Published:Updated:

மிஸ்டர் கழுகு: ''அந்தப் பெயரை இங்கு சொல்ல மாட்டேன்!''

மிஸ்டர் கழுகு: ''அந்தப் பெயரை இங்கு சொல்ல மாட்டேன்!''

மிஸ்டர் கழுகு: ''அந்தப் பெயரை இங்கு சொல்ல மாட்டேன்!''

மிஸ்டர் கழுகு: ''அந்தப் பெயரை இங்கு சொல்ல மாட்டேன்!''

Published:Updated:
மிஸ்டர் கழுகு: ''அந்தப் பெயரை இங்கு சொல்ல மாட்டேன்!''

ழுகார் நம் அலுவலகத்துக்குள் நுழையும் போது தா.கி. மேட்டர் லே-அவுட் ஆகிக் கொண்டு இருந்தது. அதை அர்த்த புஷ்டியுடன் பார்த்த கழுகார்...

''தூசி தட்டி விட்டார்களா?'' என்று மெதுவான குரலில் சொல்லிக் கொண்​டார்!

''ஜெயலலிதாவின் 'ஆபரேஷன் மன்னார்குடி’ ஆக்ஷனின் எதிர்​வினைகள் எங்கெங்கோ கேட்க ஆரம்பித்

மிஸ்டர் கழுகு: ''அந்தப் பெயரை இங்கு சொல்ல மாட்டேன்!''

​துள்ளன.  சசிகலா தரப்பினரால் பலன் அடைந்த அ.தி.மு.க-வினரை விடவும்  தென் மாவட்ட தி.மு.க. வட்டாரம்தான் இப்போது திகில் பிடித்துக் கிடக்கிறது என்கிறார்கள். வம்பு, வழக்குகளில் இருந்து தங்களை காத்துக்கொள்ள மன்னார்குடி வகையறாக்களுடன் இவர்கள் போட்டிருந்த டீலிங்குகள் இப்போது வெளிச்​சத்துக்கு வந்து கொண்டி​ருக்​கிறதாம்'' என்று செய்திகளைக் கொட்ட ஆரம்பித்தார் கழுகார்!  

''அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் தி.மு.க-வின் மதுரையின் குறுநில மன்னர்கள் மீது வழக்குகளைப் பாய்ச்சி சிறைக்குள் தள்ளினார். பல பேருக்கு குண்டர் பட்டத்தையும் சூட்டியது போலீஸ்! இவர்களில் பலரும் வழக்கு​களை உடைத்துக் கொண்டு, சர்வ சுதந்திரமாய் இப்போது வெளியில் வந்துவிட்டார்கள். யார் யாரை எல்லாம் ஒடுக்குவேன் என்று ஜெயலலிதா பெயர் வாசித்தாரோ... அவர்களையே காப்பாற்றிவிட மன்னார்குடி வகையறாக்கள் நடத்திய மலைக்க வைக்கும் பேரங்கள் இப்போது வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருக்கின்றன.''

''சற்றே விளக்கிச் சொல்லலாமே...''

''குண்டர் தடுப்புச் சட்டத்தில் உள்ளே போனவர்கள் எல்லாம் வரிசையாய் வெளியில் வர ஆரம்பித்ததுமே, அந்த வழக்குகள் தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் அவசரமாய் சென்னைக்கு அனுப்பச் சொல்லி மதுரை போலீஸுக்கு உத்தரவு போயிருக்கிறது. ஒரு அதிகாரி இந்த ஆவணங்களை ஒரு நாள் முழுக்க கோர்ட்டில் காத்திருந்து கலெக்ட் செய்து உடனடியாக சென்னைக்கு அனுப்பினார். அவற்றைப் பார்த்த பிறகுதான், கீழ்மட்ட போலீஸார் சிலரது சித்து விளையாட்டுக்கள் வெட்ட வெளிச்சமானதாம். இதையடுத்து, சிறைத் துறையைக் கவனிக்கும் பொறுப்பில் இருந்த அதிகாரி ஒருவரது ஆலோசனையின் பேரில்   மதுரைக்கு இரண்டு ரிட்டையர்டு போலீஸ் டி.எஸ்.பி-க்கள் சென்றார்கள். 'ரெட் ஃபைல்’ ஒன்றை கார்டனுக்கு  சமர்ப்பித்தார்கள்''

''அதாவது..?''

##~##

''அதாவது... 'குண்டர் சட்டத்தில் சிக்கிய ஒருவரிடம் அவரது  சொத்துக்களில்  சரி பாதியை பேரமாக பேசி இருக்கிறார்கள்’ என்று அதில் சொல்லப்பட்டு இருந்ததாம். 'சிறைக்குள்ளேயே சகல வசதியுடன் இருந்துவிட்டு வெளியில் வந்திருக்கும் அவர், இப்போது ரொம்பவும் தெம்பாக இருக்கிறார். மதுரையின் பெரிய கான்ட்ராக்ட்டுகள் இப்போதும் இவரது பினாமிகளுக்கே வழங்கப்பட்டு வருகிறது. இது தெரிந்து விளக்கம் கேட்ட துறை அமைச்சரை மன்னார்குடி ஆட்கள் மிரட்டியுள்ளார்கள்’ என்றும் அந்த அறிக்​கையில் வருகிறதாம்.''

''சொல்லும்போதே அதிருதே...''

''தி.மு.க. வி.ஐ.பி. ஒருவரின் மருமகனையும்  போலீஸ் நடவடிக்கையில் இருந்து காப்பாற்றி இருக்கிறார்கள். இதே ரூட்டில், அழகிரிக்கு நெருக்கமாக இருந்த பலர், டீல் போட்டு தங்களைத் தற்காத்துக் கொண்டு விட்டதாகவும் தெரிகிறது. மதுரைக்குப் பக்கத்தில் உள்ள மாவட்டங்களைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் இருவரும் தி.மு.க. மாவட்டச் செயலாளர் ஒருவரும் இந்த லிஸ்டில்

மிஸ்டர் கழுகு: ''அந்தப் பெயரை இங்கு சொல்ல மாட்டேன்!''

வருகிறார்கள். பினாமி நபர்களின் சிம் கார்டுகள் மூலமாக இவர்கள் அனைவரும் மன்னார்குடி தரப்பில் யார் யாருடன் பேசினார்கள் என்ற விவரத்தை எல்லாம் இந்த உளவுக் குழு பக்காவாகத் திரட்டி கார்டனுக்குத் தந்துள்ளதாம்.''

''அப்படியா!''

''சசிகலா உள்ளிட்டவர்களோடு வெளியேற்றப்​பட்டவர்களில் ஒருவர் மிடாஸ் மோகன். சசிகலாவுக்குச் சொந்தமான மிடாஸ் மதுபான ஆலையின் நிர்வாகி. போலீஸ் அதிகாரிகளை டிரான்ஸ்ஃபர் போடுவது தொடங்கி கான்ட்ராக்ட், கமிஷன் என, மிடாஸ் மோகனின் சக்தி பல தளங்களிலும் விளையாடி இருக்கிறது. ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு குறிவைத்து வளைக்கப்பட்ட பெரும் புள்ளிகள் சிலரைக் காப்பாற்றுவதாகச் சொல்லி, பேரங்களை முடித்து சொன்னபடியே சிலரைக் காப்பாற்றியும் இருக்கிறதாம். அரெஸ்ட் பட்டியலில் இருந்த சிலரின் பெயர்களை வெளியே கசியவிட்டு, தங்கள் காலடியில் வந்து விழவைத்து ரசித்தும் இருக்கிறது!''

''அப்போ ராவணனுக்கு அடுத்தபடியாக அம்மையாரின் அசாத்திய கோபம் இந்த மோகன் மீதுதானா..?''

''நிச்சயமாக! சசிகலாவின் உறவினர்கள் பிசினஸ் சம்பந்தமான எந்த வேலைக்கும் தங்களது சமூகத்தைச் சேர்ந்தவரைத் தவிர, வேறு யாரையும் நியமிக்க மாட்டார்கள். அதில் தப்பித் தவறி மிகுந்த நம்பிக்கை​யோடு மிடாஸ் நிறுவனத்துக்கு நியமிக்கப்பட்டவர் மோகன். 'கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போதே மோகனை அணுகத் தொடங்கியது கட்சிக்காரர்கள் கூட்டம். ஆனாலும், அப்போதெல்லாம் அடக்கியே வாசித்தவர், சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. ஜெயித்த பிறகு ஒரேயடியாக மாறிப்போனார். அவரை நெருங்க நினைத்த மீடியேட்டர்கள் தரப்பு, அவருடைய மகனான சஞ்சய் மோகன் மூலமாக நினைத்ததை எல்லாம் சாதித்துக் கொண்டார்கள். கடந்த ஆட்சியில் பார்க் ஹோட்டலில் நடந்த ஒரு பிரச்னையில் அழகிரியின் மகன் துரை தயாநிதி பெயர் பரபரப்பாக அடிபட்டது. அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த உடனேயே நிலுவையில் இருந்த அந்த வழக்கு தோண்டப்பட்டது. இதுதெரிந்து, சில காலம் வெளிநாட்டிலேயே தங்கி இருந்தார் துரை தயாநிதி. அ.தி.மு.க-வின் சக்தி மிகுந்த புள்ளிகள் பலரிடமும் அழகிரி தரப்பு பேசிப் பார்த்தது. ஆனால், யாரும் உதவ முன்வரவில்லை. இதற்கிடையில்தான் மிடாஸ் மோகனின் மகன் சஞ்சய் மூலமாகத் தூதுப் படலம் தொடங்கியதாம். தயாநிதிக்கு எந்தப் பிரச்னையும் வராது என்கிற உத்திரவாதம் சஞ்சய் மோகன் மூலமாகக் கொடுக்கப்பட்டது என்றும் சொல்கிறார்கள்.  அதன் பிறகே மதுரை மண்ணில் மறுபடி கால் வைத்தாராம் அழகிரியின் வாரிசு''

''ஆட்சி மாறினாலும் காட்சி மாறாது என்று இதைத்தான் சொல்கிறார்களா?''

'’உண்மைதான். கடந்த ஆட்சியில் துரை தயாநிதிக்கு தோஸ்தாக இருந்த பலரும், இந்த ஆட்சியில் சஞ்சய் மோகனின் வலது கரங்களாக வலம் வரத் தொடங்கினார்களாம். துரை தயாநிதியை வழக்கில் இருந்து காப்பாற்றியதைச் சொல்லியே, கைது பட்டியலில் இருந்த பலரிடமும் புகுந்து விளையாடி இருக்கிறது இந்த மீடியேட்டர்கள் தரப்பு. இதற்குப் பரிசாக சஞ்சய் மோகனை சகல விதத்திலும் கவனித்து இருக்கிறது மீடியேட்டர்கள் க்ரூப். மிடாஸ் மோகன் குறித்து விசாரிக்கத் தொடங்கிய போலீஸ், இப்போது சஞ்சய் - துரை தயாநிதி சகவாசம் குறித்த ஆதாரங்களையும் அள்ளி இருக்கிறது.''

''நீர் சொல்வதை வைத்துப் பார்த்தால் மதுரைப் பக்கம் அதிரடிகளை மீண்டும் பார்க்கலாம் போல!'' என்ற நாம், ''பொதுக்குழுத் தகவல் ஏதாவது உண்டா?'' என்று கழுகாரிடம் கேட்டோம்!

''பொதுக்குழு தேதி அறிவித்து விட்டாலும் அன்றைய தினம் உற்சாகமான மனநிலையில் ஏனோ முதல்வர் இல்லை. இறுக்கமான முகத்துடன்தான் இருந்தார். இதற்கான பேச்சு தயாரிக்கும் போதும் அப்படித்தான் இருந்துள்ளார். என்னென்ன பேச வேண்டும் என்பதை ஜெயலலிதாவே டிக்டேட் செய்துள்ளார். அதை கோர்வையாகச் சேர்த்து பேச்சு தயாரித்துக் கொடுத்தார்கள். அதில் ஒரு இடத்தில் சசிகலா பற்றி அவருடைய பெயரைக் குறிப்பிட்டு இருந்ததாம். 'இனிமேல் அந்தப் பெயரை எதற்காகவும் உச்சரிக்க மாட்டேன்’ என்று அழுத்தமாகச் சொன்னாராம் ஜெயலலிதா. அவரது தீர்க்கமான முடிவைப் பார்த்து சுற்றி இருப்பவர்களே பதறிப் போய் இருக்கிறார்கள்.''

''ஆனால் இன்னமும் நமது எம்.ஜி.ஆரில் சசிகலா பெயர் வருகிறதே... பப்ளிஷராக?''

''அதற்கும் மாற்று ஆளைத் தயார் செய்துவிட்டார் ஜெயலலிதா. நமது எம்.ஜி.ஆர். பத்திரிகைக்குப் புதிய ஆசிரியராகவும் பப்ளிஷராகவும் வரப் போகிறவர் கவிஞர் மருது அழகுராஜ். 'சித்திரகுப்தன்’ என்கிற பெயரில் தி.மு.க-வுக்கு எதிராக கவிமழை பொழிபவர் இந்த அழகுராஜ்தான். இந்தப் பதவி சட்டபூர்வமானது என்பதால், பூர்த்தி செய்யவேண்டிய சில சம்பிரதாயங்கள் இருக்கின்றன. அதில்தான் தாமதம்'' என்ற கழுகார்,

''இளவரசியின் சம்பந்தி திருச்சி கலியபெருமாள் சீக்கிரமே தன் மகனுக்கு பெரிய அளவில் திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து இருந்தாராம். அவர் வீட்டுக்குப் பெண் கொடுக்க போட்டி மேல் போட்டியாக கட்சிக்காரர்கள் பலரும் மொய்த்து இருக்கிறார்கள். கோட்டை மாவட்டத்தின் அ.தி.மு.க. மாவட்டச் செயலாளருக்கு அந்த அதிர்ஷ்டம் அடித்ததாம். அவருடைய மகளை கலியமூர்த்தி மகனுக்குப் பேசி முடிக்கப்பட்டது. ஆனால், இடையிலேயே துரத்தல் படலம் அரங்கேற... அதிர்ஷ்டமே அதிரடியாக மாறியதில், கல்யாண வேலை ஸ்டாப்.  கலங்கிப் போயிருக்கும் அந்த மாவட்டச் செயலாளர், கலியபெருமாள் கால் செய்தால்கூட அட்டென்ட் பண்ணாமல் எஸ்கேப் ஆகிறாராம்.!''

''இன்னும் யார் யாருக்கு என்ன குடைச்சல் வரப் போகிறதோ?''

''கல்தா படலம் துவங்கி மூன்று வாரங்கள் ஆகப்போகிறது. சசிகலா கோஷ்டி ஆதரவு அதிகாரிகளை இன்னும் மாற்றவில்லை என்று கோட்டை வட்டாரம் கவலைப்படுகிறது.  திருச்சி, கோவை, மதுரை போன்ற ஊர்களில் முக்கியப் பதவிகளில் இருக்கிறவர்கள், மன்னார்குடி வகையறாவின் ஆசி பெற்றவர்கள். பெரும்பாலான மந்திரிகளின் பி.ஏ, உதவியாளர்கள், டிரைவர்கள், தோட்டக்காரர்களும்கூட அந்த ரகத்தினர். இந்தப் பதவிகளுக்கான நியமனம் வந்தபோது, தகுந்த தகுதி இருந்தும் பின்னுக்குத் தள்ளப்பட்டவர்கள் புத்தாண்டு தினத்தன்று திருவல்லிக்கேணியில் உள்ள பழமையான லாட்ஜ் ஒன்றில் சந்தித்தார்களாம். முக்கியத் துறைகளில் கடந்த மாதங்களில் 'மன்னை' பெயரைச் சொல்லி தலை எடுத்து ஆடியவர்களின் பெயர் விவரங்களை லிஸ்ட் எடுத்துப் பேசினார்களாம். இந்தப் பட்டியல் இப்போது உளவுத்துறை தலைவர் மேஜைக்கும் போய் விட்டது!''

''ஓஹோ!''

''முதல்வரைச் சுற்றி திடீரென வேற்று மொழி வாசனை அதிகமாக அடிப்பதாகவும் ஒரு தகவல் மையம் கொண்டுள்ளது. முதல்வர் அலுவலகத்துக்கு அடிக்கடி வந்து போகும் வாய்ப்புள்ள முக்கிய அதிகாரிகளில் சிலர் அந்தப் பக்கத்து மாநில  மொழியிலேயே உரையாடிக் கொள்கிறார்களாம் . இந்த புது லாபியை பயன்படுத்தி, வெளியில் இருக்கும் சிலர் முக்கியப் பதவிகளை பிடிக்கத் தூண்டில் வீசி வருகிறார்களாம். குறிப்பாக, ஐ.பி.எஸ். அதிகாரிகளில் சீனியர் அதிகாரிகள் இருவர் டி.ஜி.பி. ஆபீஸில் முக்கியப் பதவியில் உட்காரப் பார்கிறார்களாம்'' என்றதோடு கழுகார் விட்டார் ஜூட்!

படங்கள்: சு.குமரேசன்

•  வி.சி.க.வில் களையெடுப்பு!

மிஸ்டர் கழுகு: ''அந்தப் பெயரை இங்கு சொல்ல மாட்டேன்!''

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் வரும் 7-ம் தேதி சென்னையில் நடக்கிறது. இதில், இப்போதுள்ள தலைமை நிர்வாகம், மாநில, மாவட்ட நிர்வாகிகள் விடுவிக்கப்பட்டு, புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட உள்ளனர். ஏற்கெனவே நடந்த இரண்டு மாநில செயற்குழுக்களிலும், மாநில நிர்வாகிகள் பற்றி கடுமையான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. ஆனால், அவற்றுக்கெல்லாம் கட்சித் தலைவர் திருமாவளவன் எந்த ரியாக்ஷனும் காட்டவில்லை. இந்நிலையில், கட்சிக்கு கெட்ட பெயரை உருவாக்கித் தந்தவர்களைக் களையெடுக்க வேண்டும் என்று கட்சித் தலைமைக்கு அதிக அளவில் கோரிக்கைகள் அனுப்பப்படுகின்றன. அதனால், பொதுக்குழுவில் என்ன நடக்குமோ என பரபரப்பில் இருக்கிறார்கள் விடுதலைச் சிறுத்தைகள்.