Published:Updated:

“தனக்குப் பின் அ.தி.மு.க-வே இருக்கக் கூடாதென ஜெ. நினைத்தார்!”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
“தனக்குப் பின் அ.தி.மு.க-வே இருக்கக் கூடாதென ஜெ. நினைத்தார்!”
“தனக்குப் பின் அ.தி.மு.க-வே இருக்கக் கூடாதென ஜெ. நினைத்தார்!”

திவாகரன் அதிரடி...

பிரீமியம் ஸ்டோரி

ரி... இதேரீதியிலான கேள்விகளுக்கு திவாகரன் என்ன பதில் சொல்கிறார்... அதையும் பார்ப்போம்!

“ஜெயலலிதா, கடைசிக் காலத்தில் அரசியலைவிட்டு விலக நினைத்தாரா?”

“உடல் நலம் சரியில்லாமல் அவர் இருந்தார். அரசியலை விட்டு விலகும் எண்ணம் அவருக்கு இல்லைதான். ஆனாலும், ‘அரசியலைவிட்டு விலகப்போகிறேன்; எனக்கு அரசியல் வேண்டாம்’ என்று தினம்தோறும் சொல்லிக்கொண்டிருந்தார். அவருடன் இருந்த சிலர், பயங்கரமாகக் கூத்தடித்துக் கொண்டிருந்தனர். ஒருவேளை அவர்களை எச்சரிக்கவே இதுபோன்று அவர் சொல்லியிருக்கலாம் என்று நினைக்கிறேன்.”

“தனக்குப் பின் அ.தி.மு.க-வே இருக்கக் கூடாதென ஜெ. நினைத்தார்!”

“ஜெயலலிதாவின் சொத்துகளுக்கு வாரிசு யார்?”

“ரத்த உறவுப்படிப் பார்த்தால், ஜெயலதாவின் சொத்துகளுக்கு தீபாவும் தீபக்கும்தான் வாரிசு. அவர்களின் பெற்றோரின் செயல்பாடுகள் பிடிக்காமல், அவர்களை அம்மா ஒதுக்கி வைத்திருந்தார்.”

“ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு யார்?”

“அரசியல் வாரிசு என யாரையாவது அறிவிக்க நினைத்திருந்தால், அவர் நன்றாக இருக்கும்போதே அறிவித்திருப்பார். யாருடைய நடவடிக்கையும் அவருக்குப் பிடிக்கவில்லை. எங்கள் குடும்பத்திலும் அவர் யாரையும் விரும்பவில்லை. தனக்குப் பிறகு அ.தி.மு.க-வே இருக்கக் கூடாது என்று அவர் நினைத்திருக்கலாம்.”

“ஜெயலலிதாவிடம் இருந்த கணக்கில் வராத பணம் எல்லாம் சசிகலா குடும்பத்திடம் இருப்பதாகச் சொல்லப் படுகிறதே?”

“அதற்கு வாய்ப்பே இல்லை. 2011-ம் ஆண்டு ஒரு குரூப் பெரிய லாபி செய்து சசிகலாவை போயஸ் கார்டனைவிட்டு வெளியே அனுப்பியது. அதன் பிறகு சமாதானமாகி சசிகலா உள்ளே சென்றார். ஆனாலும் அதன் பிறகும்கூட, ஜெயலலிதா சொல்வதை சசிகலா சரியாகக் கேட்கவில்லை. எந்த அமைச்சர்களையும் சந்திக்கவில்லை. அதனால்தான், நால்வர் அணியையே ஜெயலலிதா அமைத்தார். அவர்களிடம்தான் ஜெயலலிதாவின் மொத்தப் பணமும் இருக்கிறது.”

“ஜெயலிதாவுக்கு ‘ஸ்லோ பாய்சன்’ கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுவது பற்றி?”

“ஒரு மாத்திரை சாப்பிடுவதற்கே ஆயிரம் டாக்டர்களிடம் அவர் ஆலோசனைக் கேட்பார். அவரது அறுபதாவது பிறந்தநாளை, திருக்கடையூரில் கொண்டாடினோம். அப்போதே, 150 அடி தூரம் அவரால் நடக்க முடியவில்லை. இதை அவரே அப்போது சொன்னார். ‘எங்கள் குடும்பத்தில் யாரும் அறுபது வயதுக்குமேல் உயிருடன் இருந்ததில்லை. நான் இருப்பது போனஸ்தான்’ என்றும் அவர் கூறினார். அமைச்சர்கள் கண்டதைப் பேசிக்கொண்டிருக்கின்றனர்.”

“சசிகலாவை சிறையில் தினகரன் சந்தித்துவிட்டு வெளியே வந்து சொல்வதெல்லாம் உண்மையா?”

“சமீபகாலமாக தினகரன் சிறைக்குச் செல்வதுடன் சரி... சசிகலாவைச் சந்திப்பதே இல்லை. தினகரன் யாரையும் மதிப்பதில்லை. சசிகலாவையும் அவர் மதிப்பதில்லை. சசிகலா சொல்வதையும் கேட்பதில்லை. தினகரனே எல்லாவற்றையும் பேசிவருகிறார்.”

- கே.குணசீலன்,
படம்: ம.அரவிந்த்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு