Published:Updated:

‘‘சலுகை அல்ல... அடையாளமே முக்கியம்!’’ - டாக்டர் கிருஷ்ணசாமி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
‘‘சலுகை அல்ல... அடையாளமே முக்கியம்!’’ - டாக்டர் கிருஷ்ணசாமி
‘‘சலுகை அல்ல... அடையாளமே முக்கியம்!’’ - டாக்டர் கிருஷ்ணசாமி

‘‘சலுகை அல்ல... அடையாளமே முக்கியம்!’’ - டாக்டர் கிருஷ்ணசாமி

பிரீமியம் ஸ்டோரி

ண்டதேவி தேர் விவகாரம், மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர் பிரச்னைகளில் கவனம் ஈர்த்த ‘புதிய தமிழகம்’ கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, தற்போது, ‘தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இருந்து தேவேந்திரகுல வேளாளர்களை வெளியேற்றி, பிற்பட்ட சாதியினராக அறிவிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தி வருகிறார். பி.ஜே.பி-க்கு ஆதரவாக வும் பேசிவருகிறார். ‘பெரியாரியம் பேசிய டாக்டர், இப்போது சங் பரிவாருடன் நெருக்கமாக இருக்கிறார்’ என்றெல்லாம் அவர்மீது விமர்சனங்கள் அனல்பறக்கின்றன. இப்படியான சூழலில் கிருஷ்ணசாமியைச் சந்தித்துப் பேசினோம்.

“ ‘கிருஷ்ணசாமி சொல்லும் பெயரை எல்லாம் படத்துக்கு வைக்க முடியாது. அவர் எதையாவது சொல்லிக்கொண்டுதான் இருப்பார், அவருக்கு இந்த பஸ்ஸில் இடமில்லை’ என்று கமல் பேசியிருக்கிறாரே?’’

“அவர், முதலில் வைக்க நினைத்த பெயரை வைக்க வில்லை என்று கூறியிருக்கிறார்... அது போதும். மற்றபடி, அவரைப் பற்றிப் பேச ஒன்றுமில்லை”.

“தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இருந்து விலகுவது தேவை இல்லாதது என்று சிலர் கூறுகிறார்களே?”

“வேளாண் சமூகமான தேவேந்திரகுல மக்களை ஆங்கிலேயர் ஆட்சியில் சலுகைகள் வழங்குவதற்காக பஞ்சமர், ஆதி திராவிடர் என்கிற பெயர்களில் தாழ்த்தப் பட்டோர் பட்டியலில் சேர்த்து விட்டார்கள். அதே பட்டியலில் சேர்க்கப்பட்ட இன்னொரு சமூகத்தினர் லண்டன் சென்று முறையிட்டு, அதிலிருந்து விலகிவிட்டார்கள். ஆனால், லண்டன் சென்று முறையிடு வதற்கு அப்போது எங்கள் மக்களிடம் பொருளாதார வசதி இல்லை. இதனால் 90 வருடங் களாக இந்தச் சமுதாயம் பின்தங்கிவிட்டது. பட்டியலில் இருந்து வெளியேறக் கூடாது என்பவர்கள், சலுகை போய்விடும் என்கிறார்கள். உலகம் முழுவதும் பல்வேறு இன மக்கள் போராடுவது சலுகைக்காக அல்ல; தங்களது அடையாள மீட்புக்காக”.

‘‘சலுகை அல்ல... அடையாளமே முக்கியம்!’’ - டாக்டர் கிருஷ்ணசாமி

“உங்கள் கோரிக்கையை முன் வைத்து சில வருடங்களுக்கு முன்பு மதுரையில் அமித் ஷா தலைமையில் மாநாடு நடத்தினீர்கள். ஆனாலும், நிறைவேற்றப்படவில்லை. காரணம், என்னவாக இருக்கும்?”

“அவர்களும் அரசியல் செய்கிறார்கள்போல. உண்மை யான அக்கறை இல்லை. ஆனால், தற்போது நான் இதை வலியுறுத்தி வருவதால் அனை வராலும் கவனிக்கப்பட்டு வருகிறது”.

“ ‘பெரியாரியம் பேசிய டாக்டர் இப்போது ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தம் பேசுகிறார்’ என்கிற விமர்சனம் குறித்து...’’

“காலம் மாறிவருகிறது. அன்றைக்கு மார்க்சிஸம் பேசிய வர்கள் இப்போதும் அப்படியே பேசுகிறார்களா? திராவிடக் கட்சிகளும் மாறிவிட்டன. எங்கள் மக்களின் நியாயமான கோரிக்கைகளை  யார் ஆதரிக்கி றார்களோ, அவர்களுடன் இருப்பதில் தவறில்லை. ஆர்.எஸ்.எஸ் அமைப்பை முழுவதுமாக குறைசொல்ல முடியாது. நாம் எல்லோரும் இந்தியர் என்கிற அடையாளத்துக்காக அவர்கள் பாடுபடுகிறார்கள்”.

“பி.ஜே.பி-யுடன் இணக்கமாக இருக்கிறீர்கள். ஆனாலும், அவர்கள் தியாகி இமானுவேல் குருபூஜை நிகழ்ச்சியில் கலந்துகொள்வதில்லை, ‘மதுரை விமான நிலையத்துக்கு இமானுவேல் பெயரை வைக்க வேண்டும்’ என்ற உங்கள் கோரிக்கைக்கும் ஆதரவும் தெரிவிக்க வில்லை...’’

“உண்மைதான். பி.ஜே.பி-யின் மாவட்ட அளவிலான நிர்வாகிகள் மட்டுமே தியாகி இமானுவேல் குருபூஜையில் கலந்துகொள்கிறார்கள். ஆனால், பி.ஜே.பி-யின் முக்கியத் தலைவர்கள், தியாகி இமானு வேல் சேகரனார் அவர்களை மத அடையாளத்துடன் பார்க்கிறார்கள்போல”.

‘‘சலுகை அல்ல... அடையாளமே முக்கியம்!’’ - டாக்டர் கிருஷ்ணசாமி

“தமிழகத்தில் ஆணவக் கொலைகள் தொடர்ந்து நடைபெறுகிறதே?”

“2012-ம் ஆண்டுக்குப் பின்புதான் ஆணவக் கொலைகள் அதிகரித்து விட்டன. காரணம், பா.ம.க நிறுவனர் ராமதாஸ் அந்த நேரத்தில் ஒவ்வொரு மாவட்ட மாகச் சென்று சில சாதியினருடன் ரகசியக் கூட்டம் போட்டார்.  அதற்கொரு  விசாரணைக் கமிஷன் வைத்தாலே பல உண்மைகள் வெளிவரும். அதனாலேயே பெற்ற பிள்ளைகளைக்கூடக் கொடூரமாகக் கொலை செய்கிறார்கள்.’’

“கஜா புயலில் தமிழக அரசின் நடவடிக்கை எப்படி உள்ளது, ‘மத்திய அரசு உதவிக்கரம் நீட்டவில்லையே’ என்ற புகார் எழுந்துள்ளதே?’’

‘‘கடந்தகால பேரிடர்களை ஒப்பிடும்போது இப்போது தமிழக அரசு சிறப்பாகச் செயல் படுகிறது. உடனே எல்லாம் முடியும் என்றால் எப்படி? ஒரு நிகழ்வு நடந்துவிட்டால், மத்திய அரசு உடனே அங்கே வந்து நிற்க வேண்டுமா? இப்போதுதான் மத்திய குழு, கணக்கு எடுத்து வருகிறது. எதற்கெடுத்தாலும் மத்திய அரசை குறைசொல்கிற அரசியலை இங்கே சிலர் செய்துகொண்டிருக்கிறர்கள்.’’

“வருகிற இடைத்தேர்தலில் யாருடன் கூட்டணி?”

“காலியாக இருக்கும் இருபது தொகுதிகளிலும் போட்டி யிடுவோம். யாருடன் கூட்டணி என்பதை கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவெடுப்போம்.’’

- செ.சல்மான்
படம்: வி.சதீஷ்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு