலா தடை செயல்படுத்தப்படுமா...?
குடிநோயைப் போலவே புகையிலை சார்ந்த எந்த ஒரு பழக்கமும் தீவிர நோயே. தற்போது மெல்லும் புகையிலைப் பொருட்களுக்கு மட்டும் தடை விதித்திருக்கிறது தமிழக அரசு. எனவே, அறிவிப்பை ஒட்டிய சில விஷயங்களை மட்டும் தெரிந்துக்கொள்ளுங்கள். மெல்லும் புகையிலை நோயில் மூன்று நிலை உண்டு. சிலர் நன்றாக மென்று சில நிமிடங்களில் துப்பி விடுவார்கள். இவர்கள் முதல் நிலை. எளிதாக மீளலாம். அடுத்தது, வாயில் எங்காவது அதக்கிக்கொள்வது. நிமிடங்களில் தொடங்கி மணிக்கணக்கில் அதக்கிக்கொள்பவர்கள் எல்லாம் உண்டு. இவர்கள் இரண்டாம் நிலை. கொஞ்சம் கஷ்டம் என்றாலும் விடுபடலாம். அடுத்தது, பான்பராக் ஆகட்டும்... மெல்லும் புகையிலை ஆகட்டும்... சகட்டுமேனிக்கு கடித்து மென்று விழுங்கி விடுவது. சாப்பாட்டை விட அதிகம் இவர்கள் உட்கொள்வது புகையிலை சமாச்சாரங்களைத்தான். இவர்கள் ரொம்ப கஷ்டம்டா ரகம். ஆனாலும் மனம் இருந்தால் மார்க்கம் உண்டு!
டாக்டர்கள் மத்தியில் ஒரு வாசகம் பிரபலம்... புகையிலைப் பொருட்களை உபயோகிக்கும் அத்தனைப் பேருக்கும் புற்றுநோய் வராது. ஆனால், புற்றுநோய் வந்தவர்கள் அத்தனைப் பேருக்கும் புகையிலைப் பழக்கம் இருந்தது. அரசு மட்டும் அல்ல... புகையிலை நுகர்வோரும் கை கோர்த்தால் மட்டுமே புகை நமக்கு நிரந்தரப் பகையாகும்!
  
    
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism