Published:Updated:

கழுகார் பதில்கள்! - லோக் ஆயுக்தா... வெறும் காகிதம்!

கழுகார் பதில்கள்! - லோக் ஆயுக்தா... வெறும் காகிதம்!
பிரீமியம் ஸ்டோரி
News
கழுகார் பதில்கள்! - லோக் ஆயுக்தா... வெறும் காகிதம்!

கழுகார் பதில்கள்! - லோக் ஆயுக்தா... வெறும் காகிதம்!

@ஆர்.மாதவராமன், கிருஷ்ணகிரி.
குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாகக் காவல்துறையிடம் சிக்கிய காயத்ரி ரகுராம், ‘ஜலதோஷத்துக்காக சிரப் குடித்ததால் ஆல்கஹால் சோதனையில் பாஸிட்டிவ் என்று வந்திருக்கலாம்’ என்கிறாரே... சாத்தியமா?


தமிழகத்தில் உள்ள மெடிக்கல் ஷாப்கள் எல்லாம் ‘டாஸ்மாக்’ கடைகளாக மாற்றப்பட்டு விட்டன என்று சொன்னாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை!

கழுகார் பதில்கள்! - லோக் ஆயுக்தா... வெறும் காகிதம்!

இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி, கரூர்.
தரக்குறைவு காரணமாகத்தான் லட்சத்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் கஜா புயலுக்குப் பலியாகிவிட்டன என்கிறார்களே?


சரி, கஜா சாய்த்துப்போட்ட தென்னை, வேம்பு, மா என்று அத்தனை மரங்களும் தரம் குறைந்தவையா? கஜா சுழன்ற வேகத்தைக் குறைத்து மதிப்பிடக் கூடாது. அது வெறுமனே கரையைக் கடந்துவிட்ட புயல் அல்ல.. சுழன்று சுழன்று சூறையாடிய சூறாவளிப் புயல்!

@உமா எம்.டி., சென்னை 92.

அரசுப் பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள் எனப் பெரும்பாலான அரசுக் கட்டடங்கள் பூத் பங்களா மாதிரியாகவே இருக்கின்றனவே?


அரசாங்கம்னா ஒரு பயம் வேணாமா!

@குருபிரகாஷ், திருப்பூர்.
தற்போதுள்ள சூழ்நிலையில் கழுகார் எந்தக் கட்சியில் சேருவார்?


‘கட்சியெல்லாம் இப்ப நமக்கெதுக்கு...
காலத்தின் கையில் அது இருக்கு!’

@நீலன், கோவை.
மாதம்தோறும் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் இந்தியாவில் வசூலாகும் ஜி.எஸ்.டி வரியில், கிட்டத்தட்ட 20 சதவிகிதத்தை தமிழகம் தருகிறது. ஆனால், புயல் நிவாரண உதவிகளை உடனடியாக மத்திய அரசு செய்யவில்லை. எதற்காக நாம் வரி செலுத்தவேண்டும்?


‘வரிகொடா இயக்கம்’ நடத்தலாமா என்று யோசிக்கும் அளவுக்கு, தமிழகம் அந்நியப் படுத்தப்பட்டு நிற்கிறது!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
கழுகார் பதில்கள்! - லோக் ஆயுக்தா... வெறும் காகிதம்!

@யோகா வெங்கட், சத்துவாச்சாரி.
மத்தியில் ஆளும் பி.ஜே.பி அரசு, எல்லா வகைகளிலும் தொடர்ந்து தமிழகத்துக்கு எதிரான நிலைப்பாட்டில் இருப்பது ஏன்?


‘எதிர்ப்பு அரசியல் செய்தால் தான் தமிழகத்தில் வளர முடியும்’ என்று ‘ராஜா’க்களும் ‘ராஜகுரு’க் களும் பி.ஜே.பி-யை தவறாக வழிநடத்துகிறார்கள் போல.

திருப்பூர் சி. இரத்தினசாமி, பொல்லிக்காளி பாளையம்.
உயர் நீதிமன்றத்தால் ஓராண்டுக்குப் பதவி நீட்டிப்புப் பெற்றிருக்கும் ஐ.ஜி-யான பொன்.மாணிக்கவேல், ஓராண்டுக்குள்ளாக சிலைக்கடத்தல் வழக்குகளை முடித்துவிடுவாரா?


எல்லாம் அந்த ‘மகா தேவ’னுக்கே வெளிச்சம்!

டி.கிருஷ்ணமூர்த்தி, விழுப்புரம்.

கஜா புயல், டெல்டாவை அழிப்பதற்காகத் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஒன்று என்றொரு செய்தி உலாவிக்கொண்டிருக்கிறதே?


திட்டமிட்டுப் பரப்பப்படும் வதந்தி.

@பொ.பாலாஜிகணேஷ், கோவிலாம்பூண்டி

மத்திய அரசை எதிர்க்கும் துணிச்சல் அ.தி.மு.க-வுக்கு வந்து விட்டதாக நினைக்கிறீர்களா?


அது இட்லி என்று சொன் னால், சட்னிகூட நம்பாதே!

@ப.மணிகண்டபிரபு, திருப்பூர்.

விஷப்பரீட்சை என்றால் என்ன?


அதுதான் அரசியல் களத்தில் நிறைய பேர் தற்போது செய்து கொண்டிருக்கிறார்களே!

ச.புகழேந்தி, மதுரை-14.
‘லோக்ஆயுக்தா’ சட்டம் வெறும் ‘காகிதப்புலி’ என்று மு.க.ஸ்டாலின் விமர்சித்திருப்பது சரிதானா?


‘காகிதப்புலி’ என்று சொல்லி யிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். அது வெறும் காகிதம் மட்டுமே!

சா.சொக்கலிங்க ஆதித்தன், ரோஸ்மியாபுரம்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன், தெலங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் ஆகிவிட்டாரே?


ம்... காங்கிரஸ்கூட நன்றாக ‘ஆட்டம்’ காட்டுகிறது!

கழுகார் பதில்கள்! - லோக் ஆயுக்தா... வெறும் காகிதம்!

ச.நா.தர்மலிங்கம், சத்தியமங்கலம்.
‘ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து 2021-ம் ஆண்டு விண்வெளிக்கு மனிதனை அனுப்புவோம்’ என்று இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளாரே?


இந்தியாவை உலகுக்கே எடுத்துக்காட்டும் நல்ல முயற்சி. அதேசமயம், வீதிகளில் வாழும் மனிதர்களை வீடுகளில் வாழவைப்போம் என்று கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாகச் சொல்லிக்கொண்டிருக்கிறோம் என்பதையும் மறந்துவிடக் கூடாது. 

வண்ணை கணேசன், சென்னை-110.

கொலுசுகளை அணிந்து வந்தால், மாணவர்கள் கவனச் சிதறல் ஏற்படும் என்று கல்வி அமைச்சர் செங்கோட்டை யன் கூறியுள்ளாரே?


முன்அனுபவமாக இருக்குமோ!

அ.ச.நாராயணன், பாளையங் கோட்டை.
தமிழக விவசாயிகளின் தலைநகர் நிர்வாணப் போராட்டம் பற்றி?


கட்டியிருக்கும் கோவணமும் களவாடப்படும் நிலையில்தான் பெரும்பாலான விவசாயிகள் இருக்கிறார்கள் என்பதில் துளியும் சந்தேகமில்லை. அதற்காக, வீதிகளில் நிர்வாண கோலத்துடன் போராடி நம்மை ஏன் அவமானப்படுத்திக் கொள்ள வேண்டும். நம்மை மதிக்காதவர்கள், நம் முதுகில் குத்துபவர்களை அவமானப் படுத்தும் வகையில் அல்லவா போராட்டங்கள் இருக்க வேண்டும்!

கழுகார் பதில்கள்! - லோக் ஆயுக்தா... வெறும் காகிதம்!@இரா.கணேசன், பாலக்கோடு.
சில வழக்குகளில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி மற்றும் வெளியாட் களின் தலையீடுகள் இருந்தன எனத் தற்போது ஓய்வுபெற்றிருக்கும் நீதிபதி குரியன் ஜோசப் தெரிவித்துள்ளாரே?


தலையீடு இருந்தபோதே இவர் பதவி விலகி யிருந்தால், இவர் சொல்வதிலிருக்கும் உண்மை உலகையே அதிர வைத்திருந்திருக்கும். நீதி வென்றிருக்கும்!
ஆ.ராஜசேகரன், நன்னிலம்.

2.0 படத்தில் ‘செல்போன் பொண்டாட்டி மாதிரி... இருந்தாலும் தொல்லை, இல்லாவிட்டாலும் தொல்லை’ என்றெல்லாம் டயலாக் வருகிறது. இதையெல்லாம் சென்ஸார் போர்டு எப்படி அனுமதிக்கிறது?

இதைவிட இன்னும் கேவல மான விஷயங்களை யெல்லாம் அனுமதிப்பவர்களும் சென்சார் போர்டில் உறுப்பினர் களாக உள்ளனர். அவர்களிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்.

@வெங்கடேசன் கன்னியப்பன்.
செல்போன் டவரால் சிட்டுக் குருவி இனமே அருகிவிட்டது என்கிறார்கள். அதேபோல, கொசுவை ஒழிக்க ஏதாவது டவர் வருமா கழுகாரே?


3.0 எடுப்பதற்கு அருமையான கதைக் கருவைக் கண்டுபிடித்து விட்டீர்களே... அப்புறம் அந்தக் காப்பிரைட் ஜாக்கிரதை!

உமரி பொ.கணேசன், மும்பை-37.
அரசியலில் கூட்டணி, தோழமை என்ன வித்தியாசம்?

கூட்டு, பொரியல்!

கி.தா.துரைசாமி, மேட்டுப்பாளையம்.

இந்து மதக்கடவுள்களையும் சாதிப் பிரிவுகளின்கீழ் கொண்டு வந்துவிட்டார்களே பி.ஜே.பி-யினர்?


அவர்களை அந்த அனுமன் பார்த்துக்கொள்வார்.

 கேள்விகள் அனுப்ப  வேண்டிய முகவரி: 
கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன்,
757, அண்ணா சாலை, சென்னை- 600 002
kalugu@vikatan.com என்ற
இமெயிலுக்கும் அனுப்பலாம்!