Published:Updated:

சிபிஐ அறிக்கை திருத்தப்பட்ட விவகாரம்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

சிபிஐ அறிக்கை திருத்தப்பட்ட விவகாரம்: மத்திய அரசுக்கு  உச்ச நீதிமன்றம் கண்டனம்
சிபிஐ அறிக்கை திருத்தப்பட்ட விவகாரம்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்
சிபிஐ அறிக்கை திருத்தப்பட்ட விவகாரம்: மத்திய அரசுக்கு  உச்ச நீதிமன்றம் கண்டனம்

புதுடெல்லி: நிலக்கரி ஊழல் தொடர்பான சிபிஐ விசாரணை அறிக்கையை சட்ட அமைச்சர் திருத்தியதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், சிபிஐ-யை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்காவிட்டால் நாங்கள் தலையிட வேண்டியது வரும் என மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், இவ்வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கையை பிரதமர் அலுவலகமும், சட்டத்துறை அமைச்சர் அஸ்வினிகுமாரும் பார்வையிட்டு திருத்தம் செய்ததாக தெரிவித்திருந்தது.

இது கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இவ்விவகாரத்தை மையமாக வைத்துதான் பிரதமரும், சட்ட அமைச்சரும் பதவி விலக வேண்டும் என பா.ஜனதா வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில் இவ்வழக்கு உச்ச நீதிமன்றத்தில்  நீதிபதி ஆர்.எம். லோதா தலைமையிலான அமர்வு முன்னர் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது  நிலக்கரி ஊழல் தொடர்பான சிபிஐ விசாரணை அறிக்கையை சட்ட அமைச்சர் திருத்தியதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், சிபிஐ-யின் விசாரணை அறிக்கையை சட்ட அமைச்சர் பார்வையிடலாமே தவிர அதில் தலையிட முடியாது என்று அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

##~~##
மேலும் நிலக்கரி சுரங்க முறைகேடு தொடர்பான சிபிஐ-யின் விசாரணை அறிக்கையை யாரிடமும் பகிர்ந்துகொள்ளவில்லை என்றும், அதில் என்ன இருக்கிறது என்பதே தங்களுக்கு தெரியாது என்றும் அட்டார்னி ஜெனரல் ஜி.இ. வாஹன்வதியும், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஹரேன் ராவல் ஆகியோர் முன்பு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருந்ததை குறிப்பிட்ட நீதிபதிகள், பொய்யான தகவலை தெரிவித்து உச்ச நீதிமன்றத்தை தவறாக வழிநடத்தியதாக கடும் கண்டனம் தெரிவித்தனர்.
மேலும் சிபிஐ- அமைப்பையும் கடுமையாக சாடிய நீதிபதிகள், கூண்டுக்கிளி போல் சிபிஐ, தனது எஜமானர்கள் என்ன சொல்கிறார்களோ அதனையே திருப்பிச் சொல்வதாகவும், இனியும் சிபிஐ அமைப்பை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்காவிட்டால், உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டியது வரும் என்றும் மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.