Published:Updated:

பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவை சந்தித்த நடிகை விஜயசாந்தி!

பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவை சந்தித்த நடிகை விஜயசாந்தி!
பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவை சந்தித்த நடிகை விஜயசாந்தி!

முன்னாள் முதல்வர் கருணாநிதி, கடந்த ஆகஸ்ட் மாதம்  காலமானதால், அவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருவாரூர் தொகுதிக்கான இடைத்தேர்தல், வரும் ஜனவரி 28-ம் தேதி நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.  ஏற்கெனவே, ஜெயலலிதாவின் இறப்புக்குப் பிறகு  நடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சசிகலாவின் உறவினரான தினகரன் வெற்றிபெற்றார்.

இந்நிலையில், திருவாரூர் இடைத்தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சியின் கூட்டணியில் உள்ள தி.மு.க-வும் வேட்பாளரை அறிவித்தது. அதேபோல, அ.ம.மு.க வேட்பாளராக காமராஜை அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் தினகரன் அறிவித்திருந்த நிலையில், முன்னாள் எம்.பி-யும் திரைப்பட நடிகையுமான விஜயசாந்தி, கடந்த வெள்ளி அன்று சொத்துக்குவிப்பு வழக்கில் கைதுசெய்யப்பட்டு, கர்நாடக பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் உள்ள அ.ம.மு.க-வின் பொதுச்செயலாளர் சசிகலாவை சந்தித்துப் பேசியுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. ஏற்கெனவே, தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்கள் சசிகலாவை சந்தித்து வருகின்றனர்.

 சசிகலாவின் கணவர் நடராஜன் இறந்தபோது சந்தித்து ஆறுதல் கூறியிருந்தார். நாடாளுமன்றத் தேர்தலுக்கான காங்கிரஸ் தி.மு.க கூட்டணி கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸைச் சேர்ந்த விஜயசாந்தியின் சசிகலா உடனான சந்திப்பு கவனிக்கத்தக்கது என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.