Published:Updated:

கர்நாடக தேர்தல் வெற்றி ராகுலையே சாரும்: மன்மோகன் சிங் புகழாரம்

கர்நாடக தேர்தல் வெற்றி ராகுலையே சாரும்: மன்மோகன் சிங் புகழாரம்
கர்நாடக தேர்தல் வெற்றி ராகுலையே சாரும்: மன்மோகன் சிங் புகழாரம்
கர்நாடக தேர்தல் வெற்றி ராகுலையே சாரும்: மன்மோகன் சிங் புகழாரம்

புதுடெல்லி: கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருப்பதற்கு ராகுல் காந்தியின் கடின உழைப்பே காரணம் என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கூறிய அவர், "கர்நாடகத்தில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு கடினமாக உழைத்து, காங்கிரஸ் கட்சிக்கு ராகுல் தான் முன்னிலை வசித்தார். இந்த வெற்றிக்காக கர்நாடகாவில் சிறப்பாக பணியாற்றிய காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.பா.ஜனதாவின் கொள்கைகளை மக்கள் நிராகரித்துள்ளனர் " என்றார்.

சோனியா காந்தி

##~~##
கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது என்று அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.