பிரீமியம் ஸ்டோரி
ஆஹான்

 நறுமுகை தேவி
* கொலுசு சத்தம் கேட்டால் மாணவர்களின் கவனம் திசைமாறும்... படிப்பு கெட்டுவிடும்.
* பெண்கள் சபரிமலைக்கு வந்தால், ஆண்களின் மனசு அலைபாயும். விரதம் கலைந்துவிடும்
* பெண்கள் லெக்கின்ஸ் போட்டால், காத்தடிக்கும்போது டாப்ஸ் கொஞ்சம் விலகினாலும் ஆண்களின் கற்புக்கு ஆபத்து.
* பெண்கள் உடை விஷயத்தில் சரியாக இல்லாததால்தான், பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் அதிகரிக்கின்றன.
* பெண்கள் இரவு நேரங்களில் வீட்டில் தங்காமல் ரோட்டில் சுத்துவதால் தான், ஆண்கள் பாலியல் வன்முறையில் ஈடுபடுகிறார்கள்..

  இன்னும்... சொல்லுங்க சார்... சொல்லுங்க!

ஆஹான்

Ira mrugavel
அலகாபாத்தில் கும்பமேளாவை ஒட்டி மூன்று மாதங்களுக்கு மண்டபங்கள், அரங்குகள், ஹோட்டல் ஹால்கள் என்று பொது இடங்களில் திருமணங்கள் நடத்த யோகி ஆதித்யநாத் தடைவிதித்திருக்கிறார். ஏற்கெனவே திருமண மண்டபங்களைப் பதிவுசெய்திருந்த பலநூறு குடும்பங்களும், திருமணம் தொடர்பான வணிகத்தில் இருப்பவர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனராம். முதலில் கேள்விப்பட்டபோது யாரோ விளையாடுகிறார்கள் என்று நினைத்தேன். பின்பு உண்மைதான் என்று தெரிந்தபோது அதிர்ச்சி எல்லாம் தோன்றவில்லை. சிரிப்பு சிரிப்பாக வருகிறது!

Sundar Rajan

தேசியப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 353 கோடி ரூபாயைத் தருவதாக அறிவித்துள்ளது ஒன்றிய அரசு. ஒவ்வொரு முறையும் ஏன் மாநில அரசுகள் ஒன்றிய அரசிடம் கெஞ்ச வேண்டும்? மாநிலத்திலுள்ள மக்களிடம் வசூலிக்கும் பணத்தை வாங்குவது மட்டுமே ஒன்றிய அரசின் வேலையாக உள்ளது. வருமானவரி, ஜி.எஸ்.டி., உற்பத்தி வரி அனைத்தையும் மாநில அரசுகளே வசூலிக்கட்டும். வசூலிக்கப்படும் வரியிலிருந்து உள்நாட்டு உற்பத்திக்கு ஏற்றவாறு ராணுவம், ரயில்வே என ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் தேவையான விஷயங்களுக்கு மத்திய அரசுக்கு, மாநிலங்கள் நிதியை ஒதுக்கட்டும். இதை, தமிழகம் முன்னோடியாக அறிவிக்கட்டும். உண்மையான கூட்டாட்சி அதுதான்.

 புதுகை மதியழகன்
16 நாள்களைக் கடந்தும், புயல் வீசிய அன்றைக்கு கிடந்ததைப் போலவே எங்களின் வீடு, வாசல் கிடக்க வேண்டுமென நிவாரணப் பொருள்களைக் கொண்டுவருபவர்கள் எதிர்பார்ப்பது எந்த வகை நியாயம் எனப் புரியவில்லை.

ஆஹான்

Kavin malar
பல முகாம்களில் பள்ளிக்கூடம் திறக்கப்போகிறார்கள். முகாம்களைக் காலி செய்யச் சொல்லிவிட்டது அரசு. முகாம்களில் வாழும் மக்களுக்கு, அடுத்து என்ன செய்வது எனத் தெரியவில்லை. சில இடங்களில் பகலில் பள்ளி, இரவில் முகாம் என அரசிடம் கோரிக்கையை வைத்திருக்கிறார்கள் மக்கள். சில இடங்களில் ஜெனரேட்டர்களை மட்டும் வைத்துவிட்டு டீசலுக்கு ஏற்பாடு செய்யவில்லை. இருட்டில் இருக்கிறார்கள் மக்கள். சில இடங்களில் முகாமைதான் மூடப் போறாங்களே என்று ஜெனரேட்டர்களை எடுத்துக் கொண்டுபோய்விட்டனர். அங்கெல்லாம் மீண்டும் இருள். தாதன் திருவாசல் அருகே முதல்வர் எடப்பாடி பழனிசாமி நூறு கார்களுடன் ஊர்வலம் வந்தார். இதற்கான எரிபொருளுக்கு எல்லாம் அரசிடம் காசு இருக்கும். ஜெனரேட்டருக்கு இல்லை... நியாயமா இது?

ஆஹான்

 mufthimohamed1
கேரள வெள்ளத்தில் உதவியதற் காக ரூ.34 கோடி ‘பில்’ அனுப்பியது விமானப்படை - பினராயி விஜயன்

# அது விமானப்படையா இல்ல, ஃபைனான்ஸ் கடையா!

 sultan_Twitz
தமிழக விவசாயிகள் தன்மானத்தை இழந்துவிட்டனர் - பொன்னார்

# அப்புறம் சார் மட்டும் கேரளாவுக்கு போயி தங்கப்பதக்கமா வாங்கிட்டு வந்தீங்க..?!

 amuduarattai
புயல் பாதித்து ஆறு மணி நேரத்தில் நாங்கள் ஓடினோம். ஆனால், கமல் 17-வது நாளில் பார்வையிடப் போயிருக்கிறார்- ஹெச்.ராஜா

# நீங்க பயந்து ஓடியதையாண்ணே சொல்றீங்க.

ஆஹான்

sultan_Twitz
எம்.பி தேர்தலில் தி.மு.க-வின் வெற்றிக்காகப் பாடுபடுவேன் - வைகோ

# இதுக்கு பேசாம உங்க வாட்சப் குரூப்பை கலைச்சிட்டு தி.மு.க-வில் இணைஞ்சிடலாமே!

 HAJAMYDEENNKS
இடைத்தேர்தல் நடந்தால் 32 அமைச்சர்களை அனுப்பித் தீயா வேலை செய்யும் அரசாங்கம், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங் களில் அதை நடைமுறைப் படுத்தாதது ஏன்?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு