Published:Updated:

கழுகார் பதில்கள்! - ‘பூனை’யமான தேர்தல் ஆணையம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கழுகார் பதில்கள்! - ‘பூனை’யமான தேர்தல் ஆணையம்!
கழுகார் பதில்கள்! - ‘பூனை’யமான தேர்தல் ஆணையம்!

கழுகார் பதில்கள்! - ‘பூனை’யமான தேர்தல் ஆணையம்!

பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்! - ‘பூனை’யமான தேர்தல் ஆணையம்!

@டி.சிவக்குமார், சீலப்பாடி, திண்டுக்கல்.
கருணாநிதி, மு.க.ஸ்டாலின்... கூட்டணிக் கட்சிகளை அனுசரித்து, அரவணைத்துச் செல்வதில் யார் கில்லாடி?


இரண்டாமவர், ஆரம்பிக்கவே இல்லையே.

எம். பாஸ்கர், தேவகோட்டை.
‘2.0?


‘செல்’லினம் Vs ‘புள்’ளினம்.

@பூ.கோகுல்குமார், கோவை.

கழுகார் பதில்கள்! - ‘பூனை’யமான தேர்தல் ஆணையம்!

தமிழகத்தில் தற்போது ஆட்சியைத் தக்கவைப்பது பணமா, விசுவாசமா?

விசுவாசமா... எந்தக் காலத்தில் இருக்கிறீர்கள்?

@ச.த.ஜெயசுதாகர், திருவாரூர்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ‘ஆதி திராவிடர் கஜா புயல் முகாம்’ என்று தனியாக முகாம் அமைத்திருப்பது சரியான நடவடிக்கையா?


சாதிகளை வேரறுக்கப் புறப் பட்டதாகக் கூறிக்கொள்ளும் திராவிட இயக்கங்களின் ஐம்பது ஆண்டுக்கால ஆட்சிக்குப் பிறகும் இந்த நிலை நீடிப்பது, சாதி ஒழிப்பு, தோல்வி யில் முடிந்துவிட்டதையே காட்டுகிறது. காரணம், அந்த இயக்கத்தினரில் பெரும் பாலானவர்களின் நோக்கம் சொத்து சேர்ப்பதை நோக்கித் திசை திரும்பியதுதான். அதனால்தான், ஆதி திராவிடர் களுக்கு ஒன்றிரண்டு அமைச்சர் பதவிகளைத் தந்துவிட்டால் போதும் என்று தொடர்ந்து ஆட்சிகளை நடத்திக் கொண் டுள்ளனர்.

@கார்த்திகேயன்கவிதா

மேக்கேதாட்டூ என்ற இடத்தில் காவிரியில் அணைக் கட்டுவதற்கான முயற்சிகளைத் தற்போது ஆரம்பித் திருப்பது, கஜா புயல் பாதிப்புகளில் இருந்து மக்களைத் திசை திருப்பும் நடவடிக்கையா?


இருக்கலாம். அல்லது எல்லோர் கவனமும் கஜா பாதிப்பின் பக்கமே படிந்திருக்கும் இந்த நேரத்தில், பல விஷயங்களைச் சாதித்துக் கொள்ளலாம் என்பதாகவும் இருக்கலாம்.

@முத்துக்கிருஷ்ணன், வேலூர்-7.
தென்னாப்பிரிக்காவில் நிலவிய நிற துவேஷங்களுக்கு எதிராக அங்கு நேரில் சென்று போராடினார் காந்தி. அதேபோல சீமான், வைகோ போன்றோர் இலங்கைத் தமிழர்களுக்காக இலங்கைக்கே சென்று போராட வேண்டியதுதானே?


சே குவேரா நாடு நாடாகச் சென்று பாதிக்கப்பட்ட மக்களோடு சேர்ந்து போராடினார். அவர்களின் காலம் வேறு... இன்றைய காலம் வேறு. இன்றுபோல் விசா உள்ளிட்ட கெடுபிடிகள் அன்று கடுமையாக இல்லை. இன்று உரிய ஆவணங்கள் இல்லாமல் விமானத்தில் ஏறவே உள்நாட்டில் அனுமதிப்ப தில்லை. இவ்வளவு ஏன் உள்நாட்டில் போராடினாலே... ‘ஆன்ட்டி நேஷனல்’ என்று முத்திரைகுத்திச் சிறையில் அடைத்துவிடுகிறார்களே. உலகம் எங்கும் பாசிசம் அத்தனை கொடூரமாக வளர்ந்துகொண்டிருக்கிறது.

கழுகார் பதில்கள்! - ‘பூனை’யமான தேர்தல் ஆணையம்!

@அஜித், மாடம்பாக்கம், சென்னை.
பிரதமராக இருந்துகொண்டு எதிர்க்கட்சித் தலைவர்களைத் தரக்குறைவாக நரேந்திர மோடி விமர்சனம் செய்வது அந்தப் பதவிக்கு இழுக்குதானே?


அரசியல் வியாதி!

@வாசுவாசு
கஜா புயல் குறித்து பி.ஜே.பி மிகவும் மெத்தனமாகவே கருத்து தெரிவிக்கின்றதே?  


கேரள வெள்ளத்தின்போது தாவிக் குதித்தார்கள். இங்கே அடக்கிவாசிக்கிறார்கள். மருமகள் உடைத்தால் பொன் குடம், மாமியார் உடைத்தால் மண்குடம்.

கழுகார் பதில்கள்! - ‘பூனை’யமான தேர்தல் ஆணையம்!

வி.கருணாநிதி, திருமக்கோட்டை.
ராமர் கோயில் கட்ட எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள், தேசத்தில் சுதந்திரமாகச் சுற்றமுடியாது என்று சிவசேனா கட்சியின் எம்.பி-யான சஞ்சய் ராவத் மிரட்டுகிறாரே?


நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கிறதே!

கே.இளங்கோவன், காஞ்சிபுரம்.
சபரிமலை விஷயத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்துவதில் தீவிரம் காட்டும் கேரள அரசு, எர்ணாகுளம் கிறிஸ்தவ தேவாலய விஷயத்தில் அதே நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாமல் இரட்டை வேடம் போடுகிறதே? 


இளம்பெண்களை அனுமதிக்கவிடாமல் சபரியில் போராட்டம் நடக்கிறது. எர்ணாகுளத்தில் குறிப்பிட்ட பிரிவினரை கிறிஸ்தவ தேவா லயத்தில் அனுமதிக்கவிடாமல் இன்னொரு பிரிவினர் போராடு கிறார்கள். இரண்டு இடத்திலும் காவல்துறையை நிறுத்திப் பீதியை மட்டும்தான் கிளப்பிக் கொண்டுள்ளது கேரள அரசு. உச்ச நீதிமன்ற உத்தரவுகளின்படி இளம்பெண்கள் சபரிமலைக்குள் செல்லவோ, கிறிஸ்தவ தேவால யத்தில் குறிப்பிட்ட பிரிவினர் நுழையவோ இதுவரை முடிய வில்லை. அதாவது, உச்ச நீதிமன்ற உத்தரவை நிறை வேற்றுவதுபோல இரு இடங் களிலும் ஒரே வேடம்தான் போட்டுக் கொண்டுள்ளது, கேரளத்தை ஆளும் கம்யூனிஸ்ட் கூட்டணி அரசு. 

@செ.அ. ஷாதலி, கோனூழாம்பள்ளம்.
தற்போதைய அரசியல்வாதிகளில் மனபலம் அதிகம் உள்ளவர் யார்?


வேறு யார்... எடப்பாடி பழனிசாமிதான். எந்தப் பக்கம் கேட் போட்டாலும், மனிதர் துளிகூடக் கலங்குவதாகத் தெரியவில்லையே!

கழுகார் பதில்கள்! - ‘பூனை’யமான தேர்தல் ஆணையம்!

எம்.கண்ணன், துறையூர்.
தமிழகத்தில் நோட்டாவைவிடக் குறைவான வாக்குகளை வாங்கிக் கொண்டிருக்கும் நிலையில், ‘30 நாடாளுமன்றத் தொகுதிகளில் பி.ஜே.பி வெற்றி பெறும்’ என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சொல்வது?


இதைச் சொல்வதற்குக்கூட அவருக்கு உரிமை இல்லையா?

@கார்த்தி மொழி, தஞ்சாவூர்.
தமிழக அரசின் தலைமைச் செயலாளர், இரண்டு சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தல்களைத் தள்ளிவைக்கச் சொல்லித் தேர்தல் ஆணையத்துக்குக் கடிதம் எழுதிய சில மணி நேரங்களிலேயே தேர்தலைத் தள்ளிவைத்திருப்பது அம்பலமாகி இருக்கிறதே!


ஆணையம் ‘பூனை’யம் ஆகிப் பலவாண்டுகள் ஆகின்றனவே!

@ஏ.எம்.என் பாண்டியன், திருநெல்வேலி.
சமீபகாலமாக நடக்கும் கொலை களில் கொலையாளிகள் மட்டுமல்ல,  கொலை செய்யப்பட்டவர்களும்கூட மது போதையில் இருந்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது. சமூக ஆர்வலர் களும் பொது நலம் கருதுவோரும் இந்த மதுவுக்கு எதிராக ஏதாவது செய்ய வேண்டாமா?


சசிபெருமாள் உயிரையே கொடுத்துவிட்டார். இதற்கு மேல் என்ன செய்யமுடியும்? வாக்குச் சீட்டை ஆயுதமாகப் பயன்படுத்தினால் மட்டுமே தீர்வு. ஆனால், அதையும் ஏ.டி.எம் கார்டாக மாற்றி வைத்துவிட்டனரே!

@அ.சுகுமார், கல்புதூர், காட்பாடி.
ரயில்வே, தன்னுடைய தொலைத் தொடர்பு பயன்பாட்டுக்காக அரசின் பி.எஸ்.என்.எல்-லைப் பயன்படுத்தாமல் ஏர்டெல், ஜியோ என்று தனியாரை நாடுவதன் மர்மமென்ன?


ஜி, அதெல்லாம் 4ஜி, 5ஜி என்று பெரிய பெரிய ‘ஜி’க்கள் தொடர்புடைய  சமாசாரம்ஜி. எதற்காக இதையெல்லாம் கிளறுகிறீர்கள்ஜி!

@க.சேகர், வடகோவனூர்.

‘சர்கார்’ படப் பிரச்னையில் மன்னிப்புக் கேட்க முடியாது என்று தைரியமாகச் சொல்லியிருக்கிறாரே, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்?


படமே ஓடிவிட்டதே!

கழுகார் பதில்கள்! - ‘பூனை’யமான தேர்தல் ஆணையம்!

ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ-க்களைத் தகுதி நீக்கம் செய்யக்கோரும் வழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்பு எப்படி இருக்கும்?

‘தகுதி’க்கு ஏற்ப இருக்கும்!

@மணிசோமு.
நாடாளுமன்றத் தேர்தலில் தினகரன் தலைமையில் மூன்றாவது அணி அமைந்தால், பயன் அடையப் போகும் கட்சி தி.மு.க-வா அல்லது அ.தி.மு.க-வா?


லெட்டர்பேட் கட்சிகள்.

@எல்.ஆர்.சுந்தர்ராஜன், மடிப்பாக்கம்.

அனைத்துக் கட்சிகளும் இணைந்து புயல் நிவாரணப் பணிகளில் ஈடுபட மனமில்லாமல் இருப்பது ஏன்?


மனமில்லாவிட்டால் மார்க்க முண்டு என்பதுதான் அவர் களுடைய கொள்கை!

 கேள்விகள் அனுப்ப  வேண்டிய முகவரி: 
கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன்,
757, அண்ணா சாலை, சென்னை- 600 002
kalugu@vikatan.com என்ற
இமெயிலுக்கும் அனுப்பலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு