Published:Updated:

“நாடாளுமன்றத்தில் பொய் பேசிய நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும்!”- ராகுல் காந்தி ஆவேசம்

“நாடாளுமன்றத்தில் பொய் பேசிய நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும்!”- ராகுல் காந்தி ஆவேசம்
“நாடாளுமன்றத்தில் பொய் பேசிய நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும்!”- ராகுல் காந்தி ஆவேசம்

பேல் போர்விமானம் கொள்முதல் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் தெரிவித்துவரும்  நிலையில், அதுகுறித்த விவாதங்கள் நாடாளுமன்றத்தில் நடந்தது. ரபேல் போர் விமானங்களைத் தயாரிக்கும் வேலை ஒப்பந்தம், காங்கிரஸ் ஆட்சிக் கலத்தில்  இந்திய பொதுத்துறை நிறுவனமான ஹெச்.ஏ.எல்-லுக்கு வழங்கப்பட்டிருந்து. இப்போது, ஹெச்.ஏ.எல்-லுக்குப் பதிலாக புதிதாகத் தொடங்கப்பட்ட ‘ரிலையன்ஸ் டிபென்ஸ்’ நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது,

இந்நிலையில், இது தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தில் பங்கேற்றுப்  பேசிய இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், “ரபேல் விவாகரத்தில் உண்மையைக் கண்டு காங்கிரஸ் பயப்படுகிறது. உண்மையை மறைப்பதற்காகத்தான் காங்கிரஸ் அமளியில் ஈடுபடுகிறது. நாட்டின் பாதுகாப்புதான் பி.ஜே.பி-யின் முக்கியத்துவம். ஹெச்.ஏ.எல் நிறுவனத்திற்கு ஒரு லட்சம் கோடி அளவுக்கு உற்பத்தி செய்ய ஆடர்கள் வழங்கப்பட்டுள்ளன” என்று பேசினார்.

இந்த விவாதம்குறித்து செய்தி வெளியிட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, “ நாடாளுமன்றத்தில் ஹெச்.ஏ.எல் நிறுவனத்திற்கு ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு ஆர்டர் கொடுத்திருப்பதாகப் பாதுகாப்புத்துறை அமைச்சர் பொய் சொல்லியுள்ளார். ஹெச்.ஏ.எல்-லுக்கு பணி வழங்கியது  தொடர்பான ஆதாரங்களை வெளியிட வேண்டும். இல்லையேல், அமைச்சர் பதவி விலக வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
 

இதற்குப் பதிலளித்துள்ள நிர்மலா சீதாராமன், “ ஹெச்.ஏ.எல் நிறுவனத்திற்கு ஆடர் கொடுக்கவில்லை எனச் சொல்வது தவறு. இதுவரை 26.570 கோடி ரூபாய் மதிப்பிலான பாதுகாப்புப் பணிக்கான ஒப்பந்தங்கள் ஹெச்.ஏ.எல்-லுக்கு வழங்கப்பட்டுள்ளன. இன்னும் 73 ஆயிரம் கோடி மதிப்பிலான ஆர்டர்கள் வழங்கப்பட உள்ளன. நாடாளுமன்றத்தில் நடந்துகொண்ட விதத்திற்காக ராகுல் காந்தி மன்னிப்புக் கேட்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.